கறுப்பு சந்தை விவகாரம்: மறுக்கிறது அமைச்சு

யுத்தத்தின் போது கறுப்புச் சந்தை டொலரைப் பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை அரசாங்கம் கொள்வனவு செய்ததாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார் என, நேற்று (31) வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

கடுமையாக உயர்ந்தது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 1,156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 613,478 ஆக அதிகரித்துள்ளது.

அபாயா ஆடையால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை

அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

பிரபஞ்ச புதிர்களுக்கு விடை தேடும் பயணம் ஆரம்பம்

ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம்  சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது.

வடக்கு நடுகடலில் பதற்றம்: 21 மீனவர்கள் கைது

தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

கடுமையாக அதிகரித்தன மரணங்கள், தொற்று. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

மஹிந்த விரைவில் குணமடைய சீன சபாநாயகர் வாழ்த்து

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விரைவில் குணமடைவதற்கு வாழ்த்துத் தெரிவித்து சீனமக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்றத்தின் சபாநாயகர்) லீ சன்ஷூ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்

சடுதியாக உயர்ந்தது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளது.

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்ரிகர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார்.