மனிதனின் ஆயுள் 300 ஆண்டு.

இது போல் 15 வயதில் பருவம் அடைந்து குழந்தை பெறத் தயாராகும் மனித இனமும் அதைப்போல் 20 மடங்கு, அதாவது 20×15=300 ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும்,

பழங்கால மனிதர்கள் சுமார் முந்நூறு வருடங்கள் வாழ்ந்ததாக இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்,

மேலும் மண்ணின் கீழ் புதைந்து உள்ள மண்தாளிகள் மூலமாக கண்கூடாக தெரிகின்றது, அக்காலத்தில் மனித உடல்கள் உயிர் பிரியாது இருக்கும் நிலையில் அந்த உடலும் உயிரும் இந்த உலகுக்கு பயன் தராத போது மண்தாளிகளில் உணவும் நீரும் வைத்து உயிருடன் புதைக்கும் பழக்கம் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டது என்பதற்கு இந்த மண்தாளிகள் தான் சான்று , இந்த காலத்தில் மனிதன் ஏன் அவ்வாறு வாழ இயலாது போனது ?

இந்த மனிதன் ஒரு நாள் மட்டும் சமைத்த உணவு சாப்பிட்டால்,அந்த மனிதனின் ஆயுளில் ஒரு நாள் குறையும், எனவே வாழ்நாள் முழுவதும் சமைத்த உணவை சாப்பிடும் மனிதன்150 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடிவதில்லை. சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்காமையால் மேலும் அவனுடைய ஆயுள் குறைகின்றது.

புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பல தீய பழக்க வழக்கங்கள் ஆயுளை அதிகமாக குறைக்கின்றது. இப்படிப்பட்ட பல காரணங்களால் மனிதனின் ஆயுள் நூற்றுக்கும் கீழே வந்து விட்டது.

மனிதன் நோயாளியாவதற்குரிய காரணங்கள் அனைத்தையும் இனி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள போகின்றோம். மனிதன் தனக்கு தேவையான சரியான உணவுகளை சாப்பிடாமல் ஆரோக்கித்தை அழிக்கும் விஷங்கள்நிறைந்த உணவுகளை சாப்பிடுவதனால் நோயாளி ஆகின்றான்

எனவே உணவை மாற்றினாலே நலம் பெற்றிடலாம். உதாரணமாக நாம் காய்கறிகள் வாங்க கடைக்கு போகிறோம், அங்கு கீரைகளோ, அவரைக்காய், பீன்ஸ் முதலியவைகளோ அதிகமாக வாடியிருந்தால் வாங்குகின்றோமா? வாடியிருக்கும் அந்தக் காய்கறிகளில் சத்துகள் செத்துப் போயிருக்கும் என்றுதானே வாங்க மறுக்கின்றோம், அப்படியானால் அவற்றை நாம் அடுப்பில் வேகவைத்துச் சாப்பிடும் போது அவற்றின் சத்துக்கள் அழிந்து விடும், குறைந்து விடும் என்று ஒரு நிமிடமாவது நாம் சிந்திக்கிறோமா?.
*சமைக்காத உணவுகளில் தான் மனிதனுக்கு தேவையான எல்லா உயிர் சத்துகளும், வைட்டமின்களும், இயற்கையாகவே அமைந்துள்ளன அவைகள் உணவுகளை ஜீரணம் செய்ய மிகவும் உதவுகின்றன. எனவே சமைக்காத காய்கறிகள், பழங்கள் ஆகியன வயிறு நிறைய சாப்பிட்டாலும் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகி இரத்ததுடன் கலந்து விடும், அதற்கு பிறகு பசி தோன்றினாலும் தண்ணீர் அருந்தினால் போதும், சாப்பிட்டால் பசி எடுக்க கூடாது என்று நினைத்துக்கொண்டு நாம் எளிதில் ஜீரணிக்க முடியாத சமைத்த செத்துப் போயிருக்கும் உணவுகளை கொண்டு வயிற்றை நிரப்புகின்றோம்.

🙏ஆயற்பாடி இயற்கை மருத்துவமனை ஜீவா வீதி,அனுப்பர்பாளையம் திருப்பூர் தொடர்பு எண்கள்,8778102307,9965042543,
வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்