தமிழ் நாடு: பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை

பிராமணனாகப் பிறந்த நான் என் மனசாட்சிப்படி உளப்பூர்வமாக இதை எழுதியுள்ளேன். மனசாட்சியின் குரலுக்குச் செவி மடுக்கும் பிராமணர்கள் எல்லோரும் இப்படித்தான் எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.

சீனா vs இந்தியா: இலங்கையின் உண்மையான நண்பன் யார்?


(ரஞ்சன் அருண் பிரசாத்)(பிபிசி தமிழுக்காக)

சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதுமாத்திரமன்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது.

பயணிக்கும் சுயஸ் கால்வாயை முடக்கிய கப்பல்

சுயஸ் கால்வாயை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் முடக்கிய பாரிய கொள்கலன் கப்பலொன்றானது இறுதியாக சுயஸ் கால்வாயை விட்டு வெளியேறுகின்றது. கப்பலின் உரிமையாளர்கள், காப்புறுதியாளர்களுடன் இழப்பீட்டு ஒப்பந்தம் ஒன்றை எகிப்து கைச்சாத்திட்டத்தையடுத்தே குறித்த கப்பல் வெளியேறுகிறது. கப்பலானது மூன்று மாதங்களாக கால்வாய் நகரமான இஸ்மைலியா நகரத்துக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்காத நிலையில், 550 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை எகிப்து கோரியிருந்தது.

வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி

ஹாவா ‘ஆவா’வானதா அல்லது ஆவாயன் ‘ஆவா’வானதா?

கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார், மூவரைக் கைது செய்திருந்தனர்.

அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு

(ப. பிறன்சியா டிக்சி)

“சிறுமியைப் பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை செய்த நபர் கைது”

கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டின் அனேக அனேக ஊடகங்களில் அவ்வப்போது பேசப்பட்ட செய்தியொன்று, நாளடைவில் தலைப்புச் செய்தியாகும் அளவுக்குப் பிரபல்யமானது.

சட்ட விரோத மணல் அகழ்வு; 13 படகுகளுடன் மூவர் சிக்கினர்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி, ஈச்சந்தீவுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட 13 படகுகள், பொலிஸாரால் நேற்று (09) கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

தற்போது கணிசமான சதவீதமானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்துள்ள ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ, சனத்தொகையில் பெருமளவானோருக்கு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.   

பெசிலிடம் இருந்தவை மஹிந்தவுக்கு மாற்றம்

நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பெசில் ராஜபக்‌ஷவுக்கு கீழிருந்த நிறுவனங்கள் சில, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழிருக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான, சட்ட கட்டமைப்பை திருத்தி சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பெசில் ராஜபக்‌ஷவும், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், நேற்று முன்தினம் (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துக்கு எதிராக யாழில் இன்று கவனயீர்ப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில், இன்று (10) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படுமென புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் தலைவர் சி.க.செந்தில்வேல் அறிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.