மூடப்படுகின்றது இலங்கைக்கான நோர்வே தூதரகம்

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மணிப்பூரில் அட்டகாசம் இன்னுமே ஓயவில்லை

மணிப்பூரில் கடந்த மே-3 ஆம் திகதி நடந்த பழங்குடியின ஒற்றுமை யாத்திரையில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இனக்கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டும், பொலிஸார் நடவடிக்கை எடுக்காதது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுமார் 10,000 தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரம் கட்: 22ஆவது திருத்தம் வருகிறது

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது  திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று : ஜூலை 21

365: எகிப்தின் அலெக்ஸான்ட்ரியாவை தாக்கிய சுனாமியினால் சுமார் 50,000 பேர் பலி.

1969: அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரானார். அவரைத் தொடர்ந்து எட்வின் அல்ட்ரினும் சந்திரனில் இறங்கினார்.

1977: நான்கு நான் லிபிய – எகிப்து யுத்தம் ஆரம்பம்

1983: உலகின் மிக குளிர்ந்த காலநிலை -89.2 பாகை செல்சியஸ் அந்தார்ட்டிகாவில் பதிவு செய்யப்பட்டது.

1994: பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவராக டொனி பிளேயர் தெரிவானார்.

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(21) இந்திய  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

வடக்கு,கிழக்கு தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும் – யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் தலைவர் கோசலை வலியுறுத்து!

வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகமெனின் கிழக்கு மக்களையும் முழுமையாக இணைத்து பயணிக்க வேண்டும்- என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பீடத்தின் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் அவலம்

வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண்ணின் வயது சுமார் 20 வயது என்றும் மற்றொரு பெண்ணின் வயது 40 என்றும் கூறப்படுகிறது.இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் மட்டுமே காணப்படுவதாகவும், ஆனால் அந்த கும்பல் 50 வயது பெண் ஒருவரையும் ஆடையை களைய வற்புறுத்தியதாகவும் இந்த பெண்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.