மணல் அகழ்வு: டிப்பர் பறிமுதல்; சாரதி கைது

அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட வளலாய் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி, சிவப்பு மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதியையும் அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று (09) அதிகாலை டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டது. அத்துடன், மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி மற்றும் சவால் என்பனவும் கைப்பற்றப்பட்டன. அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் டிப்பர் வாகனம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோகம்

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு 12,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதென, இன்று (09) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் சுமார் 36 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட பாரிய நீர்ப்பாசனக் குளமான  இரணைமடுக் குளத்தில் தற்போது 30 அடி 2 அங்குல தண்ணீர் மாத்திரமே உள்ளது.

பிறழ்வுகளை எழுத்தாளர்களின் கலகமாக சுத்துமாத்து விடும் சமூகப் பொறுக்கிகளின் போலிமையை தோலுரிக்கும் பதிவு இது.

(Charu Ravichandran)
// சமீபமாக முகநூல் பயன்பாட்டிலிருந்து விலகியே இருந்தாலும், எழுத்தாளர் கோணங்கியின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து முன்பே நான் அறிந்திருந்தும் இப்பொழுது அமைதி காப்பது சரியாக இருக்காது என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.

ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா?

(ச.சேகர்)

அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த செய்தி உண்மையா?

இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து உள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி  தெரிவித்தார். மேலும், இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளதாக கூறினால் போதாது அதனை நடைமுறையில் காட்ட வேண்டும் எனவும் லியனாராச்சி தெரிவித்தார்.

மஹிந்தவுக்கான பயணத்தடை நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏப்ரல் 20 முதல் 30 வரை விலக்கிக் கொண்டது. தென்கொரியாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிலையில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (07) நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.  அரசாங்கம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது.

சமூக நல்லிணக்கத்துக்காக இணைந்த இளைஞர்கள்

சமூக நல்லிணக்கத்துக்காக இணைந்த இளைஞர்கள் சிலர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிலையத்துக்கு ஒருநாள் கள விஜயத்தை அண்மையில் மேற்கொண்டனர். 
GCERF HELVETAS நிதியுதவியுடன், GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நல்லிணக்க விஜயம் இடம்பெற்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி: வவுனியாவில் சோகம்

வவுனியா குட்செட்வீதி,உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று (07) மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.