இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம் – ஃபிடெல் காஸ்ட்ரோ

“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்” என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடெல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியை தெரிவித்திருக்கிறது.

(“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம் – ஃபிடெல் காஸ்ட்ரோ” தொடர்ந்து வாசிக்க…)

மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்

(அ.மார்க்ஸ்)

நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற 19,716 கோடி ரூபாய் அளவிலான ஊழல் ஒன்றை CAG யின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்ற மார்ச் 31 அன்று இந்த அறிக்கை குஜராத் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபோதும் இது உரிய அளவில் கவனம் பெறவில்லை. திங்கள் கிழமை ஆங்கில இந்து நாளிதழில் இது குறித்த ஒரு விரிவான கட்டுரையை காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் எழுதியுள்ளார்.

(“மோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு13)

அய்யா அம்மா வீட்டில் எவ்வளவோ கஷ்டங்கள் வந்தபோதும் அண்ணன் பற்குணத்தின் பணத்தேவைகளை எப்படியோ கடன்பட்டு சமாளித்தனர்.அய்யா ஊரில் இல்லாதபோது ஏதாவது பணம் தேவையான நேரங்களில் எமது உள்ளூரில் சிறிய பலசரக்குக் கடை நடாத்தி வந்த வேலன் என்கிற வேலப்பா அவசர தேவைகளுக்கு கை கொடுப்பார்.இவர் தன் பொருட்களுக்கு ஒரு சில சதங்களை ஆதாயமாக வைத்து வியாபாரம் செய்தபோதும் ஊரில் சிலர் விளக்கமின்றி கொள்ளை வேலன் என்பார்கள்.ஆனால் அவர் நல்ல மனிதர்.நாணயமானவர்.எங்களுக்கு உணவுத்தேவைகளுக்கு கூட கடன் தந்தவர்.ஒரு நாளும் கடனை திருப்பிக் கேட்டு தொல்லை தந்தது இல்லை.

(“பற்குணம்(பதிவு13)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 12)

எமது பெரிய அண்ணன் அப்போது றத்தோட்டையில் ஆசிரியராக பணிபுரிந்தார்.எனவே அண்ணன் கண்டிப்பாக வருவார் என நம்பினார்.அவர் வரவே இல்லை.இதனிடையே பற்குணத்தின் சங்கடமான நிலைமையைப் புரிந்த சக மாணவ நண்பர்கள் தங்களிடமுள்ள மீதிப் பணங்களைச் சேர்த்து அவருக்குரிய பதிவுகளை செய்ய உதவினார்கள் .அன்றைய கால மாணவர்களின் புரிந்துணர்வு அப்படி இருந்தது.

(“பற்குணம் (பதிவு 12)” தொடர்ந்து வாசிக்க…)

பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!

பெரு நிறுவனங்கள் முதல் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் வரை ஊழியர்களின் நிலைமை மிக மோசம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நான் பணிபுரிந்த ‘ஹப்ஸ்பாட்’ எனும் மென்பொருள் நிறுவனத்தில், ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவதைப் ‘பட்டம் பெறுதல்’ என்று அழைப்பார்கள். அணியினர் அனைவருக்கும் பாஸிடமிருந்து குதூகலமான மின்னஞ்சல் ஒன்று வரும். “அன்புள்ள அணியினருக்கு, நம்முடன் பணிபுரிந்த ‘இன்னார்’ பட்டம் பெற்றுவிட்டார் என்பதைத் தெரிவிக்கவே இந்த மின்னஞ்சல்.

(“பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!” தொடர்ந்து வாசிக்க…)

முதலாளிக்கும் மூளை இருக்கின்றது

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் பத்துலட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர்.

(“முதலாளிக்கும் மூளை இருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு 11)

எங்கள் பெரிய அண்ணன் திருமணமாகி அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.எங்கள் குடும்பத்தில் அம்மா வழியிலும் சரி,அய்யா வழியிலும் குடும்பத்துக்கு ஒரு பெண்பிள்ளைதான்.ஆனால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஆண்பிள்ளைகள் .அந்த பெண்பிள்ளை வெற்றிடத்தைப் மாமா மகள் ராணி என்பவள் நிரப்பினாள்.இதன் பின் எங்கள் குடும்ப வாரிசாக பெண் பிள்ளையாக அண்ணன் மகள் பிறந்தாள்.இவள் மீது பற்குணம் மிகுந்த அன்பு செலுத்தினார்.அதே போலவே அவளும் சித்தப்பா என மிகுந்த பாசம் வைத்திருந்தாள்.

(“பற்குணம்(பதிவு 11)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு-10)

பற்குணம் படிக்கப் போகும் காலத்தில் வழியில் சிலர் வழிமறித்து வம்பு சண்டைக்கு இழுத்தவரகளும் உண்டு.கேலி கிண்டல் பண்ணியவர்களும் உண்டு.எங்கள் குடும்ப வறுமைக்குள் இவர்களுக்கு படிப்பு தேவையா எனக் கேட்டவர்களும் உண்டு.அவர்களே இப்போது வியப்போடு ஆச்சரியப்பட்டு அண்ணனைப் பாராட்டினார்கள். அம்மா ஆஸ்பத்திரியில் இருந்த காலங்களில் அம்மாவிடம் சில நகைகள் இருந்தன.அவற்றை விற்றே வாழவேண்டிய சூழ்நிலையில் எங்கள் குடும்பம் இருந்தது. நிலைமை புரிந்தாலும் அம்மாவுக்கு அதில் உடன்பாடில்லை .அய்யாவிடம் இதை தடுக்க முயன்றார்.அப்போது அய்யா சொன்னாராம் பிள்ளைகளின் படிப்புக்கும் சாப்பாட்டுக்கும் உதவாத நகையுன் பணமும் எதுக்கு என்றாராம்.

(“பற்குணம்(பதிவு-10)” தொடர்ந்து வாசிக்க…)

எழுச்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் வித்திட்ட 1971 கிளர்ச்சி

வடக்கு – கிழக்கு மாகாணங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள், போரின் போது உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களை, வருடத்தில் இரண்டு தினங்களில் நினைவுகூருகிறார்கள். போரின் காரணமாக முதன்முதலாக சங்கர் என்னும் புலி உறுப்பினர் கொல்லப்பட்ட நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாளாகவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகவும் பெயரிடப்பட்டு, அவ்வாறு நினைவுகூரப்படுகிறது.

(“எழுச்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் வித்திட்ட 1971 கிளர்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம்(பதிவு9)

அண்ணன் வசதிக் கட்டணம் கட்ட தாமதம் ஆனதால் பள்ளிக்கூடம் போகவில்லை .இதே நேரம் அய்யாவுடன் கதைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் எமது குடும்பத்தின் நிலையை விளக்க அஅதிபரைத் சந்திக்கப் போயிருந்தார்.அதிபரைப் பொறுத்தவரை அண்ணன் பற்குணம் ஒரு குழப்படிகார மாணவன் என்பதே தெரியும். குடும்ப சூழல் தெரியாது.அந்த இன்ஸ்பெக்டர் சொன்னபின்பே அவருக்கு அண்ணன் அடிக்கடி பாடசாலை வராத காரணங்கள் புரிந்தது.ஆனாலும் அண்ணனின் குழப்படிகளையும் அவருடன் பகிர்ந்தார்.அவர் அதில் சிக்காமல் தப்புவதிலும் கெட்டிக்காரன் எனவும் சொன்னார்.

(“பற்குணம்(பதிவு9)” தொடர்ந்து வாசிக்க…)