300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம்

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தோழருக்கு அஞ்சலி

சுன்னாகம் தெற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் விங்கன் (ஐயாத்துரை லிங்கேஸ்வரன்) தனது 55வது வயதில் நேற்று 30.04.2022 காலமான துயரச் செய்தி கிடைத்திருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தீர்மானம்

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு சிங்கள மக்களுக்கும் அழைப்பு

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மாபெரும் வேலைநிறுத்த போராட்டம்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாததற்கு எதிராக 1,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

நாட்டின் பொறுப்பை ஏற்க தயாராகி வரும் ஐ.ம.சக்தி

மக்கள் ஆணையின் ஊடாக நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கு உடனடி தீர்வைக் கோரி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி  ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி இன்று கலிகமுவவை வந்தடைந்தது.

யார் சொன்னாலும் போக மாட்டேன் முடிந்தால் அனுப்புங்கள் – மஹிந்த ராஜபக்ஷ

“யாருக்காவது என்னை அனுப்ப முடியுமானால் அனுப்புங்கள்“ என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் விரைவில் பதவி விலகப் போவதில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு

ராஜபக்‌ஷர்கள் குடும்பமே கூடி, நள்ளிரவு வரையிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில், சமல் மற்றும் நாமல் ராஜபக்‌ஷர்கள், உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்துள்னர். ஜனாதிபதி ​மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர் என்றும் நேற்று (25) நள்ளிரவு வரையிலும் அந்தப் பேச்சுவார்த்தை

கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அதன்போது, சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அழைக்குமாறு சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.