ஈழப்போருக்குப்பின் நீதித்துறையும் நீதிபதி இளஞ்செழியனின் சர்ச்சைக்குரிய தீர்ப்புக்களும்

இளஞ்செழியன் யார்? அவர் எங்கு கற்றவர்? அவரது தனிப்பட்ட விழுமியங்கள் அரசியல் பொருளாதார கலாச்சார நம்பிக்கைகள் என்ன என்பவற்றுக்கு அப்பால் இலங்கையில் கால்நுற்றாண்டுக்குமேல் நடந்த போரில் நீதித்துறை வளராமல் முடங்கியிருந்தது என்பது முக்கியமானது. நேர்மையான துணிகரமான கடுமையான தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கும் இளஞ்செழியனை நாம் வரலாற்று சந்தர்ப்பத்தில் வைத்துப்பார்க்கவேண்டிய தேவையிருக்கிற அதேநேரம் எந்த மாவட்ட தலமை நீதிபதியும் தீர்ப்புவழங்கும் நிலத்தின் வரலாறு கலாச்சாரம் மதநம்பிக்கைகளை தருக்கம் தரவுகளுக்கப்பால் கவனத்திலெடுக்கவேண்டும் என்கிற குடிமக்களின் எதிர்பார்ப்பும் நியாயமானதே.

இதனடிப்படையில் வித்தியா வல்லுறவு கொலைவழக்கில் அவர் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பும் வேள்விக்கடாயை அவர் தடைசெய்ததும் மிக்க சர்ச்சைக்குரியவை. இரண்டு கொலைக்குற்றங்களுக்கும் பல வல்லுறவுக்குற்றங்களுக்காகவும் சிறைசென்ற பிரேமானந்தாவை குற்றமற்றவர் என்று வெளிப்படையாகவே சொல்கிற வடமாகாணத்தின் முதலமைச்சர்மீதும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பத்திரிகைகளால் பல பாலியல் வல்லுறவுகளையும் துஸ்பிரயோகங்களையும் தனது பதவிக்காலத்தில் செய்தவர் என குற்றஞ்சாட்டப்பட்டவருமான என். சண்முகலிங்கம் மீதும் இலங்கையின் நீதித்துறை சட்டநடவடிக்கை எதுவும் எடுக்க முடியாததான இருக்கிறவேளை கூட்டுவல்கலவி கொலைக்காரர்கள் மீதுமட்டும் மரணதண்டனை வழங்கியது சர்ச்சைக்குரியது.

ஈழத்தீவின் பூர்வீகக்குடிகள் வேடர்களே என்பதாலும் இந்துமதம் அல்லது சைவ மதநம்பிக்கைகளின் அடிப்படையில் இங்கு சில மத கலாச்சாரங்களை நூற்றாண்டுகளாக பேணுபவர்களை இந்து சைவ மத நியாயங்களின் அடிப்படையில் கட்டுப்படுத்தமுடியாது. வட இந்தியாவில் பிரித்தானிய காலனியாதிக்ககாலத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கு இருந்த காலத்தில்தான் இருந்த யாழ் தேசவழமைச்சட்டத்தில் பெண்களுக்கு மறுமண உரிமைபற்றிய மிகத்தெளிவான சுதந்திரம் பற்றிய சட்டம் இருந்திருக்கிறது.

மேலும் இலங்கையில் வழக்கத்திலுள்ள மும்மதங்களை பின்பற்றுபவர்களும் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களுக்காக தம்மதநம்பிக்கைகளில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்திருக்கிறார்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மாமிசமுண்பதில்லை. கிறிஸ்தவ கிறிஸ்தவரல்லாத கரையார்கள் வெள்ளிக்கிழமைகளில் மீன்பிடித்தொழிலுக்கு விடுமுறை கொடுத்துள்ளார்கள். சில வடமாகாண கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தமது வீட்டுக்கு அருகிலுள்ள இந்துக்கோவில் திருவிழாக்களில் மாமிச வியாபாரத்தையும் மாமிசம் உண்பதையும் தவிர்த்துள்ளனர். பௌத்தர்களும் இந்துக்களும் கிறிஸ்தவ தேவாலயங்களில் வணங்குவதும் பௌத்தர்கள் இந்து கோவில்களில் வணங்குவதும் இங்கு பரவலாக உள்ளது. தமிழ்நாட்டு இந்துக்கள் போலல்லாது ஈழ இந்துக்கள் மாட்டு இறைச்சியின்(flavour, aroma, texture) மகிமை அறிந்து அதனை ரசித்துச்சமைத்து ருசித்துப்புசிப்பவர்கள். ஜாதகத்தில் நம்பிக்கையுள்ள தங்களது நட்சத்திர ராசி பலனை தவறாது படிக்கும் முஸ்லீம்களும் இத்தீவிலுள்ளனர்.

இவையெல்லா நியாயங்களையும்விட “ஆவுரித்துத் தின்றுழரும் புலையரேனும்” என்று சைவ இந்து மதங்கள் பாரபட்சம் காட்டி நாடற்றவர்களாக வீடற்றவர்களாக ஒதுக்கிய இலங்கையர்களுக்காக “நீதவான் முதலாளி
இலம்செலியன் மாத்தையா சமாவென்டோண”
– நட்சத்திரன் செவ்விந்தியன்.