‘ஊழல் இல்லாத கூட்டணியுடன் போட்டி’

ஊழல் இல்லாத கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் களமிறங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

‘வவுனியாவை தலைநகரமாக்கவும்’

யுத்தம் காரணமாக பாரிய அழிவுக்கு முகங்கொடுத்த வவுனியா நகரத்தை இலங்கையில் தலைநகரமாக்கி அபிவிருத்திகளை முன்னெடுப்பதன் ஊடாக, இனங்களுக்கு இடையில் நல்லிணகத்ததை ஏற்படுத்தவும், தேசிய பிரச்சினைக்கு தீர்வுப்பெற்றுக்கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

எனது அன்புத்தாயார் உடல் உபாதையிலிருந்தும் உலகஉபாதையிலிருந்தும்
விடுதலையாகிவிட்டார் என்பதை
தோழர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மனவேதனையுடன் அறியத்தருகின்றேன்

‘அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் கூட்டணி அமைச்சர்கள்’

அரசாங்கத்தின் மீது அதிருப்தியில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் உள்ளனர் என்று, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

‘பாகிஸ்தான் தலையிடுவதற்கு இடமில்லை’

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரில் வன்முறையைத் தூண்டுவதற்கும் மற்றும் ஆதரவளிப்பதற்கும் பாகிஸ்தானை இன்று (28) சாடியுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மிரின் சுயாட்சியை இந்திய அரசாங்கம் பெற்றமையானது உள்நாட்டுப் பிரச்சினை என்பதற்கு ஆதரவளித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுட்கைதிகள் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட்தண்டனைத் தீர்ப்புப் பெற்ற ஏழு பேரை விடுவிக்கும் தீர்மானம் தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று (29) உத்தரவிட்டது.

‘அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றுகின்றனர்’

நடைமுறையில் உள்ள முறையில் ஆட்சியை தொடரும் நோக்கிலேயே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, தான் அவ்வாறு இல்லாமல் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். இதுவே தனக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ள பாரிய வேறுபாடு என்றும் அவர் கூறினார்.

பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்

(George RC)
அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது, ரொறன்ரோவில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் புலிக் காடையர்கள் பின்னால் நின்று தமிழ்ப் பட வில்லன்கள் மாதிரி பார்வை பார்த்து சீன் போட்டதை நேரில் காண நேர்ந்தது. அவர்களுக்குப் பயந்து, ‘என் தலைவன் இறந்து விட்டான். அவனை நினைத்து அழும் உரிமையைத் தாருங்கள்’ என்று யாசித்து நின்ற கணம் பற்றி எழுதியிருக்கிறேன்… பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விக்கித்துப் போய் நின்ற புலிக் கூட்டம் பற்றி எழுதிய போது!

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு இந்திய தனியார் நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.