இலங்கையின் சுதந்திர(ம்) தினம்

(சாகரன்)

இலங்கையின் சுதந்திர தினம் இன்று. (பிரித்தானிய) காலணியாதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தினம் இன்று. இத் தினத்தையே நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றோம். எமக்கு சுதந்திரம் கிடைத்து 68 வருடங்கள் ஆகின்றன என்ற கணக்குகள் வேறு எம்மிடம் உள்ளன. இந்தியாவின் தேசிய எழுச்சி பிரித்தானிய காலணியாதிக்கவாதிகளுக்கு எதிராக அகிம்சை வழியிலும், ஆயுதப் போராட்ட வடிவத்திலும் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தப்பட்ட போராட்டம். இந்த போராட்டத்தின் உந்துதல் இலங்கையிலும் இருந்தது. பிரித்தானியர்கள் நவ காலணித்துவ சுரண்டல் முறமைக்கு தம்மை மாற்றிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது இலங்கையையும் விட்டு வெளியேறினர். மற்றையபடி இலங்கை தனது சுதந்திரத்திற்காக இந்தியா அளவிற்கு போராடவில்லை. இதன் அர்த்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்தவர்களின் தியாகங்கள் குறைந்தவை என்பதல்ல. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் தாம் இரண்டாம் தர பிரஜைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்ற உணர்வலைகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் பிரித்தானியரிடம் இருந்து கிடைத்த இலங்கையின் சுதந்திரம் தமக்கான சுதந்திரம் என்று இவர்களால் உணரப்படாமல் தள்ளிப்போனது. இதுவே இன்று வரை சுதந்திர தினம் சிறுபான்மை மக்களால் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

(“இலங்கையின் சுதந்திர(ம்) தினம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!

எம்.ரி.டிவோக்கஸ் நிறுவனம் மத்திய மாகாண அரசுகளின் துணையுடன் நச்சாக்கிய சுன்னாகம் நீர் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் கடந்த திங்கள் 18/01/2016 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீர் நஞ்சானதை ஏற்றுக்கொண்ட மல்லாகம் நீதிமன்றம், இறுதித் தீர்வு கிடைக்கும் வரை பாதிக்கப்பப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. வடமாகாண சபை உருவாக்கிய போலி நிபுணர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து நீர் வழங்கல் நிறுத்தப்பட்டடுள்ளது.

(“மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!” தொடர்ந்து வாசிக்க…)

ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் மட்டுமன்றி அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் தமது உரிமைகளுக்காக அணிதிரளவேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்

கடந்த வருடம் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்தக் கொடுப்பனவான ரூபா.6000 ற்கு மேலதிகமாக ஊவா மாகாணத்தில் மாத்திரம் மேலும் ரூபா.10,000 யும் சேர்த்து ரூபா. 16,000 ஆக சில மாதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை அம்மாகாண கல்வி அமைச்சு நிறுத்தியுள்ளது. அத்தோடு தற்போது வழங்கப்படும் ரூபா. 6000 இல் இருந்து மேலதிகமாக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை மாதம் ரூபா. 2000 படி மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் இலாபம் கருதி அப்போதைய ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களினால் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

(“ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள் மட்டுமன்றி அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் தமது உரிமைகளுக்காக அணிதிரளவேண்டும் – மக்கள் ஆசிரியர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)