இது இலங்கை அரசியல் வரலாற்றில முதல்தடவை;

இன்று ஆரம்பம்-08/07/2021- பசீல் ராஷபக்‌ஷவின் பாராளுமன்ற பிரவேசத்துடன் ஆரம்பமாகியுள்ளது..! இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஒரேதடவையில் இருப்பது இதுவே முதல்தடவை

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘பாவம்’ பாண்டி ஆறு: வந்தால் போகமுடியாது; போனால் வரமுடியாது

(பலாங்கொடை மஹிந்த குமார்)

இரத்தினபுரி, பம்பரளகந்த பிரதேசத்தில் ‘சலசல’ எனப் பாய்ந்தோடும் பாண்டி ஆற்றை கடந்து செல்ல, பாலம் இல்லாமையால், பாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இன்று, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை என்ன? என்ற கேள்விக்கான ஒருமித்த பதிலை, ஈழத்தமிழ்ச் சமூகத்தால் சொல்லிவிட முடியாது. அதேபோலவே, ஈழத்தமிழர் என்ற வரையறைக்குள், யாரெல்லாம் அடங்குகின்றார்கள் என்பதற்கும் ஒருமித்த பதில் இல்லை.

பசிலின் மறுபிறவி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.

முருகனுக்கு அமைச்சர் பதவி?

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்குமா? என்ற ரீதியில் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்தன. அந்த வகையில், எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு நாள் வாரம் வெற்றி

ஐஸ்லாந்தில் நான்கு நாள் வாரம் ஒன்றுக்கான சோதனைகள் பாரியளவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இதனால் பல பணியாளர்கள் குறைந்தளவு மணித்தியாளங்கள் நகருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சோதனைகளின்போது குறுகிய மணித்தியாலங்களுக்கு அதேயளவான ஊதியத்தை பணியாளர் பெற்றிருந்தனர்.

வீணடிக்கப்படும் காலம்

(மொஹமட் பாதுஷா)

மக்களின் பிரச்சினைகளும் நாட்டின் முன்னேற்றமும் கருத்தில் கொள்ளப்படாமல், வெறுமனே காலத்தை வீணடிக்கின்ற அரசியலும் ஆட்சியும் நிறைந்த பூமியாக, இலங்கை மாறியிருக்கிறது. இந்த ஆட்சியில் மட்டுமன்றி, கடந்த நல்லாட்சிக் காலத்திலும் காலம் இப்படித்தான் கழிந்து போனது.

இணைய வழியில் ஒரு கண்ணை வைத்திருப்பதே உகந்தது

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில், இணையவழி கல்வி, திறன்பேசிகள், மடிக்கணினி ஆகியவை ஊடாகவே மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.