தவணை பரீட்சையின் போது காலி மாவட்டப் பாடசாலையில் நடந்தேறிய நெகிழ்ச்சியான சம்பவம்!

தென்னிலங்கையின் காலி மாவட்டம் உடலமத்த எனும் இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 23.07.2019 அன்று மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

மலர்ந்தது மொட்டின் புதுக்கூட்டு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று முற்பகல் கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம்: சகிப்புத்தன்மையை உறுதி செய்யவேண்டும் – மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவையில் இன்று நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதை எழுப்பிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பியான சு.வெங்கடேசன், சகிப்புத்தன்மையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மூதூர் பிரதேச பிரிப்பு சம்மந்தமாக…

தற்போது மூதூர் பிரதேச செயலக விடயம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது. தோப்பூர் என்ற புதிய பிரதேச செயலகம் உருவாக்கம் நிறைவடையும் நிலையில் தோப்பூர் பிரதேச செயலக எல்லைக்குள் கீழ்க்காணும் தமிழ் கிராமங்கள் இனணக்கப்பட்டுள்ளததாக அறியக் கிடைத்துள்ளது.

சுதந்திரக் கட்சி ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், இலங்கையில் முதல் தடவையாக கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று, 36 வருடங்கள் கடந்துவிட்டதை நினைவுக்கூர்ந்தும், கலவரத்தில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

’தாக்குதலுடன் ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சாட்சிகள் இல்லை’

குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன், ஐ.எஸ் அமைப்புக்கு ​தொடர்பு இருப்பதாக, எவ்வித சாட்சிகளும் கிடைக்கவில்லையென, குற்றப்புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், இன்று சாட்சியம் வழங்கும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மனோகணேசனால் முடியுமென்றால் கூட்டமைப்பால் ஏன் முடியாது?: முன்னாள் முதலமைச்சர் கேள்வி!!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மனோ கணேசனால் கொடுத்திருக்கின்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தால் 13 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் ஏன் நிறைவேற்ற முடியாமலிருக்கின்றது. ஏன் அவர்கள் சென்று அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை என இணைந்த வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ. வரதராஜப் பெருமாள் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்ரீ வித்யா… அதிசய ராகம்! – இன்று ஸ்ரீவித்யா பிறந்தநாள்

(வி.ராம்ஜி)
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம். ஆனால் இதில் உள்ள இயக்குநர்களையோ தயாரிப்பாளர்களையோ, இசையமைப்பாளர்களையோ ஒளிப்பதிவாளர்களையோ, நடிகர்களையோ நடிகைகளையோ… ஓர் கலைஞராக, திறமைசாலியாக மட்டுமே நாம் பார்ப்பதில்லை. மனசுக்குள் இடமிட்டு, ஓர் சிம்மாசனத்தையும் போட்டு, அமரவைத்து அழகுபார்க்கிறோம். அவர்கள் அமரர்களாகிவிட்ட போதும், அந்த இடம் அவர்களுக்குத்தான்! அப்படியொரு இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர்… ஸ்ரீவித்யா.
மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்ரீவித்யா. இவரின் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி என்கிற எம்.எல்.வி. கர்நாடக சங்கீத உலகின் தனிப்பெருங்குயில். அப்பேர்ப்பட்ட பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து திரையுலகுக்கு வந்தார் ஸ்ரீவித்யா.

கர்நாடக அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

சமரசம் குறித்த ட்ரம்ப்பின் பேச்சை மறுத்தது இந்தியா

காஷ்மிர் விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமக்கு வேண்டுகோள் விடுத்தததாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அந்தக் கருத்துக்கு, இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.