7000 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர்

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் குடியுரிமை வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, வீசா காலம் நிறைவடைந்தவர்களும் இந்த 7000 பேரில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தியாகிகள் தினம்

தாயகத்திலும் உலகம் எங்கும் நினைவு கூரப்படும் தியாகிகள் தினம் இவ்வருடம் கனடாவின் பல்வேறு அரசியல் கருத்துடையோரின் சந்திப்பொன்றின் மூலம் நடாத்தப்பட்டது. மனித குல விடிவிற்காக தம்மை அர்பணித்த அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கும் ஒரு நிமிட அஞ்சலியுடன் சந்திப்பு ஆரம்பமானது. சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களின் நினைவுகளை முன்தாங்கியதாக ஆரம்பமான சந்திப்பு கலந்துரையாடல் தற்போதைய இலங்கை அரசியல் சூழலை ஆராய்வது வரை விரிந்து சென்றது. பத்மநாபா போன்ற மகத்தான தலைவர்களின் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவ செயற்பாடுகள், போராடும் சிறுபான்மை மக்களுக்கிடையேயான உறவுகள், மாற்றுக் கருத்தாளர்களிடையேயான ஐக்கிய முன்னணி செயற்பாடுகள் என்பன எந்தளவிற்கு அவர் மறைவின் பின்பு முன்னேற்றம் அடைந்தன என்ற கருத்துக்கள் கேள்வியாக இங்கு எழுப்பப்பட்டது இச் சந்திப்பு கலந்துரையாடலின் சிறப்பாக அமைந்தது. இரு மணிநேரம் வரை நீடித்த இந்த கலந்துரையாடல் தோழர் நாபாவின் சிந்தனைகளை வலுப்படுத்தி மேலும் அவர் பாதையில் நாம் முன்னேற வேண்டிய அவசியத்தை வலியறுத்தி நிறைவு பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மீது செருப்பு வீச்சாம்…

கருணாவுக்கு செங்கம்பளமும் புத்த பிக்குவுக்கு மஞ்சள் துண்டும் விரித்த கல்முனை போராட்டக்காரர்கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது செருப்பினை வீசாதிருந்தால்தான் ஆச்சர்யம்.

29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில்

29ஆவது தியாகிகள் தினம் இன்று லண்டனில் தோழர் சிறாப்பின் தலைமையில் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திருமதி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் விளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் PLOTE, TELO, EPRLF, EPDP ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். தியாகிகள் தினம்- நாம் கடந்து வந்த பாதையும் சந்தித்த முகங்களும் எனும் தொனிப்பொருளில் புகைப்பட கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.

ஜனநாயக சோஷலிசம் என்பது இது தான்:

(Kalai Marx)

உலகம் முழுவதிலும், பொலிவியாவில் மட்டுமே நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுகின்றனர். நாடு முழுவதும் நடக்கும் பொதுத் தேர்தலில் மொத்தம் 52 நீதிபதிகளை மக்கள் ஓட்டுப் போட்டு தெரிவு செய்ய வேண்டும். லத்தீன் அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக, 2011 ம் ஆண்டு நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 125 வேட்பாளர்கள் அதில் போட்டியிட்டனர். அவர்களில் அரைவாசிப் பேர் பெண்கள்.

கனேடிய பாராளுமன்றம் இலங்கை மீது ஐ.நா விசாரணை கோரியது….!!

கனேடிய பாராளுமன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்….!!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனேடிய நாடாளுமன்றம் கேட்டுக்கொள்கிறது என்ற
பிரேரணை கனேடிய நாடாளுமன்றில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தனிநாடு கோரி போரிட்ட ஒரு இனம்….

தனிநாடு கோரி போரிட்ட ஒரு இனம் இன்று ஒரு நகரத்தின் அலகுகளை தரமுயர்த்தப்படல் வேண்டும் என்ற நிலைக்கு சென்று இருக்கின்றது, ஒரு காலத்தில் மாவட்டசபைகள் மட்டுமே அதிகாரமாக தர முடியும் என அப்போது தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த ஜேஆர் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு மாகாணமாக வழங்க முன்வந்தார் அதைவிட அந்த மாகாணத்தை நிர்வகிக்க இந்தியா முதல் கட்டமாக நூறு கோடிகளை வழங்க முன்வந்தது அதைவிட தமிழரின் பாதுகாப்புக்கு தமிழ்த்தேசிய இராணுவம் என்ற ஒன்றை அமைத்தது இந்த இரண்டு விடயங்களையும் முற்றாக புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதன் காரணமாக ஈபிஆர் எல் எப் வடக்கு கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டி ஏற்பட்டது, இதே காலத்தில் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கும் யுத்தம் ஆரம்பித்தது, இந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசாவுடன் புலிகளுக்கு ஏற்பட்ட நட்பும் அதைவிட இந்தியாவை எதிர்த்த பிரேமதாசாவின் கொள்கை பற்றுறுதியாகி பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வாரி வழங்கினார், புலிகளின் எதிர்ப்பும் அதைவிட இலங்கை அரசின் எதிர்ப்பும் இந்தியாவை முகம்சுழிக்க வைத்தது அதைவிட இந்திய இராணுவத்தின் இழப்பு இந்திய இராணுவம் வெளியேறியது அதே காலத்தில் வடக்கு கிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதர் அவர்கள் மாகாணசபையில் தமிழீழ பிரகடனம் செய்துவிட்டு வெளியேறினார், இது முடிந்த கதை, கிடைத்த வாய்ப்புகளை தட்டிக்கழித்துவிட்ட தமிழினம் இன்று முதலில் இருந்து ஆரம்பிக்கின்றது, வரலாறுகள் இப்படித்தான் மாறி மாறி வந்துபோகும் .

(Varathan Krishna)