விண்வெளியிலிருந்து உயிரினம்: உண்மையா?

(என்.ராமதுரை)

உயிரினம் என்பது நுண்ணுயிர் வடிவில் மொத்தப் பிரபஞ்சத்திலும் பரவி நிற்கின்ற ஒன்று சூரிய மண்டலத்துக்கு அப்பால் அண்டவெளியில் பூமி மாதிரியில் கோடானுகோடி கிரகங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், அவற்றில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்களா? இதைக் கண்டறிய விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாகப் பல வழிகளிலும் முயன்றுவருகின்றனர்.

(“விண்வெளியிலிருந்து உயிரினம்: உண்மையா?” தொடர்ந்து வாசிக்க…)

பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

காலங்கடந்து நிகாலங்கடந்து நிலைத்தல் எளிதல்ல. காலம் தன்னளவில் நிலைக்க வேண்டியவையையும் மறக்க வேண்டியவையையும் தீர்மானிக்கிறது. ஒரு நபரின் காலங்கடந்த இருப்பு அவர் எதைச் செய்தார் என்பதை மட்டும் கருத்திற் கொண்டு முடிவாவதில்லை. மாறாக, எதைச் செய்யாமல் விட்டார் என்பதையும் கருத்திலெடுக்கிறது. காலங்கடந்து நிலைத்தலை விட, மக்கள் மனதில் நிலைத்தல் கடினமானது. காலம் மன்னிக்கத் தயாராகவுள்ள விடயங்கள் பலவற்றை, மக்கள் மன்னிக்கத் தயாராகவில்லை. மக்கள் மனங்களில் நிலைக்கின்றவர்கள் நல்ல மனிதர்கள், அவர்கள் வரலாற்றின் பக்கங்களால் மறைக்கப்பட்ட போதும், மக்கள் மனங்களில் வாழ்பவர்கள்.

(“பராக் ஒபாமா: காலம் கலைத்த கனவு” தொடர்ந்து வாசிக்க…)

சல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இலங்கையின் தமிழ்ப்பகுதிகளோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டது. இலங்கையில் யுத்தம் இடம்பெறும் போது, அங்கு மாபெரும் போராட்டங்கள் எல்லாம் இடம்பெற்றன. அதேபோல், அங்கு தற்போது இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாக, இங்கும் ஏராளமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் ஏறுதழுவுதல் போட்டிகளை, இந்தியா முழுவதும் நடத்துவதற்கு, இந்திய உச்சநீதிமன்றத்தால் 2014ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

(“சல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை: ஆதரிக்கிறேன்; மகிழ்ச்சி.

திரள்வதற்குப் பல காரணங்கள் தேவை இல்லை. ஒன்றேயொன்று போதும். அந்த ஒன்று அரசியல் கொள்கையென்றால், அதை ஏற்காத கட்சிகள் பங்கேற்காது. பொருளாதாரக் காரணமென்றால், அதனால் பலன் கிடைக்காது என நினைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நழுவிவிடுவார்க்ள். சமுதாயப்பிளவுகளில் ஒன்று காரணமாக இருந்தால்,அதற்கு வெளியிலிருக்கும் கூட்டம் விரோதமாகச் செயல்படும்.

(“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை: ஆதரிக்கிறேன்; மகிழ்ச்சி.” தொடர்ந்து வாசிக்க…)

மதுரை நண்பர் Sala Marx உடன் அளவளாவியதில் கிடைத்த தகவல்களில் இருந்து சில புள்ளிகள்:

1. சல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகமெங்கும் மோட்டார் சைக்கிளிலில் பயணம் மேற்கொண்ட திரு. மகேஸ்வரி அவர்கள் அலங்காநல்லூருக்கு சென்று சேர்ந்தது போராட்டத்திற்கான உந்துவிசையாக அமைந்திருக்கிறது.

(“மதுரை நண்பர் Sala Marx உடன் அளவளாவியதில் கிடைத்த தகவல்களில் இருந்து சில புள்ளிகள்:” தொடர்ந்து வாசிக்க…)

முன் அழைப்பும் பின் இழுப்பும்

அலங்காநல்லூர் என்ற ஊரின் பெயரைத் திரும்பத் திரும்ப ஊடகங்களின் ஒலியாகக் கேட்கும்போது, “தலையாலங்கானம்” என்ற சங்ககால இடம்பெயர் இதுதானோ என்று மனம் நினைக்கத்தொடங்கிவிட்டது. தனது இளம் வயதில் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் எதிரிகளை வென்ற வரலாற்றை விரிவாக, அவனைப்பாடிய புறநானூற்றுப் புலவர்களின் பாடல்கள் காட்டுகின்றன. அவனது முன்னோன் ஒருவரின் பெயருக்கு முன்னால் “ ஆரியப்படை கடந்தவன்” என்ற முன்னொட்டு இருப்பதும் நினைவிலிருந்து தப்பவில்லை.

(“முன் அழைப்பும் பின் இழுப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் மையம் கொண்ட எழுகதமிழ் புயல் கிழக்கு நோக்கி நகர்கிறது!?

காலநிலை அவதான நிலையத்தில் வேலைசெய்பவன் போலாகிவிட்டது எனது நிலை. அங்கு மையம் கொண்ட புயல் கிளம்பி, இங்கு சுழன்று இடையில் கரையை கடக்கும் என்பது போலவே, ஈழத்தமிழர் அரசியல் நிலவரமும் ஆகிவிட்டது. இடியுடன் மழை வரலாம், சில இடங்களில் மேக மூட்டம் மட்டும் காணப்படும். ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறுவது போலவே எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு, ஒருநாடு இருதேசம், கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை என மக்களை போட்டுக், குழப்பு குழப்பு என்று குழப்பி, எதுவுமே கைகூடா வேளையில் வடக்கில் அரங்கேற்றிய எழுகதமிழ் பேரணியை, கிழக்கிற்கு நகர்த்தும் செயலும் ஓரளவு மக்களின் ஆதரவை பெறலாம், மாபெரும் வெற்றி என சில பத்திரிக்கைகள் சங்கூதலாம் (“வடக்கில் மையம் கொண்ட எழுகதமிழ் புயல் கிழக்கு நோக்கி நகர்கிறது!?” தொடர்ந்து வாசிக்க…)

ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா

ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா, இன்றைக்கும் பூர்கினாபாசோ நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். “மார்க்சியம் தோற்று விட்டது, கம்யூனிசம் காலாவதியாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டிருக்கும் கிணற்றுத் தவளைகளின் கவனத்திற்கு:

(“ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர் தாமஸ் சங்கரா” தொடர்ந்து வாசிக்க…)

எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!

எம்.ஜி.ஆர் பாசிஸ்ட்

திராவிட இயக்கத்தின் அரசியல் சீரழிவைப் பயன்படுத்தியே அதற்கு குழி தோண்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் சோ, சுப்பிரமணியசாமி, ஆர்.வெங்கடராமன், சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன ஊடகங்களும் மோகன் குமாரமங்கலம், கல்யாணசுந்தரம் முதல் தா.பாண்டியன் வரையிலான போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து இந்த எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா இணையைத் தமிழக மக்களின் தலையில் கட்டியிருக்கின்றனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

(“எம்.ஜி.ஆர்: கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தைத் தள்ளிய பாசிசக் கோமாளி!” தொடர்ந்து வாசிக்க…)

ஏறுதழுவல் போராட்டம் இரு அழைப்புகள்!

(ம.செந்தமிழன்)

நண்பர்களே,
சென்னை களத்தை நோக்கி நானும் கிளம்பிக்கொண்டுள்ளேன். ஏற்கெனவே செம்மைக் குடும்பத்தவர் சில பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரு செயல்பாடுகள், இப்போதைய உடனடித் தேவைகள்.

(“ஏறுதழுவல் போராட்டம் இரு அழைப்புகள்!” தொடர்ந்து வாசிக்க…)