வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !!

வவுனியாவில் தீபாவளி திருநாளான அன்று இளைஞர் குழுக்களிடைய ஏற்பட்ட மோதல்மற்றும் விபத்து காரணமாக கடந்த மணிநேரத்தில் வவுனியா வைத்தியசாலையில் 10பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பும்வழங்கப்பட்டுள்ளது.

(“வவுனியாவில் வெவ்வேறு இடங்களில் வாள் வெட்டு சம்பவங்கள் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !!” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திருமதி செல்லப்பா பரமேஸ்வரி
தோற்றம் : 10 செப்ரெம்பர் 1932 — மறைவு : 25 ஒக்ரோபர் 2016
யாழ். நாவாந்துறை தெற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா Toronto Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பரமேஸ்வரி அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’

‘இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்” என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.

(“‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

(ரெலோ சிவா. அல்லது லிமோ சிவா என பலராலும் அறியப்பட்ட சிவா இன் மனைவியின் தயார் கனடாவில் இயற்கை எய்தியுள்ளார்)

திருமதி புஸ்பரத்தினம் நவரட்ணம்
மலர்வு : 29 யூலை 1932 — உதிர்வு : 24 ஒக்ரோபர் 2016

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரத்தினம் நவரட்ணம் அவர்கள் 24-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மகுலசிங்கம்(குலம்- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பகாந்தன், ரஞ்சினி(கனடா), றஞ்சன்(டென்மார்க்), பாக்கியநாதன்(கிளி- கனடா), ஸ்ரீதரன்(தவம்- கனடா), சுகுமார்(கமல்- கனடா), சுகன்யா(கண்ணா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

சுலக்சனை பின் தொடர்ந்த ஆவா குழு!

யாழ் படுகொலை தொடர்பாக ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சில விடயங்கள் குறித்து ஶ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு நாயகம் திருமதி தீபிகா உடுகம தலைமையில் விசேட விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது. சுலக்சனை ‘ ஆவா’ குழுவினர் அவர் இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் தாக்கியதாக அவர் போலீசில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இதுவரை அது குறித்து எந்தவொரு விசாரணையையும் போலீசார் செய்யவில்லை.

(“சுலக்சனை பின் தொடர்ந்த ஆவா குழு!” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவை புலிகள் ஏன் ஆதரித்தனர்?

மஹிந்த ராஜபக்ஸவை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருப்பதன் மூலம் ஸ்ரீலங்காவை தோல்வி அடைந்த நாடாக மாற்றி இதன் மூலம் தனிநாட்டை அடைகின்ற உத்தியை புலிகள் கையாண்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இவர் மட்டக்களப்பு ஏறாவூரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

(“மஹிந்தவை புலிகள் ஏன் ஆதரித்தனர்?” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்களை சுட்டது தமிழ் பொலிஸ்

கடந்த வெள்ளி அதிகாலை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்மீது பொலிசாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சியியை உண்டுபண்ணியிருக்கும் அதேநேரம் அதனுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் படிப்படியாக கசிந்து வருகின்றது.

(“மாணவர்களை சுட்டது தமிழ் பொலிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு

வடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், வாக்கெடுப்பு ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட மாகாண சபையின் முதலாவது பிரதித் அவைத்தலைவராக (பிரதித் தவிசாளர்) பதவி வகித்த அன்டனி ஜெயநாதன், கடந்த மாதம் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து, வடமாகாண சபையின் பிரதித் அவைத்தலைவர் பதவி ​வெற்றிடமாகியது. அதனையடுத்து, வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (27) ஆரம்பமாகி நடைபெற்ற போது, புதிய பிரதி அவைத்தலைவராக கே.வி.கமலேஸ்வரன், தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

‘நாட்டை விட்டு அர்ஜுன மகேந்திரன் வௌியேறி​விட்டார்’

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டுத் வௌியேறிவிட்டதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவர் இவ்வாறு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டார்” என அவர் மேலும் கூறினார்.