தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!

(ரி. தர்மேந்திரன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தொடர்பில் ஏராளமான முக்கிய இரகசிய ஆவணங்கள் பஷீர் சேகு தாவூத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுவிஸ் வங்கியில் உள்ள லொக்கரில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன, அவை உரிய நேரத்தில் வெளிப்படுத்தப்படும் என்று ஐக்கிய கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயலாளர் ஏ. யூ. எல். எம். ஹாரிஸ் வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுவிஸில் இருந்து தாயகம் திரும்பி வந்த இவரை நாம் நேர்காணல் கண்டபோது…..

(“தமிழை ஆட்சி மொழியாக கொண்ட இரு மாகாணங்கள்       நாட்டில் அமைய பெறுவது ஆரோக்கியமான விடயமே!” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்

(எம். காசிநாதன்)

“மாட்டிறைச்சிக்கு, மாடுகளை சந்தையில் விற்கக்கூடாது” என்று கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் மூன்றாண்டு நிறைவு விழாக் கொண்டாடும் நேரத்தில், எழுந்துள்ள இந்தச் சர்ச்சை, அக்கட்சியின் சாதனைப் பிரசாரங்களைத் திசைதிருப்பியிருக்கிறது.

(“மாட்டிறைச்சி தடையும் மாநில கட்சிகளின் கூட்டணியும்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

எல்லாப் போராட்ட அமைப்புக்களின் ஆரம்ப புள்ளியாக இருப்பது யாழ் மாவட்டம் என்பது நிதர்சனமான உண்மை இதில் விதி விலக்காக பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் உம் இருந்தது என்பது உண்மையே. ஆனால் இதன் தொடர்சியாக யாழ் மையவாத மேலாதிக்கம் ஈழவிடுதலை அமைப்புக்களுக்குள்ளேயும் மிதவாத தமிழ் அரசியலில் தலமைகளுக்குள் இன்றுவரை நிலவி வருகின்றது. இதிலிருந்து வேறுபடுவது பத்மநாபா தலமையில் உருவான விடுதலை அமைப்பு இதன் தொடர்சியான பயணப் போக்கில் இன்று தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர். யாழ்மையவாத மேலாதிகமற்ற சகல பிரதேசங்களின் சமத்துவத்தையும் பிரதி பலிக்கும் செயற்பாடுகளை தன்னத்தே கொண்டிருப்பது இதன் அடிப்படையில் செயற்படுவதும் இக்கட்சியின் சிறப்பு. 26 வது தியாகிகள் தினம் கடந்த வருடம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கூடவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் தல நகரத்தை பல்வேறு எதிர்ப்பு, எதிர்பார்ப்புக்களின் மத்தியிலும் திருகோணமலையில் நிறுவியது தனிச்சிறப்பு.

(“27 வது தியாகிகள் தினம் உலகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

சாதாரணமானவனின் மனது

சஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்
ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி அரசியலுக்குள் சிக்கிவிட்ட தேசியம் பேசும் அமைப்புக்கள்

நோர்வே ஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் மக்களவை உருவாக்க காலத்தில் முக்கியப்படுத்தப்பட்டவரும், ரீரீசியின் உபஅமைப்பான நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் தலைவர், பல்வைத்தியர் சிவகணேசன் அவர்களும் ஸ்ரீலங்கா அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி சில வாரங்களே ஆகும்போது பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களைத் தலைவராகக்கொண்ட நோர்வே ஈழத்தமிழர்அவை திடீரென நோர்வே ஈழமக்கள் அவைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக அறிவித்துள்ளது.

(“சாதாரணமானவனின் மனது” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்

2014 ஆண்டு மே மாதத்தில் தற்போதைய இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, கடந்த இரண்டு வருடகாலத்தில் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது இந்த இரண்டு விஜயங்களுமே 2015 ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின்னரே நிகழ்ந்துள்ளன. 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடியின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ அரச விஜயம், 28 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் (1987 ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்) மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அப்போது அந்த விஜயம், இந்திய அரசின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட ஆட்சிமாற்றத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த விஜயமாகவே பலராலும் நோக்கப்பட்டது. ஆனால் இம்மாதம் 11ந் திகதி சர்வதேச வெசாக் தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்காக நரேந்திர மோடி இலங்கைக்கு மீண்டும் வருகைதந்தது பற்றிக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.

(“இந்தியப்பிரதமரின் இரண்டாவது இலங்கை விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 15)

(அருண் நடேசன்)

மிஞ்சிய புலிகள் (நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட அணியினர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்) சனங்களோடு சனங்களாக இரட்டை வாய்க்காலிலும் வட்டுவாகலிலும் சரணடைந்தனர். சனங்கள், தாங்கள் உயிருடன் மீள்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல், அதிர்ச்சியடைந்த முகத்தோடுசவக்களை என்று சொல்வார்களேஇராணுவத்திடம் சரணடைந்தனர். 38 ஆண்டுகளாக நடந்த புலிகளின் போராட்டம் சரணடைவு நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

(“மே 18 (பகுதி 15)” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

ஈழவிடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறைப் பகுதிப் போராளிகளின் பங்களிப்பு சற்று மிகையானது என்றால்  அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விடயமாக இருக்கும் சிறப்பாக பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இன் அதிக பலமே கிழக்கு போராளிகளின் அர்பணிப்பில் உருவானது. மற்றய பிராந்தியங்களைவிட கிழக்கு பிராந்திய மக்களும் இந்த அமைப்புடன் ஒரு நெருங்கிய உறவை பேணிவந்தனர். தோழர்கள் பாஸ்கரன் தேவகுமார் இருவரது வெலிக்கடைப் சிறைப்படுகொலைக்கு பிறகு மட்டக்களப்பு சிறையுடைபாக இருக்கட்டும் இதனைத் தொடர்ந்த தோழர் குமார், சிவா ஆகியோரின் தலமைத்துவத்துடனான செயற்பாடாக இருக்கட்டும் காரை நகர் கடற்படை முகாம் தகர்பாக இருக்கட்டும் தோழர்கள் வேலு கணேஸ் ஆகியோரின் அர்பணிப்பாக இருக்கட்டும்  இதே வேளை விசேட அதிரடிப்படையின் நெருக்குவாரங்களுக்கிடையில் தோழர் நிதி, தைரி போன்றவர்களின் செயற்பாடு தோழர் வெள்ளையன் (கிருபா) ஆகியோரின் திருமலை மட்டக்களப்பு செயற்பாடு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

(“27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

மாலி: ஓநாய் அழுத கதை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை.

(“மாலி: ஓநாய் அழுத கதை” தொடர்ந்து வாசிக்க…)

அப்பாத்துரை விநாயகமூர்த்தியை மண்டையில் போட முயன்ற சிவராம்… இப்படிதான் கூட்டமைப்பிற்குள் வந்தது தமிழ் காங்கிரஸ்!!

2000 இற்கு பின்னர் தமிழ் ஜனநாயக கட்சிகளை ஓரணியில் திரட்ட புலிகள் விரும்பினார்கள். கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தார். 2000ம் ஆண்டிலேயே ஆரம்பித்த பேச்சு. ஆரம்ப கட்ட பேச்சுக்களின்போது, இந்த உருவாக்கத்தின் பின்னணியில் புலிகள் இருக்கிறார்கள் என்பதை இயக்கங்கள், கட்சிகளிடம் சொல்லவில்லை. எல்லா கட்சிகளும் ஓரணியில் திரண்டு தமிழ் தேசியத்தை வலியுறுத்துவது தமிழர்களின் நலனுக்கு நல்லது என்ற ரீதியில் பேச்சை நகர்த்தினார்.

(“அப்பாத்துரை விநாயகமூர்த்தியை மண்டையில் போட முயன்ற சிவராம்… இப்படிதான் கூட்டமைப்பிற்குள் வந்தது தமிழ் காங்கிரஸ்!!” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 14)

(அருண் நடேசன்)

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தீவிரப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பிரிட்டனிலும் அமெரிக்க வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று பிரபாகரன் நம்பினார். சில புலம்பெயர் தமிழ் முக்கியஸ்தர்கள் பிரபாகரனுக்கு இந்த வகையில் நம்பிக்கையூட்டியதாக தகவல்கள் உண்டு. வேறு வழியோ கதியோ இல்லாதபோது இவ்வாறு நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை.

(“மே 18 (பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)