கிரான் பதற்றம் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது

(சாகரன்)

கிழக்கில் வாழும் இரு சிறுபான்மை இன மக்களிடையே வளரக்;கப்படவேண்டிய சகோரத்துவ உறவு 1970 களின் பிற்பகுதிகளில் இருந்து குறைந்து வருவது கவலையை அளிக்கும் செயற்பாடாக இருக்கின்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்ணியுடன் ஐக்கியமாக இணைந்து செயற்பட்ட நிலமையை சரிசமமாக பாவிக்க தெரியாத சூழலில் முஸ்லீம் மக்கள் தனியான கட்சியமைத்து செயற்பட்டதும் இதனைத் தொடர்ந்து உருவான ஈழவிடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம் மக்களும் இணைந்து போராடியதும் புலிகள் ஏகபோகமாக உருவெடுத்து வடக்கில் இருந்து முழுமையாக முஸ்லீம்களை சுத்திகரித்ததும் கிழக்கில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற கொலைகளும் இதன் மறு வளங்களாக இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஊர்காவல் படைகளில் முஸ்லீம் இளைஞர்கள் இணைந்து தமிழ் மக்களின் கிராமங்களில் நடைபெற்ற கொலைகளும் பல கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும் இருதரப்பிலும் சமான்ய மக்கள் இவ் அநியாயங்களை எப்போதும் ஆதரித்து இருக்கவில்லை. (“கிரான் பதற்றம் மனத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

கென்ய தேர்தல் – 2017

(ஜனகன் முத்துக்குமார்)

கென்யாவில் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் இருந்து, தேர்தல் தொடர்பான வன்முறைகளில் இதுவரை 44 பேர் இறந்துள்ளனர் என்பதுடன், அதில் பெரும்பாலானோர், எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்த, கென்யாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குடியேற்றங்களைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகின்றது.

(“கென்ய தேர்தல் – 2017” தொடர்ந்து வாசிக்க…)

கமல் – ரஜினி – விஜய்: தமிழக அரசியலில் ‘கலக்கப் போவது யாரு’?

(எம். காசிநாதன்)

நவம்பர் – 7, தமிழக அரசியலில் புதிய அரசியல் கட்சி உதயமாவதற்கு ஒரு தொடக்க தினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் மிகப்பெரிய அளவில் இரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறார். திரையுலகினர் அரசியலுக்கு வருவது, தமிழகத்துக்குப் புதிதல்ல என்றாலும், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மூன்று திரையுலக பிரபலங்கள் தமிழக அரசியல் களத்துக்குள் நுழைவதற்கு தலைப்பாகை கட்டி நிற்பது, கவர்ச்சி அரசியலை நோக்கி, மீண்டும் ஒரு பெரும் போருக்கு களம் தயாராகி விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

(“கமல் – ரஜினி – விஜய்: தமிழக அரசியலில் ‘கலக்கப் போவது யாரு’?” தொடர்ந்து வாசிக்க…)

செய்தியின் பின்னணியில்

நான் படித்த சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு புதிய மாடிக் கட்டடம் கட்ட 57 மில்லியன் ரூபாவை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒதுக்கியுள்ளதாகவும் அந்த கட்டிட திறப்புவிழாவுக்கு தான் வருவேன் என கூறியுள்ளதாக செய்திகளில் படித்தேன்.அது எனது பாடசாலை என்பதில் எனக்கு பெருமைதான்.

(“செய்தியின் பின்னணியில்” தொடர்ந்து வாசிக்க…)

இளஞ்செழியன் உதவுவாரா?

கோவில்களில் ஆடுகளை வேள்விக்காக பலியிடுவதை சட்டத்தின் மூலம் தடுத்தார்.இவரை ஒரு நல்ல துணிவான நீதிபதி என பலர் சொல்கிறார்கள்.இளஞ்செழியன் வெள்ளாளர்.அவர் யாழ்இந்துக் கல்லூரியின் மாணவர் அல்ல.ஆரோக்கியமான கல்வியை வழங்கும் பரியோவான் கல்லூரியின் மாணவர்.

(“இளஞ்செழியன் உதவுவாரா?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?

(க. அகரன்)

அரசாங்கத்தின் நிலைபேறு தன்மை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் அண்மைய காலங்களில் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளமை வெளிப்படை. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம் என்ற சொற்பதத்துடன் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் ஜனாதிபதி தேர்தலைச் சந்தித்த, ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் அதில் வெற்றி பெற்றதன் பின்னராக, அந்த ஆட்சிக்குள் பல்வேறு குழப்பகரமான நிலைமைகள் தோன்றி மறைவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதுள்ளது.

(“தேர்தல்கள் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைப் பிற்போடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு குடையின் கீழ் ஈழத்தமிழர்!? வடக்கு முதல்வர் முயற்சி !?

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம், தென் இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும், அதில் தாம் வெற்றி கண்டு கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் தான் புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்தில் வாழ்பவரிடமும் இது பற்றி பேசுவதாகவும் மிகவும் சாத்தியமான நிலைமை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

(“ஒரு குடையின் கீழ் ஈழத்தமிழர்!? வடக்கு முதல்வர் முயற்சி !?” தொடர்ந்து வாசிக்க…)

ஈழப்போருக்குப்பின் நீதித்துறையும் நீதிபதி இளஞ்செழியனின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களும்

இளஞ்செழியன் யார்? அவர் எங்கு கற்றவர்? அவரது தனிப்பட்ட விழுமியங்கள் அரசியல் பொருளாதார கலாச்சார நம்பிக்கைகள் என்ன என்பவற்றுக்கு அப்பால் இலங்கையில் கால்நுற்றாண்டுக்குமேல் நடந்த போரில் நீதித்துறை வளராமல் முடங்கியிருந்தது என்பது முக்கியமானது. நேர்மையான துணிகரமான கடுமையான தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கும் இளஞ்செழியனை நாம் வரலாற்று சந்தர்ப்பத்தில் வைத்துப்பார்க்கவேண்டிய தேவையிருக்கிற அதேநேரம் எந்த மாவட்ட தலமை நீதிபதியும் தீர்ப்புவழங்கும் நிலத்தின் வரலாறு கலாச்சாரம் மதநம்பிக்கைகளை தருக்கம் தரவுகளுக்கப்பால் கவனத்திலெடுக்கவேண்டும் என்கிற குடிமக்களின் எதிர்பார்ப்பும் நியாயமானதே.

(“ஈழப்போருக்குப்பின் நீதித்துறையும் நீதிபதி இளஞ்செழியனின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களும்” தொடர்ந்து வாசிக்க…)

வாய்ச் சொல்லில் வீரர்கள்

(Nirshan Ramanujam)

இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் காலங்களில் இந்த விடயம் பிரதான பேசுபொருளாகவும் முதலாவது வாக்குறுதியாகவும் அமைந்திருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.  ஆனால், அதற்குப் பின்னரான காலத்தில் தமிழ்ப் பாடசாலை குறித்து, வாக்குறுதியளித்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் மௌனமாகவே இருந்து வருகின்றனர்.

(“வாய்ச் சொல்லில் வீரர்கள்” தொடர்ந்து வாசிக்க…)