யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகளாக தெரிவுசெய்யப்பட்டு
சனாதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ள 3 வரில் அதிக வாக்குபெற்றவரான சற்குணராசா பின்வரும் காரணங்களால் ஆபத்தானவர்.
1. சிங்களமாணவர் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களில் ஒருவர்.
2. சாதிவெறியும் மதவெறியுமுடையவர்.
3. ஊழல் நிறைந்தவர். திறமையான தனதுமாணவர்களை பழிவாங்குபவர். (“யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான 3 விண்ணப்பதாரிகள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 109 )

1989 பொது தேர்த்லில் ஈ.பி.ஆர் எல் எப் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.இந்த தேர்தலில் இவர்களை வெல்ல விடாமல் தடுக்க புலிகள் முடிவு செய்தனர்.எனினும் தோல்வி பயம் காரணமாக தமது ஆதரவாளர்களை களம் இறக்கப் பயந்தனர்.எனவே அவர்களின் பினாமிகளாக ஈரோஸ் அமைப்பை களம் இறக்கினார்கள்.

(“பற்குணம் (பகுதி 109 )” தொடர்ந்து வாசிக்க…)

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன்

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். 1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

(“169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று முரண்- துயர்

உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் இருந்து தீவிரமான கண்டனங்கள் எழுந்த காலத்தில1980 களின் நடுப்பகுதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எது வித மனக் கிலேசமும் குற்ற உணர்ச்சியும் இன்றி தண்டனை வழங்கியவர் இன்று தமிழர்தலைவர்??
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மரணித்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலானோர் இலங்கை- இந்தியா உலகம் முழுவதும மனஅழுத்தங்களுடன் வாழ்கிறார்கள். அலைகிறார்கள். மனித உரிமை பற்றிய அவரின் போதனைகளும் ஆரவாரமும் தாங்க முடியவில்லை. , நாடகபாணி கபடத்தனம் என்பதில் பகுத்தறிவுள்ள ஜென்மங்கள் துளியளவு சந்தேகம் கொள்ளமாட்டார்கள். தமிழர் அரசியலும் மனித உரிமையும் அவருக்கு ஓய்வூதியகால பொழுது போக்கு. அவரை தமிழ் கடவுள் முருகனாக துதிக்கும் தமிழர்களின் மூடநம்பிக்கையை என்னென்று அழைப்பது???
“விதியே விதியே தமிழ் சாதியை என்செய நினைத்தாய்”- பாரதி

எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவில் கேள்வி குறியாகும் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம்?

17 வருடம் தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் வசித்து வந்த டொமினிக் ஸ்டெக் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த நாடான ஜெர்மனிக்கு திரும்பச் செல்ல இருக்கிறார். ஒரு குடும்பம் தனது சொந்த நாட்டுக்கு திரும்ப போவது ஒரு சாதாரண செய்தியாக கடந்து போய்விட முடியாது. வலுவான சமூக காரணங்களோ அல்லது பொருளாதார காரணங்களோ இல்லாமல் ஒரு இடப் பெயர்வு நடந்தேறி விடாது. ஆனால் செல்வந்தர்கள் வசிக்கும் சவூதி அரேபியாவில் இருந்து இடம்பெயர்ந்தார் என்ற செய்தி கொஞ்சம் யோசிக்க வைத்தது.

(“எண்ணெய் வள நாடான சவூதி அரேபியாவில் கேள்வி குறியாகும் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம்?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 108 )

ஒரு நாள் என்னைக் காணவந்தார்.நான் ஒரு கார் வாங்கப்போகிறேன்.நீயும் வாறியா எனக் கேட்டார்.நானும் சம்மதித்தேன்.அப்போது கார் யாருக்கு என்றேன்.மாகாண சபைக்கு என்றார்.

(“பற்குணம் (பகுதி 108 )” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”

இதுவே இன்றைய பெரிய கேள்வி. ஏனென்றால் தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக அங்கே போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள் இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால் அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு.

(“கேப்பாப்பிலவு – பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்பல்கலைக் கழக பீடாதிபதிகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அடுத்த மூன்றாண்டுக்கான துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இம் மாதம்26ஆம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களும் உள்வாரி உறுப்பினர்களும் இணைந்துமூன்றுபேரை புதிய துணைவேந்தர் பதவிக்காக தேர்தல் மூலம் சிபார்சு செய்வர். இவர்களில் ஒருவரை ஜனாதிபதிதுணைவேந்தராக நியமிப்பார். நடைபெறுவது ‘நல்லாட்சி’ என்று கூறப்படுவதால் பேரவை தேர்தலில் அதிகூடியவாக்குகள் பெற்றவரையே ஜனாதிபதி துணைவேந்தராக நியமிக்க வாய்ப்புக்கள் அதிகமாகும்.

(“யாழ்பல்கலைக் கழக பீடாதிபதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம்

(தெ. ஞாலசீர்த்தி மீநில‍ங்கோ)

அரசியலில் ஆடுகளங்கள் அவசியமானவை மட்டுமல்ல; அதிகாரத்துக்கான அளவுகோல்களுமாகும்.
பொதுவில் அரசியல் ஆடுகளங்கள் இயல்பாகத் தோற்றம் பெறுபவை. சில தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கப்படுபவை. ஆடுகளங்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவையல்ல; மாறாகப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன.

(“வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம்” தொடர்ந்து வாசிக்க…)

சம்பள கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை விடயம் இதயசுத்தியுடன் செய்யப்படல் வேண்டும்.

நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.

2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாகவும் சம்பளத்தை மீள் பரிசீலனை செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைகளை நடாத்த இ.தொ.கா. தொழில் அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கமொன்று என்ற வகையில் இ.தொ.கா. அதனை மீள் பரிசீலனை செய்ய முயற்சி எடுப்பதை நாம் வரவேற்கின்றோம். எனினும் இந்த அறிவிப்பானது இதய சுத்தியுடனும் நேர்மையும் கொண்டதாக இருக்க வேண்டும். மாறாக கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான உபாயமாக இருக்க கூடாது.

(“சம்பள கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை விடயம் இதயசுத்தியுடன் செய்யப்படல் வேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)