விண்துகள்கள் : ‘நாசா’வின் சக்தி வாய்ந்த ராக்கெட்!

அமெரிக்காவிலுள்ள யூட்டா மாகாணத்தின், புரோமோன்டோரி பாலைவனப் பகுதியில், உலகின் மிகப் பெரிய ராக்கெட் உந்து இயந்திரத்தை, ‘நாசா’ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ‘ஆர்பிட்டல் யு.டி.கே.,’ என்ற தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. கடந்த மார்ச், 2015ல், இதே திட எரிபொருள் ராக்கெட் இயந்திரத்தை வெப்பமூட்டிய நிலையில் வெற்றிகரமாக நாசா சோதித்தது. சமீபத்திய சோதனை மிகவும் குளிரூட்டப்பட்ட நிலையில் நடந்தது. இரு சோதனைகளுமே வெற்றி கரமாக நடந்ததால், இதுவே இறுதி சோதனை. இந்த ராக்கெட் இயந்திரத்திற்கு, 16.33 லட்சம் கிலோ உந்து சக்தி கொண்டது. செப்டம்பர் 2018ல், செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலனையும், 2025ல் மனிதர்கள் உள்ள விண்கலனை ஒரு விண்கல்லின் மீது தரையிறக்கவும், பின், 2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இத்தகைய உந்து இயந்திரங்களையே நாசா பயன்படுத்தும்.

மரண அறிவித்தல் இலவசம்.!!!

சூத்திரம் இணையத்தில் மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும்.
அறிவித்தல் பக்கத்தைத் தயார் செய்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
உறுதிப்படுத்துவதற்காக 3 பேர்களின் தொலைபேசி இலக்கங்களையும் இணைத்து அனுப்பவும். நீங்களாகவே பக்கத்தைத் தயார் செய்து அனுப்பும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அறிவித்தல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு  இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி
sooddram3@gmail.com

மரண அறிவித்தல்

திரு நாகமுத்து சிவநாதன்
(சிவம்)
அன்னை மடியில் : 21 யூலை 1954 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2016
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவநாதன் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானியாவில் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கை

லண்டனில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவருடன் உரையாடிய பொழுது, Brexit விடயத்தில் மக்கள் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்தியர்கள், இலங்கையர்கள், ஆப்பிரிக்கர்கள் போன்ற முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த குடியேறிகளைக் கவரும் வகையில், போரிஸ் ஜோன்சன் போன்ற அரசியல்வாதிகள் ஒரு கதையை பரப்பினார்கள்.

(“பிரித்தானியாவில் பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்கை” தொடர்ந்து வாசிக்க…)

EU இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரிவும் எம்மவர்கள் வெட்டி பேச்சும்..!!

கடந்த ஐந்து வருடங்களுக்கு ஐரோப்பிய யூனியனில், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து கொண்டது(கொள்ள பட்டது) யாவரும் அறிந்ததே. அவ்விணைவின் மூலம் திறக்க பட்ட எல்லைகளினால் இவ் ஐந்து வருடங்களுக்குள் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் குடியேறியவர்கள் தொகை (+ அகதிகள் ) அண்ணளவாக 9 மில்லியன் மக்கள் வரும். இன்றைய நாட்களில் அவற்றில் அண்ணளவாக 5.5 மில்லியனுக்கு கூடுதலான மக்கள் ஐக்கிய இராச்சிய பிரசைகளாக மாறிவிட்டனர். மிகுதியாக இருப்பவர்கள் 3.5 மில்லியனுக்கு குறைவானவர்களே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பிரசைகளாக உள்ளனர்.

(“EU இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரிவும் எம்மவர்கள் வெட்டி பேச்சும்..!!” தொடர்ந்து வாசிக்க…)

36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை செவ்வாய்க்கிழமை 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(“36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண தனியார் பஸ் பணிப்பகிஷ்கரிப்பு

வடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள நிலையில், கிளிநொச்சி பகுதியிலுள்ள அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தனியார் பஸ்ஸூக்கு 60 சதவீதம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் 40 சதவீதம் என்ற விகிதாசார அடிப்படையில், கடந்த 3 வருடகால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும் இந்த அட்டவணைக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை ஒத்துழைப்பு வழங்காத நிலையில், அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தவிடயம் தொடர்பில் மத்திய மற்றும் மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை என்றும் குறித்த சங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்திற்கொண்டு இன்று திங்கட்கிழமை முதல், தீர்வு கிடைக்கும் வரை வடமாகாணம் முழுவதும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

NRTSL organised a Landmark meeting in London

NRTSL(NEWSLETTER)                                                                                                   25 June 2016

 

Sri Lanka Deputy Foreign Minister Hon. Dr Harsh de Silva and Mrs Rosie Senanayake, Deputy Chief of Staff, Prime Minister’s Office met a wide gathering of Tamils at a meeting organised by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL)at Sangam Hall, Burnt Oak, Edgware, Middx., on the evening of 18 June 2016.

(“NRTSL organised a Landmark meeting in London” தொடர்ந்து வாசிக்க…)

நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.

(“நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி” தொடர்ந்து வாசிக்க…)

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(“பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !” தொடர்ந்து வாசிக்க…)