சிரியா: பேரரங்கின் சிறுதுளி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போர் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை. அது சிக்கல்களுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கிறது. போர்கள் தொடுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்கள், பெரும்பாலும் தொடுக்கப்பட்ட போருக்கான உண்மையான காரணமாக இருப்பதில்லை. இதை வரலாறெங்கும் கண்டு வந்திருக்கிறோம். அதன் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.

(“சிரியா: பேரரங்கின் சிறுதுளி” தொடர்ந்து வாசிக்க…)

அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்

(Gopikrishna Kanagalingam)
திருகோணமலையிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், ஆசிரியர்கள் அபாயா எனப்படும், இஸ்லாமிய உடையை அணிவது தொடர்பில், அண்மைக்காலத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது. இது, சமூக வலைத்தளங்களில் அதிகப்படியான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

(“அபாயாக்களும் உரிமைகளும் யதார்த்தங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரியர் அபாயா அணியலாம்

இப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் ? தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா ? அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா ?

(“ஆசிரியர் அபாயா அணியலாம்” தொடர்ந்து வாசிக்க…)

‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’

உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம் (முடிந்தவரை அதிகமானவர்களிடம் கொண்டு சேருங்கள்.)
*********************************************************

“ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன… நான் உண்மையாகவே குற்றவாளியா…?”

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…!

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…

(“‘நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!’” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஓய்வுநிலை அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பிய அன்றே, மாநாட்டுக்கான குழு தொடர்பிலான அறிவிப்பும் வெளியாகி இருக்கின்றது.

(“விக்னேஸ்வரனுக்காகக் களமாடுவது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?

தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிக…ள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…

(“முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்

(எம். காசிநாதன்)
“தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டும்” என்று போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி மீது, “என்னிடம் தவறாக நடக்க முயன்றார்” என்று குற்றம் சாட்டி, “ஆளுநரை திரும்பப் பெறுங்கள்” என்று, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(“இந்திய அரசியலில் ‘ஆளுநர்’ பதவிகள்” தொடர்ந்து வாசிக்க…)

குறிப்பால் உணர்த்தல்

(மொஹமட் பாதுஷா)
அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், இம்முறை வசந்த காலத்தில், நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்றோரின் தொகை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. குறிப்பாக, முஸ்லிம்கள் வழமைபோல, நுவரெலியாவுக்குச் செல்லவில்லை என்பது வெள்ளிடைமலை. நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள், கூட்டிணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கை, வெற்றியளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகின்ற சமகாலத்தில், “இது ஒரு வேண்டத்தகாத நிலைப்பாடு” என்றும் சிலர், அபிப்பிராயம் வெளியிட்டு வருகின்றனர். அதாவது, நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றது.

(“குறிப்பால் உணர்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்

கடந்த ஐந்தாறு வருடங்களுக்குள் புலம்பெயர்ந்த மண்ணில் மிகப்பிரபலமாக வளர்ச்சியடைந்திருக்கும் துறை, ஊரிலுள்ள பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள். அந்த பாடசாலைகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் திடீரென்று தங்கள் பாடசாலைகளின் மீது காதல் கொண்டு பூமியை பிளந்துகொண்டு எழுந்திருக்கும் அந்த காட்சி புல்லரிக்கவைப்பவை. சொல்லப்போனால், இந்த பழைய மாணவர் சங்கங்கள் அரசியல் கட்சிகளைவிட பலம்வாய்ந்த தரப்புக்களாக – ஆளணியும் – பணபலமும் பொருந்திய அமைப்புக்களாக – கடந்த சில வருடங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஊரில் சில விடயங்களை செய்வதற்கு இந்த பழைய மாணவர் சங்கங்களை அணுகினால்தான் அது நடக்கும் என்கின்ற வரையிலான கட்டப்பஞ்சாயத்து ரேஞ்சுக்குக்கூட ஒரு சில அமைப்புக்கள் எழுச்சியடைந்திருப்பது வேறுகதை.

(“புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்

என்.ஈ.பி.எல் என்று அழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த பிறிமியர் லீக் உதைபந்தாட்டம் இலங்கையில் ஆரம்பிக்கிறது என்பது உலகம் முழதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும், உதைபந்தாட்ட ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீண்டெழ நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தின் இன்னொரு மைற்கல் இதுவாகும்.

(“வடக்குக் கிழக்கு ஒரு பிறிமியர் லீக் சமுதாயமாக மாறுவது போருக்கு பிந்திய வரலாற்றில் மைல் கல்” தொடர்ந்து வாசிக்க…)