கொடிய “கொறோனாவை தோற்கடிப்போம்!

முதலில் சீனர்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டோம் !!!

அதன்பிறகு வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களிடம் வஞ்சம் கொண்டோம்!!!

உலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் “எதிரிகள்”

(By Hemavandhana)

தொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து மாஸ் காட்டி வருகிறது கியூபா… மடிந்து விழும் உயிர்களை காத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள் மலைக்க வியக்க பார்த்து வருகின்றனர்!

கரோனாவும் காசர்கோடும்: கேரளாவின் புதிய ஹாட் ஸ்பாட் : 10-ம் வகுப்பு மாணவியால் பள்ளிக்கூடமே பதற்றம்

கேரள மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைப் போலத்தான் வடக்குப்பகுதியான காசர்கோடு மாவட்டமும் பார்க்கப்பட்டு வந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று நோய் வந்தபின் வேறு விதமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.

எங்களுக்கென்ன இதெல்லாம் புதுசா? – துப்புரவுப் பணியாளர்களின் குரல்

(நந்தினி வெள்ளைச்சாமி)

ஒட்டுமொத்த இந்தியாவும் ஊரடங்குக்குள் முடங்கி இன்றுடன் மூன்றாவது நாள். இந்த நாட்களில், நம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமான மனிதர்களின் முக்கியத்துவம் நமக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. முன்பெல்லாம் “இது அவருடைய வேலை, கடமை. அவர்தான் செய்ய வேண்டும்” என மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவோம்.

வைத்தியர் Sivachandran பதிவு…

முதலாவது நோயாளி இறந்துள்ளார். ஏற்கனவே தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்றீடு செய்யப்பட்டவரே கொரோனா தாக்கி இறந்துள்ளார்.

தோழர் நீர்வை பொன்னையன் நினைவாக

(Maniam Shanmugam)
உலகையே கொடிய கொரோனா வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய் சூறையாடி வரும் நிலையில், இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆறு தசாப்தகால தூண்களில் ஒருவரும், முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் மூத்த செயற்பாட்டாளருமான தோழர் நீர்வை பொன்னையன் இன்று (மார்ச் 26, 2020) தனது 90ஆவது வயதில் இலங்கை தலைநகர் கொழும்பில் காலமாகிவிட்டார். அவருடன் எனக்கு 55 வருடகாலமாக இருந்த ஆழமான தோழமையும் நட்பும் காரணமாக அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் எனது மனம் பரிதவிக்கிறது, நெஞ்சு கனக்கிறது. அதற்காகவே இந்தப் பதிவு.

கொரோனா முகமூடிக்குள் கோழைத்தனம்

(கே. சஞ்சயன்)
நாடு முழுவதும் கொரோனா பீதியில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு அளித்து, விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ.

சீனாவின் காலில் விழுந்தார் ட்ரம்ப்!

(Maniam Shanmugam)
கொரனோ வைரசை “சீன வைரஸ்” என்று கூறி சீனாவைச் சீண்டி கோபமடைய வைத்ததுடன்இ அமெரிக்காவில் வாழும் ஆசிய நாட்டவர்களுக்கெதிராக இனத்துவேசத்தையும் தூண்டிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்பொழுது தனது நாட்டில் அதிகரித்து வரும் கொரனோ வைரசைக் கட்டுப்படுத்த உதவும்படி சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உடன் தொலைபேசி மூலம் பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார!.

கொரனா கற்றுத் தரும் பாடம்….. தூய்மைத் தொழிலாளர்களை வாழ்த்தி பாராட்டி நிற்போம் !

(சாகரன்)

இன்றைய கொரனா தொற்று நோய் காலத்தில் அத்தியாவசிய சேவையில் களப்பணியில் இருக்கும் யாவரும் விசேட பாராட்டிற்குரியவர்கள் ஒரு வகையில் தமது உயிரைப் பயணம் வைத்துச் செயற்படும் செயற்பாடுகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.