இன்று நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

(வரதராஜா பெருமாள் அவர்களினால் கல்முனையில் இருந்து வெளிவரும் கல்முனைநெற் எனும் பத்திரிகைக்கு அளித்த பேட்டி) 09-04-2021 ல் வெளியிடப்பட்டது

கேள்வி:- வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது சாத்தியமா?

பதில்:- சர்வதேச அரசியலிலும் சரி உள்நாட்டு அரசியலிலும் சரி சாத்தியமாகாது எனக் கருதப்படும் விடயங்கள் ஒரு நீண்டகால வரலாற்றோட்டத்தில் சாத்தியமாகவும் கூடும். எனவே இது சாத்தியமாகும் – சாத்தியமாகாது என வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு பற்றி எதனையும் ஒற்றை வசனத்தில் கூறிவிட முடியாது. உலக வரைபடத்தில் இருந்த பல நாடுகள் காணாமற் போய்விட்டன – இல்லாமல் இருந்த பல நாடுகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், இன்று இலங்கையில் நிலவும் அரசியற் சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

கரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை மாற்ற பாஜக மேலிடம் திட்டம்?

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோரின் அலட்சியத்தாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

கே.ஆர்.கௌரி: பொதுவுடைமை நாயகி!

கேரளத்தின் உத்வேகமிக்க கம்யூனிஸ்ட் தலைவரான கே.ஆர்.கௌரி (102), முதுமை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக செவ்வாய் அன்று காலமானார். கேரளப் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகக் குரல் கொடுத்த கௌரி, கேரளச் சட்டமன்றத்தில் அதிக காலம் பணியாற்றிய பெண் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தின் மிக வயதான பெண் உறுப்பினர், வயதான பெண் அமைச்சர், தேர்தல்களில் அதிக வெற்றியைப் பெற்றவர் எனப் பல முதன்மைகளுக்குச் சொந்தக்காரர். கேரளம் இதுவரை பார்த்த திறமையான நிர்வாகிகளுள் ஒருவர்.

எம்பிக்கொரு நீதி ஏழைக்கொரு ஒரு நீதியா?

நேற்றைய தினம் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரனின் பிரேத்தியேக செயலாளர் முரளி என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ள்ளார். 
அதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இவளும் என் மகள்தான்…..

(சாகரன்)

50 வருடங்களுக்கு மேலாக தொடரும் அகதி வாழ்க்கை போராட்டம். இல்லாத ஊருக்கு தேசத்திற்கு உரிமை கோரி உலகின் யூத மூளையினால் சின்னா பின்னமாகிய மக்கள். ஒரு குடையின் கீழ் இணைந்து பிஎல்ஓ(PLO) என்ற அமைப்பை உருவாக்கி உலகின் பல நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம்.

இந்த ஒரு குடையின் கீழான ஐக்கிய முன்னணியில் யசீர் அரபாத்தின் Fatah அமைப்பும் இடதுசாரி சிந்தனையை உறுதியாக பின்பற்றி ஜோர்ஜ் ஹபாஸ் இன் கட்சியும் ஏனைய விடுதலை அமைப்புக்களும் இறுதி வரை என்று இன்று வரை பயணிக்கும் நிலமைகள்.வலதுசாரிச் சிநதனை இடதுசாரி;ச் சிந்தனை என்று இரு வேறுபட்ட சிந்தனைகள் இருந்தாலும் பாலஸ்தீனம் என்ற நாட்டை தாங்கி கொள்ளுல் என்பதில் ஒருமைப்பாட்டை மையப்படுத்தி செயற்படும் சிறப்பு.

ஐ.நாடு சபை கூட அங்கீகரித்த பாலஸ்தீன தேசம். அவர்களின் தேசத்தில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலையும் மறுபுறத்தில் அங்கீகரித்து இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பிற்கு ஒப்புதலும் வழங்கியதால் இன்று வரை தீராமல் தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சனை மத்தியதரைப் பிரச்சனை.இஸ்ரேலின் இராணுவத்திற்கு பயந்து எகிப்தின் நாசர் உட்பட சில இஸ்லாமிய நாடுகள் அமெரிக்க இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் அடிகளுக்கு மேல் அடிகளை வாங்கினாலும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கும் அந்த மக்களின் அகதி முகாங்களும் இடம் வழங்கிய ஏனைய இஸ்லாமி நாடுகள் என்று விரிவடைந்தது மத்தியதர பிராந்தியத்தின் யுத்த நிலமை.

அது சிரியா லிபியா ஈரான் லெபனான் என்று உறுதியாக அமெரிக்க இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்க இஸ்ரேலை வைத்துக் கொண்டு அந்த பிராந்தியத்தை யுத்த களமாக்கி எண்ணை வழங்களை கொள்ளையடிக்கும் மேற்குல கொள்ளைக் காரத்தனம் இன்றுவரை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. அதில் பலியிடபட்டவை ஈராக்கும் லிபியாவும். வேள்வியிற்கு பல வருடங்களா அழைத்தும் வெட்டி வீழ்த்த முடியாமல் நிமிர்ந்து நிற்பவை சிரியாவும் ஈரானும்.

ஏதும் செய்தாலும் இஸ்ரேல் ஏதும் செய்தாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து போகும் செயற்பாட்டின் வெளிப்பாட்டின் ஒரு உதாரணம் இந்த புகைப்படம் ஒரு பாலஸ்தீன குழந்தையை இஸ்ரேல் இராணுவம் கைது செய்து கைகளை பின்னால் பிணைத்து தூக்கி எறிந்த கோலங்கள். இது ஒன்றல்ல ஆயிரம் ஆயிரம் நிகழ்வுகள் கடந்து 50 வருடங்களாக தொடரும் அவலங்கள்.

ஆனாலும் இந்த பெண்கள் வேலைக்கு பாடசாலைக்கு தங்கள் வீட்டிற்கு செல்லும் போது இவர்களின் ஊருக்குள் புகுந்து வலுக் கட்டாயமாக கைது செய்து தங்களுடன் வரும் ஒருவரை அது ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம் அழைத்துச் செல்ல முற்படுகையில் இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் பயப்படாமல் அவரை விடிவிப்பதற்காக அவ்விடத்திலேயே அதே துப்பாக்கியிற்கு பயமின்றி போராடி மரணிக்கும் அல்லது வெற்றி கண்டு கடக்கும் தற் துணிச்சல்கள் உலகில் மற்ற எந்தப் பெண்களை விட இவர்களுக்கே அதிகம்.

போடுவது பர்த்தா என்ற மொட்டாக்கு பண்பாடு கலாச்சாரம் என்று ஓதுங்கி நிற்காமல் தங்கள் சகபாடிகளை தனித்து கைது செய்வதை அனுமதிக்காது போராடிய துணிசல்களே இவர்களை உலக அரங்கில் இன்றுவரை போராளிகளாக அடையாளப்படுத்தி இருக்கின்றது. கடந்த அமெரிக்க ஆட்சி காலத்தில் பாலஸ்தீனத்தின் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசுலத்தை அமெரிக்கா அங்கிகரிப்பது போன்று அங்கு தனது தூதுவராலயத்தை அமைத்து ஒரு தலைப்பட்ச செயற்பாட்டின் உச்சம் இன்று வரை உலகி;ல் யாரும் கேள்வி கேட்க முடியாத தன்னாட்டம் ஆடும் நாட்டை அரசை இஸ்ரேல் உருவாக்குவதற்கு காரணமாகி இருக்கின்றது.

தொழில் முறையில் வேலை வாய்ப்பில் தமக்கான கூலிகள் பலரை பாலஸ்தீனத்தின் மக்களிடம் பெற வேண்டிய இஸ்ரேலுக்கான தேவையால் அவர்களை தமது நாட்டிற்குள் அனுமதித்தாலும் அங்கேயும் வைத்த கைது செய்தல் கொலை செய்தல் என்ற நடவடிக்கைகள் தொடரும் செயற்பாடுகள் தினமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.இதற்காக குரல் கொடுக்க இவ்வளவு மோசமான செயற்பாட்டை உடைய இஸ்ரேலிலும் அங்குள்ள இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி போராடுகின்றது என்பதே சமத்துவக் கொள்கைளை தூக்கி பிடிக்கும் கட்சியின் சிற்ப்பு அம்சமாகும். ஆனாலும் இதுவரை அவர்கள் பிரதான நீரோட்டத்தில் அதிக பலமுள்ளவராக எழ முடியவில்லை.

ஈழ விடுதலைப் போராட்த்திற்கான தார்மீக ஆதரவை மட்டும் அல்ல போராடுவதற்குரிய பயிற்சியையும் வழங்கியவர்கள் இந்த பாலஸ்தீனப் போராளஜகள். பிஎல்ஓ பியற்சி பெற்றவர் என்ற விசேட தகமையாக பார்க்கப்பட்ட இந்த போராளிகள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் விசேடமாக அடையாளப்படுத்தப்பட்டவர்களாக வலம் வந்தனர் என்பது 1970 பிற்கூற்று 1980 களின் முற்கூற்று ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றை புத்தகங்களை புரட்டிப் படித்தால் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஈழவிடுதலைப் போராளிகளை பாலஸ்தீன விடுதலை அமைப்புகளில் இடதுசாரி சிந்தனையாளர்களே பயிற்றுவித்தார்கள். இந்தப் பயிற்சியையும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இடதுசாரி சிந்தனை செயற்பாட்டு விடுதலை அமைப்புகள் மட்டுமே பெற்றுக் கொண்டன.இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் இந்தியாவின் சகல மாநிலங்களிலும் பாலஸ்தீன மாணவர்கள் அதிகம் கல்வி கற்பதற்குரிய அனுமதி சலுகையை இந்தியா வழங்கியது. கூடவே அவர்களின் பாலஸ்தீன தேசத்தை ஐநா அங்கீகரிக்க முன்பே தூதுவராலயம் அந்தஸ்தில் உள்ள செயற்பாட்டை அனுமதித்த நாடு இந்தியா.

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான களப் பணிகளில் தமிழ் நாட்டில் ஈடுபட்ட போது பாலஸ்தீன விடுதலைப் போராட்டதின் விடயங்களை வெளிப்படுத்தும் கண்காட்சிகளை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடாத்தி வந்தனர் பாலஸ்தீன மாணவரகள். அதில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. இந்த அனுபவம்தான் பத்மநாபா போன்ற தலைவர்கள் அதே மாதிரியான ஈழவிடுதலைப் போராட்டம் சம்மந்தமான கண் காட்சிகளை தமிழ் நாட்டில் நாடாத்துவதற்கு உந்துதலாக இருந்தன.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் ஈழவிடுதலைப் போராட்டம் சம்மந்தமாக கண்காட்சிகள் கொட்டகைகள் அமைத்து நடைபெற்றன. இதன் மூலம் எமது மக்களின் போராட்ட விடயங்களை ஒடுக்கு முறைகளை அதற்கான அரசியல் செயற்பாடுகளைப் பற்றி தெளிவுகளை தமிழக மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வரலாற்றை 1980 களின் முற்கூற்றில் தமிழ் நாட்டில் ஈழவிடுதலை அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் காண முடியும். அன்றைய கால கட்டத்து ஈழவிடுதலைப் போராளிகள் பலரும் இதன் பங்காளிகளாக செயற்பட்டனர்.

இன்றும் மிக மோசமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாகி தலை முறைகள் தாண்டி தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அகதி வாழ்கைதான் நிரந்தரம் என்று வாழும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கான ஆதரவை வழங்குவோம்.

இங்கு வீழ்த்தப்பட்டிருக்கும் குழந்தையை நான் என் மகளாகப் பார்க்கின்றேன் அவள் தமிழ் பேசாவிட்டாலும் வணங்குதலுக்கு அப்பால் தொழுதலில் ஈடுபட்டாலும் பர்த்தா அணியும் முகம் மறைக்கும் பெண்ணாக இருந்தாலும் அவளுக்காக குரல் கொடுக்கும் தார்மீக உரிமையை நான் எடுத்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

மனிதம் எங்கும் வாழ வேண்டும் அது மறுக்கப்படும் போது நாம் குரல் கொடுத்தே ஆக வேண்டும். வாழும் உரிமை சகலருக்கும் சமமானதே. அது பர்த்தா போட்டிருந்தால் என்ன இல்லை என்றால் என்ன.

சீனாவும் இந்தியாவும் இலங்கையும்

(என்.கே. அஷோக்பரன்)

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைக்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location).

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளொன்றுக்கு நடத்தப்படவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்திலிருந்து 30,000 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.சி.​ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள், பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை தனிமையில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பிக்கையில் ​தோற்றார் நேபாளப் பிரதமர்

பாராளுமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் நேபாளப் பிரதமர் கஹட்கா பிரசாத் ஷர்மா ஒளி தோல்வியடைந்துள்ளார். அந்தவகையில், பிரதமர் பதவியில் தொடருவதற்கு தான் போதுமான ஆதரவைக் கொண்டிருக்கின்றார் எனக் காண்ப்பிப்பதற்கான பிரதமர் ஷர்மா ஒளியின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கையின் இராஜதந்திரம்

(திருஞானசம்பந்தன் லலிதகோபன்)

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவின் உலக முதல்வன் நிலைக்கான இன்னோர் அங்கீகாரம்.அமெரிக்கா தலைமையிலான மேற்குசார் கேந்திரம் மெல்ல மெல்ல வலுவிழந்து , சீனா தலைமையில் கிழக்கு சார் உலகமொன்று கட்டியெழுப்பப்படுவதை காணலாம்.விரைவில் சீனாவின் யுவான் நாணயமும் சர்வதேச நாணயமாக அங்கீகாரம் பெறலாம்.
நெடுந்தீவில் சீனா, கிழக்கு முனையத்தில் சீனா என தமிழ் அரசியல்வாதிகள் போல கூப்பாடு போடாமல் இதற்கு பின்னாலுள்ள சீனாவின் உழைப்பினை நாங்கள் நுணுகி பார்க்க வேண்டும்.சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னரான தொண்ணூறுகளின் ஆரம்ப பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட” நவீன சீனா” கருத்தியல் ஓடு போடும் அளவிற்கு வந்துள்ளது.

46 ஆண்டுகளுக்கு முன் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த 12 அம்சத் திட்டம்

(Maniam Shanmugam)

ஈழத்து சமுதாய வளர்ச்சியின் இன்றைய கட்டத்தில் மீறமுடியாத முன் தேவையான தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டி எழுப்புவதில் இலக்கியப் படைப்பாளிகள் பங்களிப்பைச் செலுத்துவது அவசியமாகும்.
உருக்கமான வேண்டுகோள்களாலும் உள்ளத்தைத் தொடும் அறைகூவல்களாலும் மட்டும் ஒரு இலட்சியம், ஒரு கருத்துருவம், இவை எவ்வளவுதான் மகோன்னதமானவையாக இருந்தாலும் பயனுள்ளவையாகிவிட முடியாது. இந்த உன்னத இலட்சியமும் நல்ல கருத்தும் சாதனைப்படுத்தப்படுவதும், வாழ்க்கை எதார்த்தமாக்கப்படுவதும், இவை அர்த்தமுள்ளவையாக பயன்பாடுள்ளவையாக இருக்க வேண்டுமானால் அவசியமாகும்.