ஜல்லிக்கட்டு அனுமதி…

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
50 கேள்விகள்…

முதலில் இத்தனை இலட்சம் பேர் ஒன்றாக கூடியதற்காக, இளைஞர்கள், இளைஞிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அரசும் காவல்துறையும் அனுமதித்தது என்றாலும் மிக பொறுமையாக நிதானமாக நேர்மையாக கொட்டும்பனியிலும் தங்கள் கொள்கைக்காக காத்திருந்த நீங்கள் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஒளிமயமான எதிர்காலத்தின் ஒளியாக மாறி இருக்கிறீர்கள்… குழந்தைகளும் பெண்களும் குடும்பங்களும் என ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்களை ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இந்த மாணவர்கள், இந்த மாணவிகள், இந்த இளைய சமுதாயம் நம் தமிழகத்தை வளமான திசைக்கு மாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள். நானும் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு தமிழன் தான்.

(“ஜல்லிக்கட்டு அனுமதி…” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்

(கே.சஞ்சயன்)

அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.  ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன.  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை நினைவுபடுத்துகின்ற அளவுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் மாறத் தொடங்கியிருக்கின்றன.

(“மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை

ஐஸ்வரியா ராய் ஐ உலக அழகி ஆக்கி அதனைத் தொடர்ந்து நான்கு வரையிலான அழகிகளை உலகதரம் என்று காட்டி இன்று இந்தியாவின் மூலை முடுக்கொல்லாம் கக்கூசு இருக்குதோ இல்லையோ அழகு நிலையங்களை திறக்க வழிசமைத்து தமது அழகு சாதனபப் பொருள்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் உருவாக்கிய காப்ரேட் கம்பனிகளின் சுரண்டல் அரசியல் இந்த ‘உலக அழகியல்’ இற்குள் இருக்கின்றது.

(“‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை” தொடர்ந்து வாசிக்க…)

வினை தீர்க்கான் வேலவன்!

ஈழத் தமிழர்கள் ‘நாங்கள் ஒண்டாக நிக்க வேணும், எங்கட ஒற்றுமையைக் காட்ட வேணும்’ என்றெல்லாம் சமூகநெறி பேசுவது இன ஒற்றுமையை நோக்கியதல்ல. தன்னுடைய இனத்தவரையே, ஏன் சொந்தச் சகோதரர்களையே துரோகி என்று மண்டையில் போடுவதை கைதட்டி ரசித்த கூட்டம், ஒற்றுமை பற்றிப் பேசும் போது குழப்பமாகத் தான் இருக்கும்.

(“வினை தீர்க்கான் வேலவன்!” தொடர்ந்து வாசிக்க…)

அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான உன்னிச்சை குளம் உடைப்பெடுத்த ஆண்டு 1958. அப்போது எனக்கு இரண்டு வயதானாலும், பத்து வயதில் அந்த குளக்கட்டில் நடந்து போன போது அந்தக் குளம் உடைப்பெடுத்த வேளை நடந்த அனர்த்தங்களை, என் மாமா கூறியது இன்று என் அறுபது வயதிலும் பசுமரத்து ஆணியாய் நினைவில் உள்ளது. அன்று நடந்தது இயற்கையின் சீற்றம் மட்டும் அல்ல, பொறுப்பான அதிகாரியின் கவலையீனமுமே.

(“அழிப்புகளை பற்றி அறியாதவரால் நடத்தப்படும் எழுகதமிழ்?.” தொடர்ந்து வாசிக்க…)

பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?

மட்டக்களப்பு என்றதும் வெளிமாவட்ட மக்களுக்கு கல்லடி பாலமும், அதனை அடுத்துள்ள இராமகிருஷ்ண மிசனும், விபுலாந்தர் சிலையும் தான் நினைவுக்கு வரும். கல்லடி உப்போடை, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, நொச்சிமுனை என நீண்டு செல்லும் தமிழ் பாரம்பரிய கிராமங்கள் தமிழர்களின் கைகளை விட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

(“பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்கி அழிக்கப்பட்டதன் கழிப்பு அடங்குவதற்கு முன்னரே கிளிநொச்சி இடம்பெயரவேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பீதி மக்களை ஆட்கொள்ளத்தொடங்கிவிட்டது. குண்டுச்சத்தங்களும் துப்பாக்கி வேட்டுகளும் உரத்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்களால் நிரம்பிவழிந்து கொண்டிருந்தது. மாலை வேளைகளில் மக்கள் வெளியில் வரத்தயங்கினர். ஒருசில வியாபாரிகள் தங்கள் பொருட்கனை லொறிகளிலும் ரைக்டர்களிலும் ஏற்றிக்கொண்டு ஏ9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் கொண்டு சென்றனர்.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்……..(அத்தியாயம் 7)” தொடர்ந்து வாசிக்க…)

இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை.

ஒரு சமயம் நான் திரு. காந்தியிடம் சென்றிருந்தேன். அப்போது அவர், ‘நான் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’என்று சொன்னார். நான் கேட்டேன்: ‘’உங்களைப் போன்ற மகாத்மாக்கள் ‘சதுர்வருணத்தை’நம்புகிறீர்களா? அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன? அது எவ்வாறு அமைந்திருக்கிறது?

(“இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை.” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.

கிழக்கில் நடைபெறவுள்ள எழுக தமிழ் என்பது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எழுச்சிக்காக அல்லாமல் கிழக்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் வடக்குக்கு அடிமையாக்க முணையும் முயற்சியாக இருப்பதால் இதற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது.இது பற்றி உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரித்துள்ளதாவது,

(“எழுக தமிழுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க முடியாது.” தொடர்ந்து வாசிக்க…)

விண்வெளியிலிருந்து உயிரினம்: உண்மையா?

(என்.ராமதுரை)

உயிரினம் என்பது நுண்ணுயிர் வடிவில் மொத்தப் பிரபஞ்சத்திலும் பரவி நிற்கின்ற ஒன்று சூரிய மண்டலத்துக்கு அப்பால் அண்டவெளியில் பூமி மாதிரியில் கோடானுகோடி கிரகங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், அவற்றில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்களா? இதைக் கண்டறிய விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாகப் பல வழிகளிலும் முயன்றுவருகின்றனர்.

(“விண்வெளியிலிருந்து உயிரினம்: உண்மையா?” தொடர்ந்து வாசிக்க…)