தோழர் பொன் கந்தையா

(Sinnakuddy Thasan) 

தோழர் பொன் கந்தையா அவர்கள் இலங்கையின் தமிழ் பகுதியிலிருந்து தெரிவு செய்த முதலாவது கம்னீயூஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 50 களில் பருத்தித்துறை தொகுதியிலிருந்து தெரிவாகி யிருந்தார்
(அப்பொழுது பருத்தித்திறை தொகுதி உடுப்பிட்டி தொகுதியையும் உள்ளடக்கி இருந்தது)

தோழர். V A கந்தசாமி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு தினம்…

சாதாரண சுருட்டு தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டவர் தோழர் வீ ஏ கந்தசாமி அவர்கள்.

நவம்பர் 15ம் தேதி

இலங்கை சுதந்திரம் பெற்றது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4. அதே ஆண்டின் நவம்பர் 15ம் தேதி நாட்டின் ஒரு பகுதியான மலையகத் தமிழர்களுக்கு அது ஒரு கருநாளாக மாறியது. அன்று இலங்கை நாடாளுமன்றம் Ceylon Citizenship Act No.18 of 1948 எனப்படும் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது.

சபிய்யாவின் தங்கப் பதக்கங்களும் ஆடை சர்ச்சையும்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

இந்தியாவில் ஜார்காந்த மாநிலத்தின் தலைநகரான ரான்சியில் நடைபெற்ற தெற்காசியத் தடகள போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை வீரர்கள் வீராங்கனைகள் தமது நாட்டுக்காக 16 தங்கப் பதக்கங்களையும் 14 வெள்ளிப் பதக்கங்களையும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

கஞ்சா சாகுபடியும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமும்

முழு நாடும் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருளுக்கு எதிரான திட்டம் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில், முதலீட்டு வலயங்களில் கஞ்சா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்து. போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, இந்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவும் அறிவித்துள்ளது. 

மொழி அப்படின்னா என்ன?

மொழி அப்படின்னா என்ன? அது வெறும் தகவல் தொடர்பு கருவி மட்டுந்தானா? அத தாண்டி ஒரு மொழியோட சிறப்பு என்னவா இருக்க முடியும்? இந்தக்கேள்வி பலமுறை எனக்குள்ள எழுந்திருக்கு. அதுக்கான பதில் ரொம்ப தெளிவா நேத்து எனக்கு கிடைச்சது.

“ஓட்டத்தில் ஒளிர்ந்த ஒளி”

அப்துல் அஸீஸ் அஸ்மா,
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்.பல்கலைக்கழகம்

இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் வீராங்கனை, தன்னுடைய அதிரடியான வேகம் மற்றும் விடாமுயற்சியால் இலங்கையின் விளையாட்டு உலகில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

இலங்கையின் மக்களின் மரபணு வரலாறு — நம்மில் யார் எங்கிருந்து வந்தோம்?

(Sarjun Mahroof)

நம் உடலில் எழுதப்பட்ட வரலாறு

நாம் அனைவரும் “நான் தமிழன்”, “நான் சிங்களர்”, “நான் முஸ்லிம்” என்று சொல்வோம். ஆனால் உண்மையில் நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மரபணுக்கள் (DNA) நம் அடையாளத்தை இன்னொரு வழியில் விவரிக்கின்றன.

பேரிடர் மேலாண்மை முறையை ஒழுங்கமைக்கவும்

முழு வளிமண்டல மற்றும் வானிலை நிலைமைகளும் சீர்குலைந்துள்ளன. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைக்கால வானிலை வெள்ளம், மண்சரிவு போன்ற நிலைமைகளை உருவாக்கியுள்ளது. 

மாகாண சபை தேர்தலுக்கான வழி தேடல்

(லக்ஸ்மன்)

பாலஸ்தீனத்தில் பரவும் ‘நமது காலத்தில் அமைதி’ என்ற வாசகம் இலங்கையிலும் எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அரசு யுத்தத்தை நடத்தி முள்ளிவாய்க்காலில் அமைதியைப் புதைத்தது. ஆனால், இலங்கையின் அமைதி பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமானது என்றளவிலேயே இருந்து வருகிறது.