13ஐ அமுல்படுத்துவது அவசியம்: ஜனாதிபதி

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (09) ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார்.

யாழில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் போதைக்கு அடிமையான 33 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, யாழ்.மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. 

பத்மநாபா: ஆயுத வகிபாகம் ……..? அரசியல் வகிபாகம்…..?

(Sebastiyan Eugene)

          ஈழமெங்கும் பல புரட்சிகள் பூத்திருந்த காலம் முற்புதர்களும்  பற்றைக்காடுளும் படுக்கையறையாய் வகிபாகித்த காலம் இன விடுதலையின் கூக்குரல்கள் இளம் சந்ததியெங்கும் இரையோடிப்போயிருந்தது. சந்திகளிலும் சாவடிகளிலும் சாவைச் சந்தித்து சந்தைக்கும் சந்நிதானத்திற்கும் சென்றுகொண்டிந்த தமிழினம் செந்நீரும் கண்ணீருமாய் காடுகளிலும் கரைகளிலும் காவலுக்காய் தனித்திருந்த இனமாய் அரசியல் நீட்சிக்காய் அலைந்துகொண்டிருந்த தருணம். அவதாரங்கள் பலபிறந்த அரசியல் பல பேசின ஆயுதங்கள் சத்தங்கள் எழவும் தொடங்கின. இங்கே பத்மநாபாவின் வகிபாகம் என்ன என்று எழுகிறது அரசியல் போரும் அடிமைக் குரலின் விடுதலைக்கான வகிபாகமும் சுயநிர்ணய அரசியல் உரிமைக்கான தமிழ் மக்களின் ஏக்கமும் நிர்க்கதியாய் அமைந்துவிடக் கூடாது என்பதில் வகிபாகம் ஒன்று அமைந்திருக்கும். இங்கேதான் யார் யாருக்காக போராடுகின்றோம் என்பதும் எதற்காக போராடுகின்றோம் என்பதும் எப்படி போராடுகின்றோம் என்பதும் எழுதப்படாத மௌனத்தின் கொலைகளாகவே அமையக் காரணமாகவும் அமைந்தது தமிழர் அரசியல் உரிமைக்கான வரலாற்றியில் யுகத்தில்   

மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி

மோடி இனப் பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

நிலாவெளியில் போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் நிலவொளி வீதியில் பெரியகுளம் பிரதேசத்தில் உச்சி பிள்ளையார் மலை பகுதியில் தொல்லியல் துறை 2015 ஆண்டு தமது எல்லைகளாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு எதிராகவும், அழிக்கப்பட்ட நாகதம்பிரான் சிலையை மீளமைத்து தருமாறு கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்

மன அழுத்தங்களில் இருந்து மீட்க வீட்டுத்தோட்டம் சிறந்த பரிகாரம்

எமது மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மனஅழுத்தங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே அவர்களால் சரிவரக் கற்றலை மேற்கொள்ள முடியவில்லை. போதை, வன்முறை என்று சமூகப்பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் ஒருசாரார் தற்கொலை முடிவை நோக்கியும் செல்கிறார்கள். இவர்களை மனஅழுத்தங்களில் இருந்து விடுவிக்க வீட்டுத்தோட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவதுதான் சிறந்த பரிகாரமாக அமையும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.

ரூபாய் சரிகிறது

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (07) குறைந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கை மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

நிலவில் எடுத்த முதல் வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் திகதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்தது.

மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு ?

மக்கள், வைத்தியத் துறையை நம்புவதைப் போல, உலகில் வேறு எதையும் நம்புவதில்லை. கண்கண்ட தெய்வங்களாகவே வைத்தியர்கள் பார்க்கப்படுகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட, வைத்தியரை ஒரு கட்டத்தில் நம்பிவிடுகின்றான்.

அதிகளவு ஹெரோயினால் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.