இளஞ்செழியன் உதவுவாரா?

கோவில்களில் ஆடுகளை வேள்விக்காக பலியிடுவதை சட்டத்தின் மூலம் தடுத்தார்.இவரை ஒரு நல்ல துணிவான நீதிபதி என பலர் சொல்கிறார்கள்.இளஞ்செழியன் வெள்ளாளர்.அவர் யாழ்இந்துக் கல்லூரியின் மாணவர் அல்ல.ஆரோக்கியமான கல்வியை வழங்கும் பரியோவான் கல்லூரியின் மாணவர்.

நல்லூர் கோவில் நகரின் மத்தியில் இருப்பதால் மக்களுக்கு தொந்தரவாக உள்ளது.்போக்குவரத்துக்களுக்கும் இடையூறாகவே உள்ளது.எனவே அந்தக்கோவிலை தடைசெய்ய வேண்டும் அல்லது இடம் மாற்றவேண்டும்.ஏற்கனவே அருகில் வீரமாகாளி அம்மன்கோவில்,சிவன் கோவில்,சட்டநாதர் கோவில் என பல கோவில்கள் இந்துக்களுக்கு இருப்பதால் நல்லூர் ஆலயத்தை இழுத்து மூடுவ்தில் அல்லது தடை செய்வதால் இந்துக்களுக்கு பாதிப்பு இல்லை.இதற்குஇளஞ்செழியன் உதவுவாரா?

பல ஏழைகள் பசியால் வாடும்போது கோவில் சிலைகளுக்கு பாலாபிஷேகம் தேவையா?பழங்கள் தேவையா?இதையும் தடை செய்ய உதவுவாரா?

நேர்த்தி என்ற பெயரால் பறவைக்காவடி,தூக்குக்காவடி,செடில் காவடி என உடலை வருத்தி நடக்கும் செயல்கள் மிக கொடூரமானவை.இந்த முட்டாள்தனமான செயல்களை இளஞ்செழியன் தடுப்பாரா?இதே போல அலகு குற்றுதல்,தீ மிதிப்பு இவற்றையும் தடுப்பாரா?

கோவிலின் பெயரால்,திருவிழாக்களின் பெயரால் மக்களிடம்இருந்து பணத்தை வசூலித்து கொள்ளையடிக்கிறார்கள்.கோவில் சொத்துக்களை அபகரித்து தமது உடமையாக்கி வைத்திருக்கிறார்கள்.இவர்கள்மீது இளஞ்செழியன் நடவடிக்கை எடுப்பாரா?

திருவிழாக்கள் என்ற பெயரால் கோவில்களில் நடக்கும் இரவு பகலான கும்மாளங்களை தடுக்கவேண்டும்.ஒலிபெருக்கிகளின் ஊழைச் சத்தங்களால் மக்கள் தூங்க முடியவில்லை.பல மைல்கள் தூரம் ஒலிபெருக்கி சத்தம் கேட்கிறது ,குழந்தைகள் வயோதிபர்களால் இரவு பகல் தூங்கமுடியவில்லை.தேவையா இது?

கன்றுகளும் குட்டிகளும் குடிக்கிற பாலை மனிதர்கள் கறந்து குடிக்கிறார்கள்.அந்த கன்றுகளும் குட்டிகளும் என்ன பாவம் பண்ணின.நினைத்தாலே கொடுமை.ஜீவகாருண்யம் இல்லையா?

இவற்றை எல்லாம் இளஞ்செழியன் சட்டத்தின் மூலம் நிறுத்துவாரா?சட்டம் தெரிந்தவர்,நியாயம் தெரிந்தவர்.வெள்ளாள மரபு நீதிபதி.இவற்றுக்கு என்ன பதில் தரப்போகிறார?

தீர்ப்புகளை தீர்மானம் பண்ணிவிட்டு வழக்கை விசாரிக்குன்றக்குடி புதிய யுகம் இது.அந்த யுகத்தில் இளஞ்செழியன் பிரகாசிக்கிறார்.

-Vijay Baskaran