பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!

முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை, மன ஆதங்கத்தை கலந்து தரும் தருணத்து பதிவு இது. கல்வியின் உச்ச நுழைவாயிலான பட்டம் பெறல் என்ற, பல்கலைக்கழகம் செல்லும் தெரிவு கிடைத்த மகிழ்ச்சியை எனக்கு தந்த ஆண்டு 1978. அதே ஆண்டில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட, அனர்த்தத்தை நேரில் கண்டது ஆதங்கம். ஆனால் அழிவில் இருந்து மீண்டுவர கிழக்கை நோக்கிய வடக்கு இளையவர்களின் வருகை பேருவகை. கட்சி அரசியலுக்கு அப்பால் வடக்கும் கிழக்கும் அதுவரை மனதளவில், பிரதேசவாதம் இன்றி செயல்ப்படவில்லை. பின்பு கட்சி அரசியலில் கூட செல்லையா இராஜதுரை சந்தித்ததும், தலைமைத்துவ மோகத்தால் வந்த பிரதேசவாதம் என்பது மறுப்பதற்கு இல்லை.

(“பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 3)

(சிவகாமி)

வாழ்வின் பின்னோக்கிய பயணமிது

அந்த நேரம் EPRLF  தடை செய்யப்பட்ட இயக்கமாக புலிகளால்  அறிவிக்கப்பட்டது.அவ்வேளை சிவகாமியும்  கண்காணிக்கப்பட்டாள். தடைசெய்யப்பட்ட இயக்கத்திலிருந்த போராளிகள் தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சாப்பிட வழியற்ற நிலையில் நோயும் தாக்கி காடுகளுக்குள் மறைந்து வாழ்ந்தார்கள். அவ்வேளை சிவகாமியால்  சிலர் பாதுகாக்கப்பட்டு வேறிடங்களுக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த வேளை தான் புலிகள் காட்டிக்கொடுக்குப்பின் சிவகாமியைக் கைது செய்து 49 நாட்கள் சித்திரவதை செய்தார்கள்.உடல் சித்திரவதை இல்லாமல் விசாரணை என்ற போர்வையில் நிறைய மன உழைச்சலை ஏற்படுத்தினார்கள்.தனது சொந்தக் கிராமத்திலிருந்து சிவகாமி மேலதிக விசாரணைக்காக  யாழ்ப்பாணம் இருபாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணக்குட்படுத்தப்பட்டாள்.

(“இது ஒரு பெண் போராளியின் வரலாறு வாக்கு மூலம்…..(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

இருபத்தி நான்கு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)

(எஸ்.எம்.எம்.பஷீர்)

இதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில் எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான் அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.

(“இருபத்தி நான்கு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் !! பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)” தொடர்ந்து வாசிக்க…)

டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை எது? உண்மைபோல் தெரிவது எது? என்ற மயக்கம் இயல்பாகவே வருகிறது. இம்மயக்கங்களைத் தாண்டி உண்மையை அறிவது கொஞ்சம் கடினம். ஆனால் உண்மையை அறியும் அவா அதைக் கண்டுணர உதவலாம்.

(“டொய்ச்செ பான்க் நெருக்கடி: பிணையெடுப்பது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் பிறந்தநாள்

 

யார் இந்த கன்னங்கரா? வரலாற்றின் பக்கங்கள் மக்கள் சேவகர்களை மறைத்து இனவாதிகளையும் பித்தலாட்டக்காரர்களையும் மக்கள் விரோத அரசியல் செய்து மக்களை அழிவுக்கு தள்ளியவர்களையும் தலைவர்களாய் தந்தைகளாய் தளபதிகளாய் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.

(“இன்று 13/10/ இலவச கல்வியின் தந்தையான c.w.w.வின் பிறந்தநாள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் இந்துவத்துவா சிவசேனா….?

ஈழ‌த்தில், இந்து ம‌த‌வெறி சிவ‌ சேனாவின் கிளை அமைப்பு ஆர‌ம்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. முன்பு தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌ம் பேசிய‌ ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌ம் த‌லைமையில், இந்த‌ ஈழ‌த்து சிவ‌ சேனா இய‌ங்க‌வுள்ள‌து. ம‌ற‌வ‌ன்புல‌வு ச‌ச்சிதான‌ந்த‌ம், புலிக‌ள் இருந்த கால‌த்தில் தீவிர‌ புலி விசுவாசியாக‌ இருந்த‌வ‌ர். த‌ற்போது சிறில‌ங்கா அர‌சுட‌ன் நெருக்க‌மாகியுள்ளார்.

(“இலங்கையில் இந்துவத்துவா சிவசேனா….?” தொடர்ந்து வாசிக்க…)

C.W.W. Kannangara அவர்களின் பிறந்த நாள் இன்று….

ஏழைகளும் முக்கியம் சாதி குறைந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கல்வியை பெற்றுக்கொள்ள இலங்கையில் வழிவகுத்தவர் தான் இந்த Father of Free Education in Sri Lanka ….

Dr C.W.W. Kannangara என்பவர்…….

இலங்கையில் ஏழை மக்களின் மற்றும் சாதி அமைப்பு முறையால் பாதிக்க பட்டவர்களின் சமூக விடுதலைக்காக உழைத்தவர்கள் சிங்கள அரசியல் மற்றும் புத்தி ஜீவிகளே……

(“C.W.W. Kannangara அவர்களின் பிறந்த நாள் இன்று….” தொடர்ந்து வாசிக்க…)

தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு – கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள்
இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூட்டமைப்பின் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்கிற தகுதி மாத்திரமே அவருக்கு அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தது. அதுவே, தமிழ்த் தேசிய அரசியலில் அவர் இன்று அடைந்திருக்கின்ற அடைவின் ஆரம்பமும் தொடர்ச்சியும்! இது முன்கதைச் சுருக்கம்.

(“தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்?” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் கட்சி வருமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பாரா? எப்போது அவர் அதனை ஆரம்பிப்பார்? யார் அதன் தலைவராகப் போகிறார்? மஹிந்தவே தானா? அல்லது அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவா? இது போன்ற பல கேள்விகளை அண்மைக் காலமாக அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் கேட்ட வண்ணமே இருக்கிறார்கள்.

(“மஹிந்தவின் கட்சி வருமா?” தொடர்ந்து வாசிக்க…)

இக்பால் என்னும் இஸ்லாமிய தோழர்

நான் இவரைப் இதுவரையில் பார்த்தது இல்லை. ஆனால் இவரை அறிந்திருக்கிறேன்.இஸ்லாமிய மக்களை அவதூறாக கதைக்கும் பல தமிழ் பேசும் சைவர்களை கண்டிருக்கிறேன்.அவர்களுக்காக தோழர் இக்பால் பற்றியும் இஸ்லாமியர் பற்றியும் சிறு பதிவு. 1966 வடபகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக இறுதியாக 1970 மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேச போராட்டம் நடந்தது.இதற்கு சீன சார்ப்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதுணையாக நின்றனர்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க தமிழரசுக்கட்சியினர் தீவிரம் காட்டினர்.ஆனாலும் தடுக்க முடியவில்லை.போராட்டம் உறுதியானது.

(“இக்பால் என்னும் இஸ்லாமிய தோழர்” தொடர்ந்து வாசிக்க…)