பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் பாஜக அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறது, பன்னாட்டு கச்சா விலை சரியும் போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் ரூ.10 லட்சம் கோடிகளை வரியாக வசூலித்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “பாஜக அரசு 10,00,000 கோடி வரிகளாக பெட்ரோல்/எல்பிஜி/டீசல் மீது வசூலித்துள்ளது. ஆனால் குடிமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று சாடியுள்ளார்.

(“பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

சொந்த மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து உபி புறப்பட்டார். (“சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.

நேற்று (05.05.2018) மீண்டும் ஒரு 24வயது இளம் பெண் நுண்கடனுக்குப் பலி.  மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நுண்கடன் அரக்கனுக்கு இது 7வது உயிர்ப்பலி.  வந்தாறுமூலையைச் சேர்ந்த டிசாந்தினி என்ற 24வயது இளம்பெண் நுண்கடனால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை “மட்டக்களப்பு இளைஞர் வலையமைப்பு” செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது

நீட் தேர்வு எழுதுவதற்காக
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி
மாணவர் கஸ்தூரி மகாலிங்கம்
தனது தந்தை கிருஷ்ணசாமியுடன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளார்.

(“மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)

கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும், கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்

கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன.

(“கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும், கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலினை இலங்கையில் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக Swiss, Germany, France போன்ற நாடுகளில் அவருடைய புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது.அதுபற்றிய விபரங்கள் பின்பு விபரமாக வெளியிடப்படும் .அவர் தற்சமயம் Germany தங்கியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் 004917675054051 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

தோழர்கள்.

புலிகளுக்குள் ஜனநாயம் முளையில் கிள்ளப்பட்டது

1985 இல் புலிகளின் 3வது பயிற்சி முகாமில் புலிகளின் ஜனநாயக விரோத போக்குகளிற்கு எதிராகவும் சுத்த ராணுவாத கட்டமைப்புக்கு எதிராகவும் கேள்வி கேட்ட போராளி கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் தன் சுய நலத்திற்க்காக கல்யாணம் செய்யக் கூடாது என்ற அமைப்பு விதியினை மாற்றி பிரபாகரன் திருமணம் செய்து கொண்டமைக்கு எதிராகவும் பலர் அதிருப்தி அடைந்து வெளியேறினார்கள். அதில் தயாநிதி (இயக்கப் பெயர் ரு+பன்) – கப்புதூ – நெல்லியடி தன்னுடன் வெளியேறிய பலருடன் சேர்ந்து மீண்டும் செயற்படும் நோக்கில் செயற்பாடுகளை மேற்க் கொண்டார். இவர் வேதாரணியம் சென்ற வேளை பொட்டனால் ரகசியமாக கடத்தப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் வெட்டிக் கொல்லப்பட்டார்.