விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிஐஜி இராஜினாமா?

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தேர்தல் முடிவை மாற்றுவதை முடிவுக்கு கொண்டு வந்த உச்ச நீதிமன்றம்

நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும் டெக்ஸாஸின், ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஆதரவளிக்கப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது. அந்தவகையில், நாளை மறுதினம் சந்திக்கவுள்ள தேர்தல் பிரதிநிதிகள், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனை உறுதி செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.

கொழும்பை மிரட்டும் கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14,107 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

‘முடக்கப்படும் உடுவில் பிரதேச செயலக பிரிவு’

யாழ். மாவட்ட உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார். உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துறைமுகப் பட்டினமொன்றின் கதை.

(வேதநாயகம் தபேந்திரன்)

”தோணி போனாலும் துறை போகாது ” இது எம் முன்னோரின் அனுபவமொழி .துறைமுகம் ( Harbour ) என்பதையே துறை என்றனர்.
யாழ்குடாநாடு துறைமுகங்கள் பலவற்றைக் கொண்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக இருந்தது ஒரு காலம். சிறியளவிலான துறைமுகங்கள் பல இருந்தன. இன்னமும் பெருமளவில் மீன்பிடி நோக்குடன் இயங்குகின்றன.

குடிசை பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

(பதிவாளர்-எழுத்தாளர் இரா.முருகவேள் கோவ)


சென்னை தீவுத்திடலில் இருந்து மட்டுமல்ல பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான குடிசை பகுதிகளில் இருந்து மக்கள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.

கொவிட் சடலங்கள் தொடர்பில் பிரதமர்

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்றது.

கொரோனா தொற்றின் முழு விவரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்களை சுகாதார அமைச்சின் ​தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவு வெளியிட்டுள்ளது.

நீர் முகாமைத்துவம்

(கணேஸ்)

இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு , சாக்கடல் மற்றும் யாழ் குடாநாடும் நீர் முகாமைத்துவமும் இயற்கையின் விதிகளை மனிதர் மாற்ற முயலும் போது என்ன விபரீதங்கள் நடக்கலாம் என்பதற்கு இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஒரு உதாரணம். சாக்கடலுக்கு ஜோர்டான் நதி நீரை கொண்டுவரும் அதேவேளை அந்த பாலைவன காலநிலை பெருமளவான நீரை ஆவியாக்குவதால் பல மில்லியன் வருடங்களாக அதன் சமநிலையை பேண உதவிசெய்தது.

கடந்த அரை நூற்றாண்டுகளாக சிரியா , ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஜோர்டான் நதியின் நீரை ஏறக்குறைய முழுவதும் எடுத்து விடுவதால் சாக்கடலின் நீர் மட்டம் 30 வருடத்தில் 30 மீட்டர் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடலின் இருபுறமும் sinkholes தோன்றி பல ரிசோர்ட் டுகளையும் , விவசாய நிலங்களையும் இல்லாமல் செய்து விட்டது.

இப்பொழுது இதை சரி செய்வது எப்படி என்று தலையை போட்டு உடைக்கிறார்கள்இதே போன்று யாழ் குடாநாட்டில் நிலாவரை போன்ற சில இடங்களில் sinkholes அவதானிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நாங்கள் உறிஞ்சுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இவை இரண்டுமே பிழையான நீர் முகாமைத்துவத்தால் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.