யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய குறித்த மாணவி நேற்று (03) பிற்பகல் கலட்டி பகுதியில் அவர் தங்கியிருந்த விடுதியின் அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், மன்னாரைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்?

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. 

ஹரியானாவில் தொடரும் விஎச்பி கலவரம்!

ஹரியானா மாநிலத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் கும்பல் தூண்டிவிட்ட மதக் கலவரம் புதன்கிழமையன்றும் தொட ர்ந்தது. இது தலைநகர் தில்லிக்கும் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விஎச்பி-யின் மத வன்முறைக்கு, ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், புதனன்று மேலும் ஒருவர் பலி யானார். இதுவரை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 2 போலீசார், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புக்கள் நடத்தும் பேரணிகளால் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று உ.பி, ஹரியானா, தில்லி மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன. தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு குளத்தில் விடப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இத்தாலிக்கு தப்ப முயன்ற யாழ்.தம்பதி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (010 மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில், அடுத்தவார பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி விசேட கூற்​றொன்றை விடுத்து உரையாற்றவுள்ளார்.