கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)

தோழர் ஸ்ராலின் அண்ணாவிற்கு வாழ்கைத் துணையாக அமைந்த அண்ணி இந்திரா திருச்சியைப் பாரம்பரியமாக கொண்டவர். இவர் தனது உறவினர்களை பார்க்க இடையிடையே குடந்தை(கும்பகோணத்தை குடந்தை என்று அழைப்பர் நாம் திருகோணமலையை திருமலை என்று அழைக்கவில்லையா அதுபோல்)யில் இருந்து போய் வருவதுண்டு. தமிழ் நாட்டுப் பெண்கள் கணவரைவிட்டு தனியே பயணம் செய்யும் வழக்கங்களை தவிர்க்கும் கலாச்சாராப் பிடிக்குள் கட்டுப்பட்டு இருந்தவர்கள். ஆண்களும் இவற்றை அனுமதிக்காத ஆண் மேலாதிக்க சிந்தனையில் பலரும் இருந்தனர். தமது மனைவியை தனக்கு கீழானவர் என்று நடத்தும் பண்புகளுக்கு மத்தியில் அண்ணியை இந்திரா என்று அன்புடன் விழிப்பதைத் தவிர நான் வேறு எந்த முறையிலும் அழைப்பதைக் காணவில்லை.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 2)

(தோழர் ஜேம்ஸ்)
எமது புகையிரம் மதியம் அளவில் கும்பகோணத்தை அடைந்து. கும்பகோணம் பழமை வாய்ந்த புராதன நகரம் காவேரி ஆறு இந்த நகரத்தை ஊடறுச் செல்லுகின்றது. நாகபட்டினம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி கும்பகோணம் வழியாக பாய்ந்து தஞ்சை மாவட்டத்தை செழுமையாக்கிக் கொண்டிருக்கும் நதி. இந் நதி தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் பிரிக்கும் வட மேற்கு மலைத் தொடரில் ஆரம்பித்து திருச்சி தஞ்சாவூர் ஊடாக பாக்கு நீரிணை ஜலசந்தில் கடலுடன் கலக்கும் ஆற்றுப்படுக்கையில் இடையில் உள்ள பட்டணம் கும்பகோணம் கும்பகோணம் வெத்திலைக்கு மிகவும் பிரபல்யமான இடம். ஏன் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைந்த இடமும் கூட. 12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் நிகழ்வு நடைபெறும் விஷ்ணு கோவில்கள் உள்ள ஊர். {“12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் நிகழ்வு நடைபெறும் கும்பேஸ்வர் [ சிவன் ] கோவில் உள்ள ஊர்.   அதுபோல விஷ்ணு [சாரங்கபாணி] கோவில் உள்ள ஊர். சிவனுக்கு நடப்பது மகாமகம். விஷ்ணுவுக்கு நடப்பது பிரமோற்சவம். ஒருமுறை மிகப்பிரமாண்டமான  [ 40 தொன்] கும்பேஸ்வர் தேர் நகர மறுத்தவேளை, ஸ்டாலின் அண்ணா சிவபுரம் முகாமில் பயிற்சியில் இருந்த     ஈ பி ஆர் எல் எப் தோழர்களை அழைத்து சென்று, அவர்களை வடம் பிடிக்க செய்ய , தேர் அரோகரா கோசத்துடன் நகர்ந்தது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருந்தாலும், நம்புவர்களின் மன மகிழ்ச்சியை மனதில் கொண்டு, ஸ்டாலின் அண்ணன் செய்த மக்கள் சேவை அது.    (நன்றி: தகவல்: ராம்)}

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 2)” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டாலின் அண்ணைக்கு எம்புரட்சிகர அஞ்சலிகள்!

எம்முடன் இமயம் என நின்றிருந்தவர்.
சமூகமாற்றத்துடன் இணைந்த ஈழவிடுதலைக்கு கைமாறு கருதாது உழைத்த மனிதர்.
உயர்ந்த வசிகரமான அந்த மனிதருக்கு ஸ்ராலின் என்று பெயரிட்டவர் ஈ.வெ.ரா பெரியார்.
ஒரு சட்டதரணியான ஸ்ராலின் அண்ணர் 75 முழுதாகவே சமூக அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.
மார்க்சியம்- பெரியாரியம் இரண்டையுமே தனது வழிகாட்டல் கொள்கைககளாக வரிந்த கொண்டவர்.

(“ஸ்டாலின் அண்ணைக்கு எம்புரட்சிகர அஞ்சலிகள்!” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!

நீண்ட நெடிய பதிவாக எழுத முடியாத அளவுக்கு, என் கண்ணீர் கணணியை மறைப்பதால், முன் பதிவாக இந்த தீரா துயரை உடன் பதிவிடுகிறேன். பின்பு சற்று என்னை ஆசுவாசபடுத்தியதும், அண்ணா பற்றிய என் தொடர் தொடரும். நேற்று முன்தினம் ஒரு கட்டுரை எழுதுமுன் கிடைத்த தகவலை உறுதிப்படுத்த, குண்சியை தொடர்பு கொண்டபோதுதான் அறிந்தேன், அண்ணாவின் நிலை சற்று மோசம் என்று. குண்சி தந்த தாஸ் [ பல்லவன்] இலக்கத்துக்கும், விஜய் இலக்கத்துக்கும் [அண்ணாவின் மகன் ] அழைப்பை எடுத்தபோது, தற்போது நிலமை மோசமில்லை என தாஸ் மற்றும் விஜயின் அழைப்பில் வந்த பெண் கூறினார். தானும், குகனும் மாவினும், காரில் சென்று அண்ணனை பார்த்துவிட்டு வந்ததாக தாஸ் கூறினார். தொண்டையில் பூட்டிய குழாய் சிரமமாய் இருப்பதால், காலையில் தான் அதை கழட்ட, வைத்தியசாலை போனதாக விஜயின் அலை பேசியில் வந்த பெண் கூறினார்.

(“எங்கள் ஸ்டாலின்அண்ணா மறைந்தார்!” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!

1984ம் ஆண்டு தமிழ் பிரதேசம் எங்கும் குறிப்பாக யாழ்ப்பாணம் எங்கும் தொடர்சியாக ஊரடங்கு சட்டம் பிறப்பித்து கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. இஸ்ரேல் மொசாட்டின் ஆலோசனைப் பிரிவு இலங்கையின் அமெரிக்க தூதரகத்தில் இயங்கி வந்தது. ஐ.தே. கட்சியின் ஆட்சியில் இல்ரேலின் நலன்காக்கும் பிரிவு என்ற போர்வையில் அமெரிக்க தூதரகத்தில் திறக்கப்பட்டு மொசாட்டின் இராணுவ ஆலோசனைப் பிரிவு செயற்பட்டு வந்தது. இலங்கையில் முஸ்லீம்மக்களின் எதிர்பை மீறி இஸ்ரேல் தூதரகம் திறப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதற்காக ஜேஆர் அரசு இந்த ஏற்பாடுகளை செய்திருந்தது.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!” தொடர்ந்து வாசிக்க…)

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது

தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று, ஆட்சியமைத்திருக்கின்ற விவகாரம், இலங்கையிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் வெற்றிக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

(“சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” தொடர்ந்து வாசிக்க…)

யார் குற்றினால் அரிசி ஆகும்?

விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது எமது வடக்கின் அரசியல் களம். ஆடம்பரமான மேடை, கொடி, குடை, ஆலவட்டத்துடன் மேளதாள பவனியில் மேடையேறியவருக்கு கிரீடம் [அழகு ராணிகளுக்கு சூட்டும் பாணியில்] கையில் வேல் [வினைதீர்க்க வந்தவர் என்பதாலா?] அமைந்தது தமிழர் அரசு! என்ற உதயன் பத்திரிகை தலையங்கம், தீர்ந்தது எம் தாகம்! எனும் இறுமாப்புடன் அமைந்தது கைதடியில் வட மாகாண சபை. தேர்வு செய்த இடமே அதன் எதிர்காலம் பற்றி சூட்சுமமாய் ஒரு சேதி சொன்னது. எம் கடைசி காலத்தில், பேசிப் பேசியே காலத்தை கடத்தி ஓய்வெடுக்கும் பராமரிப்புடன் கூடிய வயோதிபர் மடம், மற்றும் நாட்டு வைத்தியம் [ ஆயுர்வேதம்] பார்க்கும் வைத்திய சாலை என்பன, ஏற்கனவே அமைந்த இடம் கைதடி. நாள்பட்ட நோய்க்கு எம்மவர் தேர்வு ஆயுர்வேதம். அதே போல் நீண்ட நெடிய தீராத எம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வந்த வட மாகாண சபை, அமைந்த இடமும் கைதடி. இருந்தும் நோய் தீரும் போல் தெரியவில்லை. அதேவேளை பராமரிப்புடன் கூடிய ஒய்வு பல உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ளது மட்டும் களநிலை. மக்களுக்கு என்ன கிடைத்தது, கிடைக்கும் என்ற கேள்விக்கு அவர்களின் பதில் Wait & See. [இறுதியில் அணில் ஏற விட்ட நாலு கால் நண்பர்களின் நிலையே மக்களுக்கு வரலாம்].

(“யார் குற்றினால் அரிசி ஆகும்?” தொடர்ந்து வாசிக்க…)

“வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”

“வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்” என்று கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் சிலாகித்துக் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் சொல்லி இருந்தார். ஆனால் தெரிவு செய்யப்பட்ட நசீர் ஹாபீஸ் ( ஜைனுலாப்தீன் நஷீர் அஹமட்- ஹாபீஸ் என்பது அவரின் குடும்பப் பெயர் அல்ல) விக்னேஸ்வரன் போல் கற்றவரா , அல்லது ஜமீல்தான் அவரைப்போல் கற்றவரா என்ற கேள்விகள் ஒப்பீடுகள் எல்லாமே அபத்தமானவை!. இந்தியக் கண்டத்தை ஆளும் மோடி என்ன முதுமானியா , அல்லது இலங்கை ஜனாதிபதி மைத்ரி என்ன பட்டதாரியா ? . ஆனாலும் ஜமீலும் நசீரும் ஏதோ ஒரு விதத்தில் பட்டதாரிகள் .

(““வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்”” தொடர்ந்து வாசிக்க…)

வார்த்தை தவறிவிட்டாய்

(மொஹமட் பாதுஷா)

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் முன்னிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை அவமதித்ததாக, ஒரு பெரும் சர்ச்சை இப்போது சூடுபிடித்திருக்கின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாட்டைச் சரி எனக் கூறி ஒரு சிலரும், அவரது செயற்பாட்டைக் கண்டித்து அதிகமானோரும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி, இது தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து எதையும் வெளியிடாத நிலையில், முதலமைச்சர் நஸீர், தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். பிராந்தியம் கடந்து, ஒரு தேசியப் பிரச்சினையாக இது ஆகியிருக்கின்றது அல்லது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

(“வார்த்தை தவறிவிட்டாய்” தொடர்ந்து வாசிக்க…)

‘புலிக்கொடி’யை முன்னிறுத்திய சண்டைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், ‘புலிக்கொடி’ ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது.

(“‘புலிக்கொடி’யை முன்னிறுத்திய சண்டைகள்” தொடர்ந்து வாசிக்க…)