சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (04) முற்பகல், தேர்தல்கள் செயலகத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச சார்பில் “அன்னம்” சின்னத்துக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பணம் செலுத்தினார் துமிந்த நாகமுவ

முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவ, இன்று (04) தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுள்ளார். இதன்போது, முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, கோட்டாவுக்குத் தடையில்லை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்​முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவால், சற்று முன்னர் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.

‘மொட்டினை விட்டுகொடுக்காவிட்டால் சனிக்கிழமை முக்கிய தீர்மானம்’

தாமரை மொட்டினை தவிர வேறு பொதுச்சின்னத்தின் கீழ், புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் முன்வராவிட்டால், தமது தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே குறித்த இருவருக்கும் இன்று (30) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில்12 பேர் போட்டி

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 10 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கனடாவின் நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வெளிநாட்டுத் தலையீடு

(ஜனகன் முத்துக்குமார்)

கனடாவின் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நிலையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தது என அறியப்படுகின்றமை போல, கனேடியத் தேர்தலிலும் வெளிநாட்டு குறுக்கீடு, உள்நாட்டு அரசியல் மற்றும் கட்சி கொள்கைகள் மற்றும் அரசியலுள் உட்புகுந்து தவறான – அல்லது முறையற்ற வகையில் ஆனால், தேர்தலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய இணையத்தள தகவல் தாக்குதல்களை மேற்கொள்ளல் தொடர்பில் கனேடிய மக்களும், ஊடகங்களும், கட்சிகளும், கனேடிய பாதுகாப்பு துறையும் மிகவும் கவனமாக இருக்கின்றமை, ஜனநாயகத்தை பிரதிபலிப்பதற்கான தேர்தல் தொடர்பில் மக்கள் ஏற்கெனவே விழிப்புடன் இருப்பதை காட்டுகின்றது.

மொட்டுடன் இணையாதிருக்க தீர்மானம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அநுராதபுரத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கூறியிருக்கின்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னடைய செய்வதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

‘7ஆம் திகதிக்கு முன்னர் இடதுசாரி அணியினர் மொட்டுடன் இணைவர்’

எதிர்வரும் மாதம் 7ஆம் திகதியாகும்போது, அனைத்து இடதுசாரி அணிகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் மகேஸ் சேனநாயக்க போட்டியிடவுள்ளார். பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இன்று (29) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்த மாநாட்டிலேயே, தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான மகேஸ்சேனாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.