சீன அமைச்சருடன் ஜனாதிபதி பேசியது என்ன?

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச்சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டொலர்கள் குறைந்துள்ளதாகவும் இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

கணிசமான அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 580 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 591,231 ஆக அதிகரித்துள்ளது.

17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய இராணுவம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன், பனிக் காற்றும் வீசி வருகிறது. கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றிய வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

சீனா: நீருக்குள் செல்லும் மிக நீண்ட சுரங்கப்பாதை

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட  நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையை (underwater highway tunnel)அந்நாட்டு அரசு பொதுமக்கள் பாவனைக்காக  அண்மையில் திறந்து வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான்: பொம்மைகளில் இனிமேல் தலை இருக்கக் கூடாது

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள்”திருமணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, சலூன் கடைகளில் தாடியை எடுக்கக் கூடாது, பெண்கள் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’  என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்

வல்வெட்டித்துறையில், வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தில; நடத்தப்படும் பட்டத் திருவிழா, இந்த ஆண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது.   வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் வருடாந்தம் பட்டத் திருவிழா நடைபெறுவது வழமை.   இந்த நிலையில், அந்தப் பகுதி மக்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவுக்கும் இடையில், நேற்று முன்தினம் (05) நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரமே, பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டது.   அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கடந்த ஆண்டும் பட்டத் திருவிழா நடைபெறவில்லை.   இதேபோன்று, இந்த ஆண்டிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பட்டத் திருவிழாவை இடைநிறுத்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.   இதையடுத்தே, பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், இந்தப்  பட்டத் திருவிழாவை இந்த ஆண்டு சர்வதேச பட்டத் திருவிழாவாக இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.    இந்த விடயம் பல எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்: அறிவித்தார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அதிரடி சலுகைகள்

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக  சீனா விளங்குகிறது. எனினும் சமீபகாலமாக சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதன்படி கடந்த 2020 ல் சீனாவிலுள்ள ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.52 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.