பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் அச்சட்டம் திருத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பு அடுத்த மாதம்?

புதிய அரசியலமைப்புக்கான வரைபு அடுத்த மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஸ் டி சில்வா தலைமையிலான குழு, அதன் பணிகளை இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  ஜனாதிபதியிடம் இந்த வரைபு கையளிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி அதனை ஆராய்வார் எனவும் அதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஒமிக்ரோன் தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு

ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.

கனடா உறைபனியில் இறந்த குஜராத்திகள்

என்.ஆர்.ஐ.களின் கிராமம் என்று அறியப்படுகிறது.
குஜராத்தில், காந்திநகர் மாவட்டம், கலோல் வட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் நுழைந்தவுடன், ஆளரவமற்ற ஒரு பங்களா எல்லோரையும் வரவேற்கும். கடந்த சில நாள்களாக இந்த பங்களா ஊடகத்தினர் சூழ்ந்து நிற்கும் பரபரப்பான இடமாக ஆகியிருக்கிறது.

இலங்கை சிறையில் உள்ள 55 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு  மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

சைக்கிளில் சென்றால் ஊக்கத் தொகை

காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சோவியத் குடியரசு போல சீனா சிதறும் ஆபத்து; சீன வெளியுறவு துறை எச்சரிக்கை

சீனாவின் சி.பி.பி.சி.சி. எனப்படும் அரசியல் ஆலோசனை உயர் மட்டக் கமிட்டி தலைவரான ஜியா குய்ங்குவா சர்வதேச பாதுகாப்பு ஆய்வு இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: சோவியத் குடியரசு தேச பாதுகாப்புக்காக அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தது. அதனால் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்க நேர்ந்தது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆவணங்கள்… பீதியில் டிரம்ப்

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் பதவியில் இருந்த காலகட்டத்தில் அவர் அமெரிக்க ராணுவத்துக்கு அளித்த ஓர் உத்தரவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்களா? சல்மான் கான் மீது பக்கத்து வீட்டுக்காரர் குற்றச்சாட்டு

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு வருவதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுக்களை அந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நபர்கள் சுமத்தி இருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீடு அவரது சகோதரி அர்பிதாவின் பெயரில் உள்ளது. சமீபத்தில் அந்த தோட்டத்தில் தான் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது குறிப்பிடத்தக்கது.