வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை ஆரம்பம்

கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

பாதை ஒன்று; பயணங்கள் வேறுவேறு

(என்.கே. அஷோக்பரன்)
தமிழர்களும் அடுத்த தேர்தலும் [பகுதி-02]

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியலில், வியத்தகு விடயம் ஒன்றிருக்கிறது. இங்கு ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட அரசியல் கட்சிகள் எதுவுமே, சித்தாந்த ரீதியில் தமிழர்களது அடிப்படை அபிலாசைகள் விடயத்தில், திம்புக் கோட்பாடுகளை மறுப்பதில்லை.

வடக்கு கொள்ளையர்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள், வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 5 பேர், நேற்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளனரென்று, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக உயிரை துச்சமெனக் கருதி நெருப்புக்குள் புகுந்த இந்து நபர் : மரிக்காத மனிதம்!


இந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிறார். வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“போராட்டத் திலகங்கள்”

பெப்ரவரி மாதம் 27ம் 28ம் திகதிகளை மலையக மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய ஒரு துர்பாக்கியம், இது இன்றைய தலைமுறைகளில் ஒரு சிலரைத்தவிரப் பலருக்குத் தெரியாது.

தில்லி எரிப்பு: மோடி, ட்ரம் ஆரத்தழுவல்

(சாகரன்)

உலகில் உள்ள இரண்டு தலைவர்களில் முஸ்லீம்கள் மீது அதிகம் வெறுப்புள்ள தலைவர்கள் இந்;தியாவின் அகமதாபாத்
இல் பெப்ரவரி 24, 2020 ல் சந்திப்பை நடாத்தியுள்ளனர். அதுவும் ஏழை மக்களின் குடியிருப்புக்களை மறைக்க மதில் கட்டி இதன் மறுவளத்தில் இந்தக் கோலாகல சந்திப்பு நடைபெற்றுள்ளது.

1000 ரூபாய் சம்பளம்: மார்ச் 1 முதல் வழங்கப்படும்

தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் ​1 முதல் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மேற்படி சம்பள அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தால் கைசாத்திடப்படவிருந்த முத்தரப்பு ஒப்பந்தம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.