யாழ். பல்கலை மாணவர் கொலை: பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரையும், இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்.நீதவான் நீதிமன்றம், இன்று (16) உத்தரவிட்டது. உயிரிழந்த இரு மாணவர்களில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரும், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த படுகொலைச் சம்பவம், யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருணாநிதிக்கு மூச்சுத் திணறல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு, ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலை சரி செய்ய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கருணாநிதிக்கு மூச்சுத் திணறல்” தொடர்ந்து வாசிக்க…)

More 1 of 6,715 சம்பளப் பிரச்சினை தொடர்பாக தொழிலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்

இவ்வருடம் கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் விபரமான துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன். தோட்டங்கள் தோரும் அதனை வினியோகித்து வருகிறது.

(“More 1 of 6,715 சம்பளப் பிரச்சினை தொடர்பாக தொழிலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக மக்கள் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் பதவி பறிபோகுமா?

பிலிப்பைன்ஸின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, தனது பதவியைப் பறிகொடுக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக, அந்நாட்டின் செனட்டர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். நாட்டின் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துகளே, அவர் மீதான இந்த விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

(“ஜனாதிபதி டுட்டேர்ட்டேயின் பதவி பறிபோகுமா?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் 6 பேருக்கு எச்.ஐ.வி தொற்று

யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 6 பேர் புதிதாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் தாரினி குருபரன் தெரிவித்தார். ‘இவர்களில் மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர். யாழ். மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு, 12 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 2015ஆம் ஆண்டு ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், 2016 ஆம் ஆண்டு, 6 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இது சடுதியான அதிகரிப்பை எடுத்துக் காட்டுகின்றது’ என அவர் மேலும் கூறினார்.

(“யாழில் 6 பேருக்கு எச்.ஐ.வி தொற்று” தொடர்ந்து வாசிக்க…)

A2 வீதி மூடப்பட்டது

கொழும்பு – வெல்லவாய (A2) வீதியினூடான போக்குவரத்து, ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல சந்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிரிஜ்ஜவெல சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே, அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அலெப்போவில் மீண்டும் மோதல்

சிரியாவின் அலெப்போவில், எதிரணியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான இணக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் பயங்கர மோதல்கள் நேற்று (13) அங்கு ஆரம்பித்துள்ளன. இதனால், குளிருடன் பசியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

(“அலெப்போவில் மீண்டும் மோதல்” தொடர்ந்து வாசிக்க…)

சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்

சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

(“சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்” தொடர்ந்து வாசிக்க…)

450 மின் மாற்றிகள் சேதம்; 4 துணை மின் நிலையங்களில் பாதிப்பு: 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன

‘வார்தா’ புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 450 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து, மின் விநி யோகத்தை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப் படையில் நடந்து வருகின்றன.

(“450 மின் மாற்றிகள் சேதம்; 4 துணை மின் நிலையங்களில் பாதிப்பு: 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு என்பவை, மலையகத் தமிழரின் இருப்பையே இந்நாட்டில் அசைத்து விட்டன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஐதேக மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென நண்பர் அனுர கூறியிருப்பது நியாயமானதுதான்” தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

(“மலையக மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)