திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்குத் திரும்பியது

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக, அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை, 70 நாள்களின் பின்னர் இன்றைய தினம் (01) மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.

வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக-கேரள எல்லைகளில் வேளாண் களப்பணியாளர்கள் கண்காணிப்பு

தமிழக விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லையென்ற போதிலும், அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வெட்டுக் கிளிகள் தென்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இப்பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற புத்தகத்தில் இருந்து……

1. புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் வர்த்தகரான எமில் காந்தன் மூலமாக உள்நாட்டு வெளிநாட்டு நாணயங்களாக கையளிக்கப்பட்டது.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு அனுதாபமும், அஞ்சலியும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும், அமைச்சராகவும் பதவிவகித்த அமரர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக செயற்பட்ட ஒருவர். அவரது திடீர் மறைவையிட்டு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான் களமிறக்கம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் அவருக்குப் பதிலாக நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.காவின் இளைஞரணி தலைவர் ஜீவன் தொண்டமானை களமிறக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வயது (55) சற்று முன்னர் காலமானார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் காலமானார் என, தலங்கம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் பூகோளத்தில் அதிக தொற்றுக்கள்

பூகோள ரீதியில் கொவிட்-19 பரவல் ஆரம்பித்த பின்னர் நாள் ஒன்றுக்கு ஏற்பட்ட அதிக தொற்றாக கடந்த செவ்வாய்க்கிழமை பூகோள ரீதியில் தமக்கு 106,662 தொற்றுக்கள் பதிவானதாக உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு ஆதரவா? கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்: ஆஸ்திரேலியாவுக்கு சீனா எச்சரிக்கை

சீனாவிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகை குலைநடுங்க செய்து வருகிறது. உலகம் முழுதும் 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 604 பேர் மரணமடைந்துள்ளனர். ஆறுதல் செய்தி என்னவெனில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,81,689 பேர்களாக உள்ளது.

மரண அறிவித்தல்: நடராசா பூமணி

எம் அனைவராலும் அக்கா என அழைக்கப்படும் தோழர் ராஜி ( ஞானசக்தி), தோழர் பத்மநாதன், காலமான தோழர் அப்பன் ( ஈரோஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும், தேரழர் சுகு சிறிதரன் அவர்களின் மாமியாருமான நடராசா பூமணி ( 89 ) உரும்பிராய் கிழக்கு 19.05.2020 அன்று காலமான துயரச் செய்தியை தோழர்கள் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதுடன். அன்னாரின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.