யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு – பகுதி 2 |

யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு – பகுதி 2 | யாழ்ப்பாணத்துச் சாதியம் | ஆங்கில மூலம் : மைக்கல் பாங்ஸ் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு
தஞ்சாவூருக்கும் யாழ்ப்பாணத்திற்கும் சாதிக் கட்டமைப்பில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. யாழ்ப்பாணக் கிராமங்களின் கட்டமைப்பு என்னும் விடயம் பற்றிய இப்பகுதியில், இவ் வேறுபாடுகள் ஒப்பீட்டு முறையில் சுட்டப்படும். யாழ்ப்பாணக் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பு (INTERNAL ORGANISATION) தஞ்சாவூரின் கிராமங்களின் உள்ளக ஒழுங்கமைப்பிலிருந்து வேறுபட்டது.

கனடாவில் அமைச்சராகிய இலங்கையர்

இலங்கையில் பிறந்த கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவருமான ஆனந்த சங்கரி அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணசபை முறை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கானது மாத்திரமல்ல முழு நாட்டுக்குமானது என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூர் வன்முறை

திமுக போராட்டம்!மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றிய, மாநில பாஜக அரசு களைக் கண்டித்தும் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களில் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதி தீவிர வலதுசாரிகளை நிராகரித்த ஸ்பெயின் மக்கள்! நம்பிக்கை தரும் ஒரே தலைவர்

அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்று பல்வேறு கணிப்புகள் தெரிவித்தன. அந்தக் கணிப்புகளில் ஒரேயொரு தலைவர் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார். தற்போதைய அரசில் துணைப் பிரதமராகவும், ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவருமான யோலண்டா டியாஸ் மட்டும்தான் மக்கள் நம்பிக்கையைப் பெறுபவராக இருந்தார்.

அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது. பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன்.

யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு – பகுதி 1

யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள் | ஆங்கில மூலம் : மைக்கல் பாங்ஸ் | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம் மைக்கல் பாங்ஸ் ஆய்வு குறித்த ஓர் அறிமுகம்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ரினிட்டிக் கல்லூரியின் மாணவராக இருந்த போது மைக்கல் பாங்ஸ் (Michael Banks) 1950களின் முற்பகுதியில் கள ஆய்வு வேலைக்காக யாழ்ப்பாணம் வந்தார். இவர் தம் ஆய்விற்கான களப்பணியில் ஒரு வருடம் சிறுப்பிட்டி என்ற கிராமத்திலும் ஆறுமாதங்கள் கிளிநொச்சியிலும் செலவிட்டார். யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பு (The social organization of Jaffna Tamils) என்னும் பெயரில் இவரது கலாநிதிப் பட்டப்படிப்பிற்கான ஆய்வினை 1957இல் சமர்ப்பித்தார். இவ்வாய்வேடு நூலாகப் பிரசுரிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் கொழும்பு சொகுசு ரயில்

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்
யாழ்ப்பாணத்தில் இருந்து நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த ரயில் புறப்படவுள்ளது. இந்த ரயிலின் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

“மேலும் மேம்பட்ட உலகை விரும்புகிறோம்”

(Maniam Shanmugam)

எதற்காக புரட்சியை மேற்கொண்டோமோ அதை நோக்கிய பாதையில் நிகரகுவா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியை நடத் திய தலைவர்களில் ஒருவருமான டேனியல் ஓர்டேகா கூறியுள்ளார். அமெரிக்க ஆதரவுடன் நிகரகுவாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த அனஸ்டேசியோ சோமோசாவின் ஆட்சிக்கு எதிராக சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது.