ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் மஸ்க்?

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார். அடுத்த மாதத்துக்குள் (மே) டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். ட்ரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்கள் தொகையில் 1/3 பங்கு ஏழைகள்

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மீண்டு வந்தாலும், மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர்  வறுமையில் உள்ளனர் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர் என்று உலக வங்கி கூறுகிறது.

மசூதிக்குள் பௌத்த பக்தர்கள் ஓய்வு

கண்டியில், ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை வழிபடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து, உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் பௌத்த பக்தர்கள் குழு ஓய்வெடுக்கும் காட்சியைக் காண முடிந்தது.

மயோனைஸுக்கு ஓராண்டு தடை

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் தடை விதிப்பதாக மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இயந்திர படகுப்பாதை சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட கோறளை பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திகிலிவெட்டை கிராமத்திற்கான இயந்திர படகு சேவை போக்குவரத்து  மீளத்திருத்தியமைக்கப்பட்டு வியாழக்கிழமை(24) அன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலைமன்னார் மணல் தீடைகளுக்கு சுற்றுலா படகு சேவை

இலங்கை தலைமன்னாரிருந்து இந்திய கடல் எல்லை வரை உள்ள மணல் தீடைகளுக்கு சுற்றுலாப் படகு சேவையை தொடங்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தலைக்கவசத்துடன் நடமாடினால் அதிரடி சோதனை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. 

பஸ் சாரதிகள் ஆபத்தான முறையில் Driving செய்தால்?

பஸ் சாரதிகள் ஆபத்தான முறையில் Driving செய்யும் விடியோக்களை மேற்குறிப்பிட்ட இலக்கங்களுக்கு அனுப்பும்படி பொதுமக்கள் கோரப்படுகின்றனர்.

”ஜனாதிபதி SMS அனுப்பாததால் ரூ.98 மில்லியனை சேமித்துள்ளார்”

இலங்கை ஜனாதிபதியின் வருடாந்திர சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி கூறுகிறார். 

35 ஆண்டுகளில் முதல்முறையாக காஷ்மீரில் முழு அடைப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (23) நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.