அசிங்கமாக ட்ரம்ப்பும், பைடனும் மோதல்

முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் இடதுசாரிக் கொள்கைகளையுடையவர் எனவும், சோஷலிசத்தை முன்னெடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பகிரங்கமான இனவாதியொருவர் என அழைத்த முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன், தொடர்ந்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீடுகளை மேற்கொண்ட நிலையில் அவரை வாயை மூடுமாறு கூறியிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோமாளியொருவர் என அழைத்திருந்த முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன், நேயர்களை நேரடியாகப் பார்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொய்யர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சில சமயங்களில் தொகுப்பாளர் கிறிஸ் வோலஸ் கொள்கைப் பிரச்சினைகளில் கவனஞ் செலுத்த முயன்றபோது அதை முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் மீதான தனிநபர் தாக்குதல்களாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றியிருந்தார். சீனாவுடன் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனின் வர்த்தக ஒத்துழைப்புகளை குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் மேயரின் மனைவியிடமிருந்து அவர் நிதியைப் பெற்றததாகவும் குறிப்பிட்டிருந்தார்.