உள்ளுராட்சி தேர்தல்கள் பற்றி சிறீதரன் திருநாவுக்கரசு

இம்முறை உள்ளூராட்சி சபைகளில் 25 வீதத்திற்கு குறையாமல் பெண்கள் இடம்பெறவேண்டும். சிறிய கட்சிகள் பலமற்ற குரல்களுக்கும் ஓரளவு சாதகமான நிலை காணப்படுகிறது. ஆனால் பெருந்தொகையான பிரதிநிதித்துவம் துக்ளக்கின் தர்பாரை விஞ்சிய அராயகத்திற்கும் வழி வகுக்கலாம். கிராமிய வட்டார மட்ட ஊழல் விஸ்தரிப்பு வாதம் ஆகி விடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் கட்சி செயலாளருக்குள்ள அதிகாரம் . கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தல1500 ரூபா கட்டுப்பணம் சுயேச்சையாக கேட்பவர்களுக்கு தலா 5000 ரூபா என்பதும் பணம் படைத்த கட்சிகள் தான் எல்லா இடங்களிலும் தேர்தலில் பங்கு பற்றலாம் என்ற நிலை இவை எல்லாம் ஜனநாயக விழுமியங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. ஏகப்பட்ட நிறை குறைகள். தேர்தல் தேர்தலுக்கு பிந்திய நடைமுறைகள் இது ஒரு பரிசோதனை காலம்.
சாதாரண மக்களுக்கு குரலற்றவர்களுக்கான அதிகாரம் என்பதே முக்கியமானது

1986 மார்கழி 13.

தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும்,; தனி நபர்களுக்கும் ; பேசவும் எழுதவும்; ஒன்று கூடவும்; உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர். (“1986 மார்கழி 13.” தொடர்ந்து வாசிக்க…)

மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் : ஒரு தசாப்த அவல வரலாறு

நினையாப் பிர­கா­ர­மாக புலி­களால் இராப் பொழுதில் ஒலி­பெ­ருக்கி மூலம் வெளி­யேறச் சொல்லி கால் நடை­யாக சுமார் 60 கிலோ­மீற்றர் தூரம் வெயிலில் விரட்­டப்­பட்ட மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்­லிம்­களின் வர­லாறு இப்­பொ­ழுது ஒரு தசாப்­தத்தை (10 வரு­டங்­களை) நிறைவு செய்­தி­ருக்­கின்­றது.

(“மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் : ஒரு தசாப்த அவல வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி

(ஆர்.மகேஸ்வரி)

நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை.

(“பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி” தொடர்ந்து வாசிக்க…)

இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் கடந்த 22 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுத முற்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர். தற்போது குஜராத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தவரும்கூட. இந்தத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து வட்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர், சுமார் 18,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழையில் நனைந்துக்கொண்டிருந்தவரிடம் ‘தி இந்து’-வுக்காக பேசினோம்.

(“இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டி

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதாக முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு என்று தெரிவு செய்த பகுதிகளில்ட மாத்திரம் போட்டியிடுவதாக தெரிவித்தார். சில பகுதிகள் அப் பிரதேச மக்கள் தமக்கு ஒரு சுயேச்சைக் குழுக்களை அமைத்து போட்டியிடுகின்றனர்.  கிராம பிரதேச ஒற்றுமையை கருத்தில் கொண்டு அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப் பிரதேசங்களில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி (SDPT)போட்டியிடுவதை தவிர்த்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

(காணொளியை பார்க்க…)

நாபா என்ற மானிடன்

அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
கனிவாகப் சத்தமில்லாமல் பேசுவது -நடந்து கொள்வது- சிறியோர் பெரியோர் என்ற பதகளிப்புக்கள் இல்லாதது- எல்லாவற்றையும் அமைதியாக ஆரவாரமில்லாமல் நோக்குவது
வெறுப்பு –காழ்ப்புணர்வு இவற்றின் சுவடுகளைக் கூட காணமுடியாது.
இடையறாத தன்னலமற்ற உழைப்பு- தோழமை- வழிகாட்டல் இது நாபா என்ற மானிடன்.
(“நாபா என்ற மானிடன்” தொடர்ந்து வாசிக்க…)

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி

பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி 1960க்குப் பின்னான இலங்கை இடதுசாரி, மற்றும் தொழிற்சங்க வரலாற்றுக் காலகட்டம் தொடக்கம் புகலிட அரசியல் -சமூக -கலை- பண்பாட்டு துறை , எழுத்து- செயற்பாட்டுத் தளம் வரை பங்களித்த அனுபவமிகு மூத்த மனிதர்களில் ஒருவர்.

(“பரா மாஸ்டர் என அழைக்கப்படும் தோழர் பரா குமாரசாமி” தொடர்ந்து வாசிக்க…)

ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09

மக்களுடைய நம்பிக்கைகளைக் கட்சிகளும் தலைமைகளும் சிதைத்து விட்டன. இதனால், இப்பொழுது மக்கள் தலைமைகளை நம்பத் தயாராக இல்லை. கட்சிகளை நம்பத் தயாராக இல்லை. சின்னங்களை நம்பத் தயாராக இல்லை. இவற்றுக்கு வெளியேதான் தங்களுக்கான அரசியலை அவர்கள் தேடுகிறார்கள். உண்மையும் அதுதான். மக்களுக்கான அரசியல் என்பது கட்சிகளுக்கும் பாரம்பரிய சின்னங்களுக்கும் உளுத்துப்போன தலைமைகளுக்கும் வெளியேதான் உண்டு. இதை இன்னும் ஊடகங்கள் கண்டு கொள்ளாதிருப்பது அவற்றின் வரலாற்றுத் துயரமாகும்.

(“ஊருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை – 09” தொடர்ந்து வாசிக்க…)