புங்குடுதீவைச் சேர்ந்த 20 பேர் சுயதனிமையில்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஓமந்தையை மாசுபடுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை

வவுனியா – ஓமந்தையில் இயங்கும் ஈயத்தொழிற்சாலையால் இயற்கை மாசுபடுத்தப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக, குறித்த தொழிற்சாலையின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அங்கு சென்று நேரடியாக பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

பரிஸ்யை உலுக்கிய தமிழ் குடும்பப் படுகொலைகள்!

(Thambirajah Jeyabalan)

இரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! ஐவர் மருத்துவமனையில்!!
கொலையாளி தற்கொலை முயற்சியிலில் இருந்து தப்பி மருத்துவமனையில்!!!
பாரிஸில் தமிழர் வாழும் பகுதியான நொய்ஸ்-லி-சக் இன்ற இடத்தில் இன்று காலை நடந்த கொடிய சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் ஐவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ட்ரம்ப் தம்பதியினருக்கு கொரோனா உறுதியானது

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

’அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் 26 பிரிவினைவாத ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்’

அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் நகொர்னோ-கரபஹ் பிராந்தியத்தில் குறைந்தது 26 பிரிவினைவாதப் போராளிகள் கொல்லப்பட்டதாக இப்போராளிகளின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இம்மோதல்களில் அவர்களின் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 84ஆக அதிகரித்துள்ளது.

அசிங்கமாக ட்ரம்ப்பும், பைடனும் மோதல்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது விவாதத்தில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரது போட்டியாளரான முன்னாள் உப ஜனாதியான ஜோ பைடனும் காரசாரமாக ஈடுபட்டிருந்ததுடன், சில சமயங்களில் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களையும் பரிமாறியிருந்தனர்.

தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் ஆவானெனவும் கூறினார்.

‘பாடும் நிலா’ மறைந்தது

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சற்று முன்னர் உடல நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது

தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள், கடந்த சனிக்கிழமை (11) முதல் முன்னெடுத்துவரும் போராட்டம் 10ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.