எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..!(Part 9)

நான் இலங்கையில் பிறந்தவனாக இருந்தாலும் இதுவரை வாழ்ந்த எனது வாழ்வுக்காலத்தில் கொழும்பு ஐ கடந்து இலங்கையின் தென்பகுதியின் எந்த பகுதிக்கும் சென்றவன் அல்ல. இதற்கான விருப்பு என்னிடம் இருந்தாலும் இதற்கான வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. இந்த பிரதேச மக்கள் பற்றி தகவல்களை வாசிப்புக்கள் ஊடு மட்டும் அறிந்திருந்தேன். இலங்கையின் ஏனைய சிறுபான்மை மக்களுடன் இவர்களுக்கான தொடர்புகள் குறைவாக இருந்ததினால் பேரினவாதத்தின் செல்வாக்கு இவர்களிடத்து அதிகம் காணப்படுவதாக ஒரு பொதுப் பார்வை இருக்கின்றது. இதில் உண்மைகளும் உண்டு. அரசியல்வாதிகள் இதனை தமது பாராளுமன்ற வெற்றிகளுக்காக பாவித்துக் கொண்டனர். ஆனால் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டமும் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்து அரசியல் செயற்பாடுகளும் ஜேவிபி இனரின் செயற்பாடுகளும் இந்தப்பகுதி மக்களிடம் இருந்து பேரினவாத சிந்தனைகளை குறைத்திருக்கின்றது என்ற எனது பார்வைக்கு வலுச் சேர்பது போல் எனது இலங்கையின் தென்பகுதிக்கான பயண அனுபவம் எனக்கு தந்திருக்கின்றது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..!(Part 9)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

294, கண்டி வீதி, யாழ்ப்பாணம்

 அ. வரதராஜா பெருமாள்

 கட்சி அமைப்புச்செயலாளர்.

———————————————————-

பத்திரிகைகளுக்கான

அறிக்கை 15-10-2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் வாக்குறுதி அளித்து பொறுப்பேற்றுள்ளபடி அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். (“தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

ஊடகங்களுக்கான அறிக்கை – 12-10-2018

நாட்டில் ஜனநாயகக் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பெருமை கொள்ளும் இன்றைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் தனது இயலாமையையே தொடர்ந்து காட்டி வருகின்றது. நாட்டின் பருமட்டான பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கும்,  – சாதாரண மக்களினது வாழ்க்கைத் தரம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கும் கடந்த அரசாங்கம் பெருமளவில் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன் சுமைகளையும், அமெரிக்காவின் அண்மைக்கால பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச சந்தையில் தற்காலிகமாக ஏற்;பட்டிருக்கும் எரிபொருட்களின் விலை உயர்வையும் காரணங்களாகக் காட்டி தனது பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் தப்பித்துக் கொள்ள முற்படுவதாகவே தெரிகின்றது.
பெற்றோலியப் பொருட்களின் விலைகளை உடனடியாக மிகப் பெரிய அளவில் உயர்த்துவது அரசின் அநாவசிமான பதட்டத்தையே காட்டுகிறது. அமெரிக்க டொலர் தொடர்பான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி 5 சதவீதமளவிலேயே ஏற்பட அரசாங்கமோ பெற்றோலியப் பொருட்களின் விலைகளையும் போக்குவரத்து கட்டணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளையும்; 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அதன் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் தமது பொருளாதார வாழ்வு தொடர்பான பயக் கெடுதிகளையே அரசாங்கம் வளர்த்து விட்டுள்ளது. வர்த்தக முதலாளிகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் விலைகளை உயர்த்துவதை உடனடியாகவே செய்வார்கள் ஆனால் என்ன காரணம் கொண்டும் பின்னர் விலைகளைக் குறைக்கமாட்டார்கள் என்பது பொதுவாகத் தெரிந்ததே. விலைக் குறைப்புகளை அரசாலும் செய்ய முடிவதில்லை. எனவே மக்களின் வாழ்க்கைச் செலவுகளின் திடீர் உயர்வுக்கு காரணமாக அரசு செயற்பட்டுள்ளமை சாதாரண மக்களின் அடிப்படை வாழ்வாதார நலன்களுக்கு விரோதமானதாகும்.

(“ஊடகங்களுக்கான அறிக்கை – 12-10-2018” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.அமெரிக்க – சீன முரண்பாடு

(ஜனகன் முத்துக்குமார்)

ஐ.அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின், பெய்ஜிங்குக்கான அண்மைய (ஒக்டோபர் 8) விஜயம், குறைநிரப்பு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், ஐ.அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையீடு செய்ய முற்படுகின்றது என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியமையைத் தொடர்ந்து, சீனா அதன் அதிகாரபூர்வமான நிகழ்ச்சிநிரல்களில், ஐ.அமெரிக்காவை, சர்வதேச நிரல்களில் ஐ.அமெரிக்காவின் தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்த தொடங்கிய நிலையிலேயே, குறித்த விஜயம் முக்கியம் பெற்றிருந்தது.

(“ஐ.அமெரிக்க – சீன முரண்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

மகாவலி கங்கையும் வடக்கு மக்களும்

(சுப்பராயன் )

மகாவலி கங்கையை வடக்கே (முல்லைத்தீவு மாவட்டத்துக்கு) கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிக்கு அங்கு வாழும் தமிழ் மக்களிடமிருந்து (அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களிடமிருந்து) கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பு நியாயமானதா இல்லையா என்பதை ஆராய்வதற்கு முன்னர், மகாவலி கங்கையை வடக்கே திருப்பும் முயற்சியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தன்னும் பார்த்துவிடுவது பயனுள்ளதாக இருக்கும்.

(“மகாவலி கங்கையும் வடக்கு மக்களும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 12)

(Thiruchchelvam Kathiravelippillai)
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கான நடவடிக்கைகள் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழ் விடுதலை இயக்கங்களின் சில நடவடிக்கைகளும் அதற்குத் துணை செய்தன.
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே பெற்றனர். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி ஆரம்பத்தில் செல்வந்தர்களை அழைத்து அவர்களிடம் பண்பாகப் பேசி நிதியினைப் பெற்றனர். தொடர்ச்சியாக கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது அச்சுறுத்தல் விடுத்தல், குடும்ப உறுப்பினர்களைக் கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதியினைப் பெற்றனர். தமிழ் மக்களிடத்தில் இந்நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தினாலும் நமது பிள்ளைகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததனால் அது பெரிதான விடயமாகப் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களிடம் இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறியது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வரும் வரையில் தமிழ் இயக்கங்களின் நிதியீட்ட நடவடிக்கை கப்பம் வாங்குகின்ற செயற்பாடாக முஸ்லிம் மக்களால் பார்க்கப்பட்டது.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 12)” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்!

நமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.

(வானவில் பத்திரிகையை வாசிக்க….)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part9)

வன்னியிலிருந்தால் மரணத்தைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்ற நிலை. ஆனால் வன்னியை விட்டு எளிதில் வெளியேற முடியாது. அப்படிச் சுழித்துக்கொண்டு வெளியேறும்போது புலிகளின் கண்களில் சிக்கினால் அவ்வளவுதான். நெற்றிப்பொட்டுச் சிதறும். சுட்டுக் கொன்றுவிடுவார்கள் கொல்லப்படுவோர் தவிர இளவயதுடைய பெண்களையும் ஆண்களையும் பிடித்துச் செல்வார்கள். இளவயதினர் போருக்காகப் பிடித்துச் செல்லப்படுவர். இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஏதாவது வழியில் செல்லத் தொடங்கினால் கண்டமேனிக்குத் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளிவிடுவார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களும் காயப்படுத்தப்பட்டவர்களும் அதிகம். என்றாலும் சனங்கள் தப்பியோடுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சில சந்தர்ப்பங்களில் புலிகள் சுடச்சுடப் பலர் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடந்தார்கள். சிலர் தப்பியோடும்போது அவர்களுடைய குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். புலிகள் தடுக்கத் தடுக்கப் பொதுமக்கள்மீதான இராணுவத்தின் தாக்குதல்களும் அதிகரித்தன. மருந்துத் தடை, உணவுப்பொருட் தடை என்பனவும் தீவிரமடைந்தன.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part9)” தொடர்ந்து வாசிக்க…)

தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்

த ரம் ஐந்து புலமைப்பரிசில் திட்டம் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் நடைமுறையில் உள்ளது. படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களை பத்து வயதிலேயே இனம் கண்டு, அம் மாணவர்கள் ஏழைகளாக இருப்பின் பண உதவி மூலமாகவும் சிறந்த பாடசாலைகளில் அம் மாணவர்களை சேர்ப்பதன் மூலமும் முழுமையான கற்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதன் ஊடாகவும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு பங்களிப்பு செய்யக் கூடிய திறமைசாலிகளான இளைஞர்களை உருவாக்குவதே இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் நோக்கமாகும். எனினும் இருபது ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் இப் புலமைப்பரிசிலை பெற்றோர் ‘நீயா நானா’ போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை. தமது குழந்தைகள் தேர்ச்சி பெற்றால் மகிழ்ச்சி; தேர்ச்சி அடையாவிட்டால் பரவாயில்லை என்ற மன நிலையிலேயே பெற்றோரும் ஆசிரியர்களும் இருந்தனர்.

(“தரம் ஐந்து புலமைப்பரிசில் மாயையில் இருந்து பெற்றோர் விடுபட்டாக வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்

உவர் நீரையும், மண்ணையும் மாற்றி அமைப்பதற்கு

‘பூநகரியின் ஆறாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் கடல் நீர் உட்புகுந்ததால் உவர் மண்ணாகவும், உவர் நீராகவும் மாறியுள்ளது. இங்குள்ள சில குளங்களை உள்ளடக்கி ஏழு கி.மீ. அணை ஒன்று அமைக்கப்பட்டு பெரிய குளம் ஒன்று அமைக்கப்படுமானால் உவர் நீராகக் காணப்படும் கிணறுகள் நன்னீராகும். இரு போகங்கள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்’

(“பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)