‘ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்’

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை – கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஜனாதிபதி கூறினார்.

கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்

திருகோணமலை, சம்பூர் பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கடற்படை உயரதிகாரியொருவரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஏசிய விவகாரத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில், உயர்நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07), அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை காரணமாக, மேற்படி கடற்படை உயரதிகாரியினதும், சம்பவத்தின் போது மேடையில் நின்றிருந்த பாடசாலை மாணவர்களினதும் கௌரவம் சீர்குலைக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, பி.லியனாரச்சி என்ற சட்டத்தரணியால், மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(“கிழக்கு முதல்வருக்கு எதிராக மனுத்தாக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்

இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கத்தில் விமானம் மூலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஹோட்டல், சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில்களுடன் தொடர்புடையவர்கள் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 25 இலட்சம் ரூபாய் செலவில் களுத்துறை, கட்டுகஹேன பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘சுவதிவி’ மருத்துவ மையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போது இதனைக் கூறினார். நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மலேரியா, எயிட்ஸ் போன்ற நோய்கள் இருக்கின்றதா என்று அறிந்துகொள்ளுவதற்காக இவ்வாறு இரத்தப் பரிசோதளை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் கூறினார்.

கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு

ஆரம்ப ஈபிஆர்எல்எவ் இற்கு தாங்கு சக்தியாக விளங்கிய தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு இன்று(June 05, 2016) கனடாவில் நடைபெற்றது. தோழர் ஜேம்ஸ் இன் வீட்டில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடிய பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)யினர் தமது கட்சியான தழிழர் சமூக ஜனநாயக் கட்சி – கனடா(SDPT- Canada) கிளை சார்பில் இந்நிகழ்வை நடாத்தினர். இதில் SDPT இன் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமக்கும் ஸ்ராலின் அண்ணாவிற்கும் இடையேயான உறவு பற்றி பகிர்ந்து கொண்டனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அர்பணிப்பு செய்து செயலாற்றியவர் தோழர் ஸ்ராலின் அண்ணா என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

(“கனடாவில் தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு அஞ்சலி நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்

 

சிவன் பவுன்டேசன் மோகன் என்ற கணேஸ் வேலாயுதம் உடன் சமூக வேலை ஆர்வலர்களுடனான சந்திப்பொன்று இன்று ரொறன்ரோ கனடாவில் நடைபெற்றது. கனடா செல்வசன்னதி ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரெலோ சர்வதேசம் உறுப்பினர்கள், காட்லி கல்லூரி பழைய மாணவர் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யின் உறுப்பினர் தோழர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள், புனர்வாழ்வு, வேலைவாய்பு. கல்வி ஊக்குவிப்பு என்பவற்றில் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும் சிவன் பவுன்டேசன் கனடாவின் எமது உறவுகளின் உதவியுடன் தமது சேவையை தொடர்வதற்கான ஆலோசனையும் செயற்திட்டங்கள் பற்றியும் இவ் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. மத்திய அரசு, மாகாண சபைகள்(குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபைகள்) தூரநோக்கு பார்வையுடனான செயற் திட்டங்களும், செயற்பாடுகளும், ஆக்கபூர்வமான சிந்தனைகளும் அற்று செயற்படும் தற்போதைய நிலமையில் இது போன்ற மக்களுக்கான சேவை முன் நகர்த்திச் செல்வதில், செயற்படுத்துவதில் உள்ள தடங்கலகள் பற்றி தோழர் ஜேம்ஸ் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

(“கனடாவில் எம்மவருடன் சிவன் பவுன்டேசன்” தொடர்ந்து வாசிக்க…)

தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவிப்பு!

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் மறைந்த தமிழினி என்கிற சிவகாமியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து இயங்கும் ஆங்கில இணையத்தளமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு தரப்பினர் தனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தமிழினியின் ‘ஓர் போர்வாளின் நிழலில்’ நூல் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாவீரர் தின மற்றும் வேறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த காலங்களில் பணம் திரட்டிய தரப்பினர், தற்போது பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து புலிகளை மீளவும் இயங்கச் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளை மீளவும் சர்வதேச ரீதியாக இயங்கச் செய்ய எவ்வித சாத்தியமும் கிடையாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கொஸ்கம தீ விபத்து: இராணுவ வீரர் பலி; 8 பேர் காயம்

கொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தவிர, இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதுடன், 39 பேர் சிறுகாயங்களுக்காக சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய உணர்வாளர்களே! உங்களுக்கு என்ன நடந்தது?

நூறு வருடங்களுக்கு முன்னர், துருக்கியில் நடந்த ஆர்மேனியர்கள் மீதான படுகொலைகள், இனப்படுகொலை என்று ஜெர்மன் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து தமிழ் தேசிய ஆர்வலர்கள் அக்கறையற்று இருப்பது ஆச்சரியத்திற்கு உரியது. பிபிசி தமிழோசை தவிர பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்ன காரணம்? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, “தமிழ் இனப்படுகொலையை அங்கீகரி!” என்று ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களிலாவது இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ளக் கூடாதா?

(“தமிழ் தேசிய உணர்வாளர்களே! உங்களுக்கு என்ன நடந்தது?” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் மீதான அநியாய வற் (VAT) வரித் திணிப்பு

மக்கள் மீதான அநியாய வற் (VAT) வரித் திணிப்பு, தமிழர்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கவில்லை போலும். அதியுயர் பதவிகளில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், இதற்கெதிராக வாய் திறக்காமல் இருப்பது, நிச்சயமாக ஒரு வரலாற்றுத் தவறாக அமையப் போகின்றது. குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின், பொருளாதாரப் பிரச்சனை தொடர்பான அசமந்தப் போக்கு. தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாக விளங்கும் முஸ்லிம், தமிழ் மக்களின் அமைதி நிலை, ஆட்சியாளர்களுக்கு மிகுந்த சாதகமான நிலைமையாக மாறிக்கொண்டு இருக்கின்றது. இனப் பிரச்சனையைக் காரணங் காட்டி, பொருளாதாரப் பிரச்சனை மறைக்கப்படுவது, தொன்று தொட்டு நிகழும் விடயங்களில் ஒன்று. இதனால் ஒருபோதும் அரசியால்வாதிகள் பாதிக்கப்படவுமில்லை, பாதிக்கப்படப் போவதுமில்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் சொகுசுகளை அனுபவித்தவர்களாக அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இனியும், தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடர்பான விடயங்களில், மௌனிகளாக இருக்க முடியாது. இந்த மௌனம் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

(Arun Hemachandra)