ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?

தமிழகத்தில், குறிப்பாக தென் தமிழகத்தில், இஸ்லாமியருக்கும் பிற சமூகத்தவருக்கும் இடையே இன்றளவும் நிலவிவரும் மாமன் – மச்சான், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் என்ற ஒரே குடும்பம் போன்ற உறவு முறைகள், உலகில் வேறெங்கும் காணப்படாத, தமிழகத்துக்கும் தமிழருக்கும் மட்டுமே உரிய சிறப்புக் குணாம்சம்!

(“ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன.

(“உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம்” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்ப தில்லை. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்துவிட்ட தமிழ் மக்களின் உரிமை மீட்புப் போராட்டங்கள், நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் தாண்டியும் நீண்டு வருகின்றன.

(“கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்” தொடர்ந்து வாசிக்க…)

இன்னும் நிறைய கேள்விகள் மிச்சம் இருக்கின்றன!

தமிழக அரசியலிலும், ஆட்சியிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் விளக்கமளித்திருப்பது தொடர் விவாதத்துக்கே வழிவகுக்கிறது.

(“இன்னும் நிறைய கேள்விகள் மிச்சம் இருக்கின்றன!” தொடர்ந்து வாசிக்க…)

கண்டுகொள்ளப்படாத மானிடப் பேரவலம்

நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிற
கேப்பாபிலவின் நிலகேள்விப் போராட்டக் களத்தில்,
தங்களைத் தாங்களே உளஆற்றுகைப்படுத்தி கற்றலைக் கற்றுக்கொண்ட எம் பிள்ளைகள்.

(“கண்டுகொள்ளப்படாத மானிடப் பேரவலம்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்

தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.

(“புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வித்தியாவின் வாடகை வீடு

இன்று ஊர்காவற் துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வழக்கு நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டது. அதன் போது பெண்களுக்கெதிரான வன்முறையை எதிர்த்து கவனயீர்ப்பொன்று ஊர்காவற்துறை நகரத்தில் நீதிமன்றத்திற்கருகில் இடம்பெற்றது. இது முடிந்த பின் வித்தியாவின் தாயாரைச் சந்திக்கச் சென்றோம். இன்றைய தினம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

(“வித்தியாவின் வாடகை வீடு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் மரபின் நீட்சியே ஜல்லிக்கட்டு: மாடு வளர்ப்பு, மாட்டுத் தொழுவம் மறைந்த வரலாறு

(ஒய். ஆண்டனி செல்வராஜ்)
‘மாடு இல்லா வீடு பாழ்’ என்பது பழமொழி. ஏறு பூட்டி உழவு செய்வதில் தொடங்கி, மாடு கட்டிப் போரடித்து, தட்டு வண்டியில் பாரம் ஏற்றி மக்கள் பஞ்சம் போக்கியது வரை பண்டைய தமிழகத்தில் மாடுகளோடுதான் தமிழர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. அதனால், மாடுகளுக்காகவே விழா எடுக்கப்பட்டு, அந்த விழாக் காலங்களில் பொழுதுபோக்கவும், வீரத்தை நிரூபிக்கவும் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, மாடு ஓட்டம், மாடு மறித்தல், பட்டிப் பொங்கல், கன்று காணிக்கை, தம்பிரன் மாடு, சலங்கை எருது ஆட்டம், மாட்டு வண்டிப் பந்தயம், மாட்டு வாகடம் போன்ற வீர விளையாட்டுகள், பாரம்பரியமாக நடைபெற்று வந்தன.

(“தமிழர் மரபின் நீட்சியே ஜல்லிக்கட்டு: மாடு வளர்ப்பு, மாட்டுத் தொழுவம் மறைந்த வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

பன்னீர்செல்வம்

“இவரே பரவாயில்லை…!..இவர்தான் வேண்டும்..!” என்று மக்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ள தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பற்றிய சில தகவல்கள். “பேச்சிமுத்து” என்ற கிராமத்து மணம் வீசும் தமிழ்ப்பெயர்தான் அவரின் இயற்பெயர். இந்த பெயர் வீட்டில் மூத்தவர் ஒருவரின் பெயராக இருந்ததால், பன்னீர்செல்வமாக மாறினார். இளவயதில் எம்ஜிஆர் பக்தராக வலம்வந்த இவர் அவரைப்போலவே “ஓபிஎஸ்” என்னும் மூன்றெழுத்துடன் அரசியல் உலகில் வலம்வரத்தொடங்கினார்.

(“பன்னீர்செல்வம்” தொடர்ந்து வாசிக்க…)