மஹிந்தவுடன் ஈரோஸ் இணைந்தது

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் ஈரோஸ் கட்சி இணைந்து கொண்டுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

மனிதனின் ஆயுள் 300 ஆண்டு.

பிறந்த முயல் குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து விடுகிறது மீண்டும் குட்டி போட ஆரம்பித்து விடுகின்றது, அதனுடைய ஆயுள் 60 மாதம்,

பிறந்த ஆட்டுக்குட்டி அரை வருடத்தில் வயதுக்கு வந்து குட்டி போட ஆரம்பிக்கின்றது, ஆடுகள் சுமார் 10 ஆண்டுகள் உயிர் வாழும்

ஒரு பசு மாட்டின் கன்று பிறந்த ஒரு வருடத்தில் பருவம் அடைந்து கன்று போட ஆரம்பிக்கின்றது, பசு மாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள் ஆகும்,

02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள்.புதிய நேர அட்டவணை

யாழ்ப்பாணம் புறப்படுதல் – கொழும்பு சென்றடைதல்.
———————————————————
உத்தரதேவி
காலை 6.10 மணி – பிற்பகல் 1.15 மணி
புதுரெயின்-01
காலை 6.25 மணி – பிற்பகல் 4.00 மணி
யாழ்தேவி
காலை 9.35 மணி – இரவு 7.15 மணி
ஏசி இன்ரசிற்ரி
பி.ப.1.45 மணி – இரவு 8.15 மணி
புதுரெயின்-02
மாலை 6.40 மணி-அடுத்த நாள் காலை 4.30மணி 
தபால் ரெயின்- Mail Train
இரவு 8.25 மணி -அடுத்த நாள் காலை 5.30மணி

கொழும்பு புறப்படுதல் – யாழ்ப்பாணம் வந்தடைதல்
———————————————————–
ஏசி இன்ரசிற்ரி
காலை 5.45 மணி – பிற்பகல் 12.05 மணி 
யாழ்தேவி
காலை 6.30 மணி – பிற்பகல் 3.00 மணி
புதுரெயின் – 01
காலை 8.50 மணி – மாலை 6.30 மணி
உத்திரதேவி
காலை 11.50 மணி – மாலை 6.15 மணி 
புதுரெயின் -02
இரவு 7.15 மணி – அடுத்த நாள் காலை 4.30 மணி
தபால் ரெயின் -Night Mail
இரவு 9.00 மணி – அடுத்த நாள் காலை 5.30 மணி
————————————————————-
தற்போது கொழும்பு யாழ் பயணம் செய்யும் ஏசி இன்ரசிற்ரி ரெயினில் F பெட்டியைத் திருத்த வேலைக்கெனக் கழட்டி 2 மாதங்கள். அதில் 54 பேர் பயணம் செய்யலாம்.
அப் பெட்டி இன்னமும் பூட்டப்படவில்லை.

அது குறித்து எமது அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கவனம் எடுக்க வேண்டும்.

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இது என்பதுதான் இந்தத் தரவை முக்கியத்துவப்படுத்துகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% ஆகவும், 2018 முழுவதுமாக 6.6% ஆகவும் வளர்ச்சி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகால சட்டம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை 38 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி சபையில் இல்லை.

முஸ்லிம் அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவியேற்பு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர். ஜுன் மாதம் 3ஆம் திகதி அமைச்சரவை, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தனர். அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகிய இருவரும் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், எஞ்சியிருந்த 7 பேர் தமது பதவிகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுள்ளனர்.