மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தொடர்பில் கனடா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் வாழும் கனடா பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக கனடா கூறியுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டுக்கு 102ஆவது இடம்

2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின்  கடவுச்சீட்டுக்கள்  2022க்கான உலகின் மிகச் சிறந்த  கடவுச்சீட்டுகள்  என்று  தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

சமூக மாற்றத்திற்கு கரம் கொடுக்கும் ’’ மலையக விழிகள் ’’அமைப்பு

பதுளை -கந்தேகெதர பகுதியை தளமாகக் கொண்டு கடந்த வருடத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட “மலையக விழிகள்” அமைப்பானது, நம்நாட்டிலிருந்து வாழ்வாதாரம் தேடி மத்திய கிழக்குக்குச் சென்றுள்ள நம்மவர்களின் எண்ணக்கருவில் உதயமாகியுள்ளது. 

ஒமைக்ரோனுக்கான புதிய தடுப்பூசி அறிமுகம்

ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுக்கு எதிராக புதிய தடுப்பூசியைத்  தயாரித்து வருவதாகவும்,வரும்  மார்ச் மாதம் அதன் பணி நிறைவடையும்  எனவும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு முனைய பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக் கழகம்: மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை கலவரம்; எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12)  தீர்ப்பளித்துள்ளது.

மூவருக்கு புதிய தொற்று புளோரோனா

மெக்சிகோ 3 பேருக்கு புளோரோனா எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் அடையளங்காணப்பட்டுள்ளது.