போதைப்பொருள் வியாபாரியின் தகவலுக்கமைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சிறு தொகை போதைப்பொருட்களுடன் திங்கட்கிழமை (01)  கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரிகளுக்கு , வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

மழை,  வெள்ளம்,  வறட்சி  உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால்  பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கையிட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொது கழிப்பறை கட்டணம் அதிகரிப்பு

புதிய வரித் திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீர் கட்டணம் அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பொதுக் கழிப்பறைக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாயாக இருந்த கழிவறை கட்டணம் புதிய திருத்தத்தின் கீழ் 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திருத்தப்பணிகள் ஜனவரி 7 ஆரம்பம்

வடக்கு புகையிரதப் பாதையைத் திருத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹாவாயிலிருந்து ஓமந்தை வரை ஒரு பகுதியைத் திருத்தும் பணிகள் ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்க நடவடிக்கை

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் உத்தரவாதம் மற்றும் நிலைபேறான விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு  கடந்த வெள்ளிக்கிழமை (29) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்றது. 

இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.