மலையக தமிழர்களை அரசுக்கு எதிராக திருப்பிய ‘ரோ’ [RAW] ?!

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ”அதிபர் தேர்தலில் நாங்கள் தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவுடன் சில பிரச்சினைகள் இருந்தது எமக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் கடினமாக இருந்தது.காலி கலந்துரையாடலில், முக்கிய உரையாற்றுவதற்காக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை அழைத்திருந்தோம். இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’, ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக பணியாற்றுகிறது என்று அவரிடம் நான் கூறியிருந்தேன். எப்படி இது நடக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அதிபர் ராஜபக்ச தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

(“மலையக தமிழர்களை அரசுக்கு எதிராக திருப்பிய ‘ரோ’ [RAW] ?!” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ முடி­யு­மானால் புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பித்துக் காட்­டட்டும். வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை காணாது என்­பது போலவே மஹிந்­தவின் புதிய கட்சி மந்­திரம் அமைந்­துள்­ளது. எனினும், அடுத்த தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் அல்ல. அதற்கு மாறாக யானையின் வாலில் கோட்­டாலும் ஐக்­கிய தேசியக் கட்­சியே வெற்­றிப்­பெறும் என்று அக் கட்சியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார தெரி­வித்தார். புதிய கட்சி என்ற பீதியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஏற்­ப­டுத்தி ஊழல் மோச­டிக்­கா­ரர்­களை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு ஜனா­தி­பதி அஞ்­ச­மாட்டார்.

(“மகிந்தவின் வயிற்­றி­லுள்ள குழந்தை வெளிச்­சத்தை பார்க்காது!” தொடர்ந்து வாசிக்க…)

எமது பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைவரும் அணி திரள்வோம்!

‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று சிந்திக்கும் சுயநலப்போக்கும், தனது வீட்டு முற்றம் வரைக்கும் பிரச்சினை தேடிவரும் வரைக்கும் காத்திருக்கும் மனோநிலையுமே கூட்டு வன்புணர்வு படுகொலைகளுக்கு மூலகாரணிகள் என்று ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும்’, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்களின் குடும்பங்களும்’ தமிழ் சமுகத்தை கடுமையாக சாடியுள்ளன. சரண்யா, வித்தியா, சேயா, கரிஸ்ணவிகளுக்கு நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை ‘நாளை எனது வீட்டு பெண் பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு?’ என்பதை சிந்தித்து ஒவ்வொரு குடும்பமும் (பிரஜையும்) கலக்கத்தோடும் – விழிப்புணர்வோடும் சமுக அநீகளுக்கு எதிராக, பெரும் மக்கள் கூட்டமாக – கூட்டுக்குடும்பமாக வீதியில் இறங்கிப்போராட வரவேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மாணவி கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு வவுனியா மாவட்டத்தில் 23.02.2016 அன்று நடைபெறவுள்ள கவனவீர்ப்பு அழுத்த போராட்டத்துக்கும், மறுநாள் 24.02.2016 அன்று இடம்பெறவுள்ள இயல்புநிலையை முடக்கும் முழுஅடைப்பு கர்த்தாலுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்து அவர்கள் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையிலேயே மேலேகுறித்தவாறு தெரிவித்துள்ளனர்.

(“எமது பிள்ளைக்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம்? அனைவரும் அணி திரள்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்!

கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் செவ்வாய்க்கிழமை (23-02-2016) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தாம் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றோம் எனவும், உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் திங்கள் (22-02-2016) தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் 23-02-2016 செவ்வாய்க்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

 

இது தொடர்பான அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புடன் இணையத் தயார் ஈரோஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படும் ஈரோஸ் கட்சியின் தலைவர் ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், இன்றைய சூழலில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உண்மையான அடையாளாம். அதன் மூலமாகத்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற முடியும். அதனால்தான் ஈரோஸ் மறுசீரமைப்பு மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியில் பயணத்தை மேற்கொளவதென முடிவு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் பேரவை அல்ல எந்தப் பேரவையாலும் அழிக்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு சட்டத்தரணியும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அதன் ஆணையாளர்கள், ஈ.பி.டி.பி. கட்சி ஒரு சட்டவிரோத ஆயுதக் குழு என்று இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது அந்தக் கட்சிக்கு என்ன மானம் இருக்கின்றது? இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

(“ஈ.பி.டி.பி. கட்சிக்கு மானம் இருக்கின்றதா? சட்டத்தரணி கேள்வி!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்!

மத்திய அரசாங்கத்துடன் வடக்கு மாகாணசபை, ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இந்தியாவும் மேற்குலகமும், அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபை தனித்துச் செயற்படுவதை விரும்பத்தக்க விடயமல்ல என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் எடுத்துக் கூறியுள்ளனர். அண்மைக்காலங்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே, வடக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளனர்.

(“வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த தலையை மைத்திரியிடம் வழங்கியதற்கு சமால் சாட்சி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதற்கு முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஸவே சாட்சி என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவை யாரும் அச்சுறுத்தவில்லை எனவும் மிகவும் சுமூகமான முறையில் கட்சித் தலைமப் பதவி ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(“மஹிந்த தலையை மைத்திரியிடம் வழங்கியதற்கு சமால் சாட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

சமஷ்டியால் பிரிந்துபோகமாட்டோம் – உரிமையைத் தந்தால் சேர்ந்து வாழ்வோம்!

சமஷ்டி முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொடுத்தால் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்று வட மகாணா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். சர்வதேசத்தில் சமஷ்டி ஆட்சி முறை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் பிரிந்து போகவில்லை என்றும், அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தினை விதைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

(“சமஷ்டியால் பிரிந்துபோகமாட்டோம் – உரிமையைத் தந்தால் சேர்ந்து வாழ்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதவியேற்பு வைபவத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இருவரும் மாறிமாறி அறிக்கைகள் விட்டு முரண்பட்டிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

(“மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்!” தொடர்ந்து வாசிக்க…)