கந்தளாயில் நில அதிர்வு

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் இன்று (12) மதியம்  சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக கந்தளாய் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கந்தளாய் குளத்திற்கு அருகேயுள்ள கோயில் கிராமம்,முள்ளிப்பொத்தானை  அண்டிய பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக   பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

ஐஸ்லாந்தில் 1400 நிலநடுக்கம்: அவசர நிலை பிரகடனம்

ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன 24 மணி நேரத்தில் சுமார் 1400 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

“DJ night” நிகழ்வு: நடந்தது என்ன?

எமது ஹோட்டலில் “DJ night” நிகழ்வு முடியும் வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் நிகழ்வு முடிந்த பின் வந்திருந்தவர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றனர் என ரில்கோ ஹோட்டல் முகாமைத்துவம் விளக்கமளித்துள்ளது.

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் தினங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

“பழிவாங்கவே நாடு திரும்பினேன்”

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்திகதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர்.

காசாவில் 50 ஆயிரம் பேருக்கு 4 கழிவறைகள்: செவிலியர் தகவல்

காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

காப்பாற்றக்கோரி நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலகம் முன்பாக   வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நெருக்கடிக்கு மத்தியில் விடைபெறும் மூத்த வீரர்கள்

இலங்கை அணியில் இருந்து பல மூத்த வீரர்கள் விடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக்கிண்ணத் தொடரில் பங்கு பற்றிய இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. ஏனைய போட்டிகளில்  படுதோல்விகளை சந்தித்த இலங்கை அணி இன்று காலை நாட்டை வந்தடைந்தது.